Thursday 9 January 2020

முன்னோர்கள் சொன்ன

     முன்னோர்கள் சொன்ன

மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்த கொடுத்துள்ளனர்.
அவற்றை இந்த பகுதில் பார்க்கலாம்….
பூக்களை கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை வாங்க வேண்டாம்.
உதிரி போக்களை வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரிவு என்பதே வராது.
செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை போன்ற நல்ல நாட்களில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடாதீர்கள். பணம் வரத்தில் குறைவு ஏற்படும்.
தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
உங்கள் வீட்டில் பூஜை அறை என்று தனியாக வைத்திருந்தால், அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது கடவுள் சக்தியைக் குறைக்கும்.
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்காமல் பூஜை செய்யக்கூடாது.
பெண்கள் பூசணிக்காய் உடைக்க கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.
வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்த்து வைக்க கூடாது.
வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது.
விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
விரத தினத்தில் பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
ஈர உடையுடனும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்ய கூடாது.
புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு படைத்தல் கூடாது.
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம், செவ்வாய்,வெள்ளி கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை. வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதால் வெண்ணையை உருக்கக் கூடாது என்பார்கள்.
உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும்.
வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

🎈மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!

🎈

மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!
====================================
🎈* காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.
🎈* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
🎈* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
🎈* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
🎈* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
🎈* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
🎈* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.
🎈* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
🎈* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.
🎈* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.
🎈* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
🎈* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
🎈* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
🎈* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.
🎈* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.
🎈* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
🎈* எளிமையாக வாழுங்கள்.
🎈* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
🎈* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
🎈* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.
* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.
🎈* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
🎈* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
🎈* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
🎈* பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
🎈* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
🎈* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
🎈* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
🎈* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.
🎈* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
🎈* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
🎈*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
🎈இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

Saturday 4 January 2020

சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்!


சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்!

சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.
சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன் , ‘கிரகபதம்’ என்னும்பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.
சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாக மும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரதசப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் 7 என பொருள். அமாவாசைக்கு பிறகான 7- வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமானதை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.
அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராடவேண்டும். 7 எருக்கம் இலைகள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.
இந்த 7 எருக்கம் இலைகளையும், கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டைகளில் 2, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், 7எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி விரதத் தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரதசப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரியரதம் வரையவேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.
ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

Friday 3 January 2020

கண்திருஷ்டி

                                                                கண்திருஷ்டி
  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏனோ அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்காமலேயே இருக்கும்.
நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இதற்கான காரணங்கள் பல உள்ளது. முறையாக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று பல காரணங்களை சொன்னாலும் கடைசியாக இப்படியும் இருக்கலாம் என்று சிந்திக்கும் விஷயம் கண் திருஷ்டி!
நம் அம்மாக்கள்,பாட்டிமார்கள் எல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கேட்டிருப்போம். சிலரது #பொறாமை குணம் நம் மீது வெறுப்பாகவும், அர்த்தமில்லாத கோபமாகவும் மாற்றிடும். அதுவும் முன்னேறிக் கொண்டே செல்பவர்கள் திடிரென சறுக்கினால் கண் திருஷ்டி பட்டுருக்கும் அதான் இப்டி நடக்குது என்று சொல்வோம். அப்படி தொடர் தோல்விகள் ஏற்பபட்டால் அல்லது கண் திருஷ்டி பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அவற்றை நீக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி கண்டுபிடிப்பது? :
திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.
சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
தூக்கம் அதிகமாகலாம். சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.
கவனிக்க :
இந்த பிரச்சனை நீங்க திருஷ்டிக்கழிக்க, அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரை விட வயதில் மூத்தவராக இருத்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.
தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.
மலர்கள் :
வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது.
வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.
வாழை :
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய்,அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.
ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.
மீன் தொட்டி :
இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.
உப்பு :
குளிக்கும் போது அந்த நீரில் சிறிது கல்உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி,சோம்பல்,அலர்ஜி எதாவது ஏற்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.
எலுமிச்சை :
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.
வாசலில் ஒரு எலுமிச்சை,ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.
படிகாரம் :
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது உங்களது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம். கடைகளில் படிகாரம் என்று கேட்டாலே தருவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டியவரை கிழக்கு நோக்கி நிற்க வைத்து தலையை இடமிருந்து வலமாகவும்,வலமிருந்து இடமாகவும்,மேலிருந்து கீழாக பாதம் வரை சுற்றிப் போடவேண்டும். பிறகு தெருவில் போட்டு விட்டு திரும்பி பாராமல் வந்து விடவேண்டும்.
வாரம் ஒருமுறையாவது கோவிலுக்கு செல்ல வேண்டும். கர்ப்பகிரகத்தினுள், உள்ள மூலவரிடமிருந்து வரும் கதிர்வீச்சு, நிச்சயம் நம் உடலில் உள்ள திருஷ்டியை
நீக்கி விடும்.

இது தான் வாழ்க்கையா....

                                                  இது தான் வாழ்க்கையா....

 சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .
”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,
“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.
ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.
‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,
’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.
உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.
சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.
கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.
உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.
இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.
அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.
"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை".........

Thursday 2 January 2020

திருமணத்தடையை நீக்கும் விரலி மஞ்சள்

                         திருமணத்தடையை நீக்கும் விரலி மஞ்சள்
பிள்ளைகள் படிப்பை முடித்து விட்டு, நல்ல வேலைக்கு செல்லும் போது கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட அந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து பார்க்கும் போது தான் பெற்றவர்களின் மனது நிம்மதி அடைகிறது. தன் பிள்ளையின் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. குரு பலனும் இருக்கிறது. ஆனால் திருமணம் மட்டும் ஆகவில்லை என்ற பிரச்சனை பல பெற்றோருக்கு உள்ளது. அதுவும் நம் பிள்ளைகளுடன் படித்தவர்கள், நண்பர்கள் இவர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து இருக்கும். ஆனால் தன் பிள்ளைக்கு மட்டும் முடியவில்லையே என்ற ஆதங்கம் அந்த பெற்ற தாயை வாட்டிவதைக்கும். அது அந்தத் தாயின் பொறாமை அல்ல. ஏக்கம். தன் பிள்ளைக்கு திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் இந்த பரிகாரத்தினை தங்களது பிள்ளைகளுக்காக செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
நம் அனைவரும் அறிந்தது தான் விரலி மஞ்சள். இதனை 27 என்ற கணக்கில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விரலிமஞ்சளின் மேலும் குங்குமப் பொட்டினை இட்டுக்கொள்ள வேண்டும். குங்குமப் பொட்டிட்டு வைத்த 27 விரலி மஞ்சளையும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று, அந்த அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து மனதார உங்களது பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்ளவும்.
அந்த விரலி மஞ்சளில் ஒன்றை எடுத்து மஞ்சள் கயிறில் கட்டி அம்மனுக்கு சாத்தி விட வேண்டும். மீதமுள்ள மஞ்சளை சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலத்தில் வைத்து ஒரு ரவிக்கை துணியுடன் தானமாக கொடுக்க வேண்டும். இவற்றை தானமாகப் பெற்றுக் கொண்ட சுமங்கலிப் பெண்ணின் கைகளால் திருமணமாகாத உங்களது பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவர்கள், ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வர வேண்டும். 21 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே உங்களது குழந்தைக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் நிச்சயக்கப்பட்டாலும் இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து முடித்து விடுங்கள். 21 வது வாரம் பரிகாரம் முடியும் போது உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து அன்னதானம் செய்வது சிறப்பு.
உங்களால் முடிந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு, ஒற்றைப்படையில் அதாவது 5,3,11 என்ற கணக்கில் உங்கள் வீட்டிற்கு அழைத்து ஒருவேளை அன்னதானம் செய்து தாம்பூலம் கொடுப்பது, இன்னும் சிறந்த பலனைக் கொடுக்கும். நீங்கள் இந்த பரிகாரங்களை செய்யும் போது மனதார, பிள்ளைக்கு விரைவாக திருமணம் நடந்து விடும் என்ற நேர்மறை ஆற்றலுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைக்கு வரம் பார்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்படுத்துவதனாலும், அம்மனின் ஆசியினாலும் திருமணம் விரைவில் நடக்கும்.
உங்களால் முடிந்தால் உங்கள் வசதிக்கு தகுந்தவாறு ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இந்த புண்ணியமானது உங்கள் பரம்பரைக்கே தொடரும் என்கிறது சாஸ்திரம். மற்றவர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்று நாம் செய்யும் ஒரு சிறு உதவி காலத்திற்கும் நம்மை பின் தொடரும்.


தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...