ஒருவர் முழு தீவிரத்துடன் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது?
எதையும் செய்வதற்கு சரியான வழி இதுதான் என்று ஒன்றும் இல்லை.
நீங்கள் நம்பும் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அது எப்படி இருந்தாலும் கூட.
உங்களை யார் குறை சொல்கிறார்களோ, அவர்களிடம் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
குறைகளை நீங்கள் உங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக ஒத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள்.
உங்கள் கடந்த காலத்தை, ஒரு வாழ்க்கை விளையாட்டாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் திறமையை, 100% உழைப்பை கொடுக்கும் முன்னரே சந்தேகப்படாதீர்கள்.
உங்கள் எல்லா பிரச்சனைகளும் ஒரே மாதிரியானது அல்ல.
பலவிதமான ஆர்வம் அல்லது அறிவு சார்ந்த விஷயங்கள் பற்றி அறிய, அதே போன்ற எண்ணம் உள்ளவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கோபத்தை உங்களது உடற்பயிற்சியில் காட்டுங்கள்.
உண்மையான, உங்கள் வெற்றிக்கு பாதை அமைக்கும் நட்பை இழக்க வேண்டிய நிலையை நீங்களே ஏற்படுத்தி கொள்ளவேண்டாம்.
இந்த உலகத்தில் நிறைய எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது. நேர்மறையான கருத்துக்களை யார், எவ்வளவு எழுதினாலும் தகும்.

No comments:
Post a Comment