சுந்தரானந்தர் விவசாய ஜோதிடம்-3
1.நெல் சாமை பயிரிட முகூர்த்தம்:
ஞாயிற்று கிழமையில் நெல் பயிர் செய்யவும்,
திங்கள் வெள்ளிக் கிழமைகளில் சாமைப் பயிரையும்
திருதியை பஞ்சமி தசமி துதியை திதிகளில்
திருவாதிரை ரோகிணி பூசம் சதயம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி நட்சத்திரங்களில்
ரிஷபம் கன்னி கடகம் மீனம் லக்கினங்களில்
நெல்லும் சாமையும் விதைக்க நல்ல நாட்களாம்.
2.கோதுமை, குதிரைவாலி பயிரிட முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
சப்தமி பஞ்சமி திரயோதசி திதிகளில்
அவிட்டம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி திருவாதிரை ரோகிணி பூசம் நட்சத்திரங்களில்
கன்னி மிதுனம் ரிஷபம் தனுசு லக்கினங்களில்
கோதுமையும் குதிரைவாலி பயிரும் விதைக்க நல்ல விளைச்சல் உண்டாம்.
3.வரகு &தினை பயிரிட முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
திரிதியை பஞ்சமி தசமி ஏகாதசி சப்தமி திரயோதசி திதிகளில்
சதயம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ரோகிணி பூசம் திருவோணம் திருவாதிரை அவிட்டம் நட்சத்திரங்களில்
ரிஷபம் கடகம் சிம்மம் மீனம் தனுசு கன்னி மிதுனம் லக்கினங்களில்
வரகு மற்றும் தினை விதைக்க நல்ல நாட்களாம்.
4.சோளம்&கம்பு பயிரிட முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
பஞ்சமி சப்தமி திதிகளில்
திருவோணம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி அவிட்டம் ரோகிணி பூசம் திருவாதிரை சதயம் நட்சத்திரங்களில்
ரிஷபம் கன்னி மீனம் லக்கினங்களில்
சோளமும் கம்பும் விதைக்க நல்ல விளைச்சல் உண்டாம்
5.கேழ்வரகு பயிரிட முகூர்த்தம்:
ஞாயிறு புதன் வியாழன் வெள்ளி திங்கள் கிழமைகளில்
பஞ்சமி சப்தமி திரிதியை ஏகாதசி தசமி திதிகளில்
திருவோணம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ரோகிணி அவிட்டம் பூசம் நட்சத்திரங்களில்
ரிஷபம் கன்னி கடகம் மீனம் லக்கினங்களில்
கேழ்வரகு விதைக்க. நன்மையாம்.
6.எள் விதைக்க முகூர்த்தம்:
எள் விதைக்க சனிக்கிழமை உத்தமமான நாள். மற்றும்
திங்கள் புதன் கிழமைகளிலும்
துதியை பஞ்சமி தசமி திதிகளில்
பூராடம் சதயம் கேட்டை நட்சத்திரங்களில்
ரிஷபம் தனுசு கன்னி மீனம் லக்கினங்களில்
எள் விதைக்க. நல்ல நாட்கள் ஆகும்.
7.நிலக்கடலை பயிரிட முகூர்த்தம் :
புதன் வியாழன் வெள்ளி திங்கள் கிழமைகளில்
திரயோதசி ஏகாதசி திரிதியை பஞ்சமி தசமி துதியை திதிகளில்
ஆயிலியம் பரணி மூலம் கார்த்திகை பூரம் பூராடம் பூரட்டாதி நட்சத்திரங்களில்
ரிஷபம் கன்னி கடகம் மீனம் லக்கினங்களில்
நிலக்கடலை விதைக்க நல்ல நாட்களாம்.
8. கடலை&காணப் பயிர் பயிரிட முகூர்த்தம்:
வியாழன் வெள்ளி ஞாயிறு கிழமைகளில்
திரிதியை ஏகாதசி தசமி திதிகளில்
அசுவினி மிருகசிரீடம் ரேவதி சித்திரை சுவாதி அனுசம் அஸ்தம் நட்சத்திரங்களில்
மிதுனம் கடகம் சிம்மம் லக்கினங்களில்
கடலையுடன் காணப்பயிரை விதைக்க விளைச்சல் பெருகுமாம்.
9.துவரை&மொச்சை பயிரிட முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
சப்தமி பஞ்சமி ஏகாதசி திரயோதசி திதிகளில்
அசுவினி சுவாதி அஸ்தம் புனர்பூசம் ரேவதி சித்திரை நட்சத்திரங்களில்
ரிஷபம் கன்னி கடகம் மீனம் லக்கினங்களில்
துவரை மற்றும் மொச்சை பயிரிட. நன்மையாம்.
10.உளுந்து&பச்சை பயறு பயிரிட முகூர்த்தம்:
வெள்ளி திங்கள் புதன் கிழமைகளில்
பஞ்சமி சப்தமி திரிதியை ஏகாதசி திதிகளில்
ரேவதி மிருகசிரீடம் பூசம் புனர்ப்பூசம் அஸ்தம் நட்சத்திரங்களில்
மிதுனம் கன்னி கடகம் லக்கினங்களில்
உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைக்க பலன் அதிகம் உண்டாகும்.
11.தட்டைப் பயறு&சிறுபயறு விதைக்க முகூர்த்தம் :
திங்கள் புதன் ஞாயிறு கிழமைகளில்
திரிதியை பஞ்சமி தசமி ஏகாதசி சப்தமி திரயோதசி திதிகளில்
அசுவினி மிருகசிரீடம் புனர்பூசம் பூசம் அஸ்தம் நட்சத்திரங்களில்
மிதுனம் சிம்மம் கன்னி ரிஷபம் மீனம் லக்கினங்களில்
தட்டைப்பயிறும் சிறுபயறும் விதைக்க அதிக பலனுண்டாம்.
12.பருத்தி பயிரிட முகூர்த்தம்:
புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு கிழமைகளில்
பஞ்சமி தசமி திரயோதசி திரிதியை சப்தமி திதிகளில்
அசுவினி அஸ்தம் சுவாதி ரேவதி நட்சத்திரங்களில்
ரிஷபம் கடகம் கன்னி மீனம் லக்கினங்களில்
பருத்தி விதைக்க அதிக பலன் கிட்டும்.
No comments:
Post a Comment