Thursday, 25 December 2025

📌 அடிக்கடி தலைசுற்றுகிறதா?


 📌 அடிக்கடி தலைசுற்றுகிறதா?

காரணம் ரத்த அழுத்தம் மட்டுமல்ல…
உங்கள் தலை குனிதலும் காரணமாக இருக்கலாம்! 😮
சமீபத்தில் என் கிளினிக்கில்,
பணிமூப்பு வயதை நெருங்கும் ஒரு ஆசிரியை என்னை சந்தித்தார்.
👉 அவரின் முக்கியப் புகார் –
“அடிக்கடி தலைசுற்றல்”
மத்திய வயதுக்கு மேல் தலைசுற்றல் என்றாலே
முதலில் நினைவுக்கு வருவது – உயர் ரத்த அழுத்தம்.
ஆனால் அவருடைய BP… முழுக்க நார்மல்!
🤔 அப்புறம் காரணம் என்ன?
அடுத்ததாக நான் கேட்ட கேள்வி:
“எப்போதெல்லாம் தலைசுற்றல் அதிகமாகிறது?”
👉 “கழுத்தை சில குறிப்பிட்ட பொசிஷன்களில் வைத்தால்
தலைசுற்றல் அதிகமாகிறது” என்றார்.
பரிசோதனையில் கவனித்தது:
✔️ கழுத்தின் பின்புற தசைகள் இறுக்கம்
✔️ சற்று வீக்கம்
✔️ கழுத்து பின்நோக்கி வளைந்த நிலை
📛 அவருக்கு இருந்த பிரச்சனை –
“Text Neck Syndrome”
📱 Text Neck என்றால் என்ன?
தலையை முன்னோக்கி குனிந்து
மொபைல், நோட்புக், லேப்டாப்,
புத்தகங்கள், பரீட்சை தாள்கள்
என்று நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தால்…
👉 கழுத்துத் தண்டுவட எலும்புகள்
👉 ஜவ்வுகள் (Disc)
👉 கழுத்து & தோள்பட்டை தசைகள்
எல்லாம் தொடர்ந்து தேய்மானமும் அழற்சியும் சந்திக்கும்.
இந்த ஆசிரியை,
மாணவர்களின் புத்தகங்களையும்
பரீட்சை தாள்களையும்
நீண்ட நேரம் தலை குனிந்து திருத்தியதால்தான்…
⚠️ கழுத்து தண்டுவட எலும்பு தேய்மானம்
⚠️ ஜவ்வு விலகல்
⚠️ நரம்பும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும்
அழுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவு👇
👉 கழுத்தை சில பொசிஷன்களில் வைத்தாலே
👉 மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து
👉 தலைசுற்றல்
⚖️ ஒரு முக்கியமான உண்மை தெரியுமா?
🧠 நமது தலையின் எடை – 5 கிலோ
✔️ கழுத்தை நேராக வைத்தால்
இந்த 5 கிலோ எடையை
கழுத்து எலும்புகள் சுலபமாகத் தாங்கும்.
❌ ஆனால் தலை குனிந்தால்?
📉 15° குனிதல் → 12.5 கிலோ
📉 30° குனிதல் → 18 கிலோ
📉 45° குனிதல் → 22 கிலோ
📉 60° குனிதல் (பெரும்பாலானோர்!) → 27 கிலோ
😱
5 கிலோ தலையை…
27 கிலோ பாரமாக
நம் கழுத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறோம்!
⏳ இதை வருடக்கணக்கில் தொடர்ந்து செய்தால்?
⚠️ கழுத்து எலும்புகள் தேய்மானம்
⚠️ ஜவ்வு விலகல்
⚠️ நரம்பு அழுத்தம்
⚡ கை/கால் வழியாக மின்சாரம் பாய்வது போல வலி
⚠️ மூளைக்குச் செல்லும் ரத்த நாளம் அழுத்தம்
😵 தலைசுற்றல்
👉 கூடுதலாக
நுரையீரல் கொள்ளளவும் குறையும்!
✅ என்ன செய்ய வேண்டும்?
✔️ 5 கிலோ தலையை
சில கிராம் எடையுள்ள மொபைல் போனுக்குக்
கீழே கொண்டு போகாதீர்கள் ❌
✔️ மொபைல் போனை
கண்ணின் பார்வை நேர்க்கோட்டில் வைத்துப் பாருங்கள் ✅
✔️ அவ்வப்போது Break எடுங்கள்
✔️ கழுத்தை நேராக வைத்துக் கொண்டு
சிறு நடை போட்டால்கூட
தசைகள் ரிலாக்ஸ் ஆகும்
✔️ நாற்காலியில் அமரும்போது
முதுகு முதல் குதம் வரை
நாற்காலியின் பின்புறம் சரியாக தொட வேண்டும்
❌ குதத்தை முன் தள்ளி வைத்து
முதுகை சாய்ப்பது
காலப்போக்கில்
கூன் & கழுத்து பிரச்சனை தரும்
🚨 மிக முக்கிய எச்சரிக்கை
தீவிர Text Neck இருப்பவர்கள்
👉 எலும்பியல் மருத்துவர்
👉 இயன்முறை சிகிச்சை நிபுணர்
ஆலோசனை அவசியம்.
⚠️ பாதுகாப்பற்ற மசாஜ்
⚠️ நெட்டி எடுப்பது
➡️ கழுத்து எலும்பு நொறுங்கி
➡️ நரம்பு பாதிப்பு
➡️ உயிர் அபாயம் கூட ஏற்படலாம்.
🧠 கவனத்தில் கொள்க:
👉 தலைசுற்றலுக்கு
👉 தலை குனிதலும் காரணமாக இருக்கலாம்!

No comments:

Post a Comment

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...