Wednesday, 31 December 2025

சபரிமலை சுவாமி ஐய்யப்பன் முக்கியத்துவம் வரலாறு


 சபரிமலை சுவாமி ஐய்யப்பன் முக்கியத்துவம் வரலாறு

விரதம் விரத விதிமுறைகள் ஸ்லோகம் போக்குவரத்து இரண்டாம் பாகம் 2
ஹரிஹர சுதனே சாமியே சரணம் ஐயப்பா
சபரிமலை கோயில்:
ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது.
உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
மஞ்சமாதா கோயில்:
மகிஷியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்...’ என வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்...’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.
பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.
திருவாபரணப் பெட்டி:
சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது. பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தாவில் கலந்த ஐயப்பனுக்கு பந்தள மன்னரால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.
திருவாபரணப் பெட்டியில் உள்ள ஆபரணங்கள்:
ஐயப்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்ம சாஸ்தாவை அலங்கரிக்க கீழ்காணும் ஆபரணங்கள் உள்ளது.
திருமுகம் - (சாஸ்தாவின் முக கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை - யானை விக்ரஹம் 2
கடுவாய் - புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு
பூர்ணா - புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்க தட்டு)
நவரத்தின மோதிரம்சரப்பளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது).
பம்பை நதி:
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த பம்பா நதியில் நீராடிய பின்பே சபரிமலை ஏறுகின்றனர். கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது. தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா, மாவட்டங்களின் வழியாக பாய்ந்தோடி வேம்நாட்டு ஏரியில் கலக்கிறது.
சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்!
சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால் தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.
இந்த 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப்படுகிறது. அவையாவன:
1 - ஆம் படி - குளத்தூர் பாலன்
2 - ஆம் படி - ஆரியங்காவு அனந்த ரூபன்
3 - ஆம் படி - எரிமேலி ஏழைப் பங்காளன்
4 - ஆம் படி - ஐந்துமலைத் தேவன்
5 - ஆம் படி - ஐங்கரன் சோதரன்
6 - ஆம் படி - கலியுக வரதன்
7 - ஆம் படி - கருணாகரத் தேவன்
8 - ஆம் படி - சத்யப்பரிபாலகன்
9 - ஆம் படி - சற்குண சீலன்
10 - ஆம் படி - சபரிமலை வாசன்
11 - ஆம் படி - வீரமணி கண்டன்
12 - ஆம் படி - விண்ணவர் தேவன்
13 - ஆம் படி - மோகினி பாலன்
14 - ஆம் படி - சாந்த சுவரூபன்
15 - ஆம் படி - சற்குண நாதன்
16 - ஆம் படி - நற்குணக் கொழுந்தன்
17 - ஆம் படி - உள்ளத்தமர்வோன்
18 - ஆம் படி - ஸ்ரீ ஐயப்பன்
இந்த 18 படிகளுக்கான தத்துவங்களைப் பார்ப்போம்.
முதல் ஐந்துபடிகள் மெய், வாய், கண், மூக்
கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்; 6 முதல் 13 படிகள்வரை அஷ்டமா சித்திகளையும்; 14, 15, 16 படிகள் மூன்று வித குண ங்களையும்; 17-ஆவது படி ஞானத்தையும்; 18-ஆவது படி அஞ்ஞானத்தையும் குறிக்கின்ற வகையில் அமைந்துள்ளதாக ஐதீகம்.
சபரிமலை கோயிலில் அமைந்துள்ள 18 படிகளும்
தெய்வாம்சம் நிறைந்தவை:
ஒன்றாம் படியில் - சூரியன்
இரண்டாம் படியில் - சிவன்
மூன்றாம் படியில் - சந்திரன்
நான்காம் படியில் - பராசக்தி
ஐந்தாம் படியில் - செவ்வாய்
ஆறாம் படியில் - ஆறுமுகப் பெருமான்
ஏழாம் படியில் - புதன்
எட்டாம் படியில் - மகாவிஷ்ணு
ஒன்பதாம் படியில் - குரு பகவான்
பத்தாம் படியில் - பிரம்மா
பதினோறாம் படியில் - சுக்கிரன்
பன்னிரண்டாம் படியில் - திருவரங்கன்
பதின்மூன்றாம் படியில் - சனீஸ்வரன்
பதினான்காம் படியில் - எமதர்மன்
பதினைந்தாம் படியில் - ராகு
பதினாறாம் படியில் - காளி
பதினேழாம் படியில் - கேது
பதினெட்டாம் படியில் - விநாயகர்
ஐயப்பன் சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18 அவை; வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம், கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை இந்த 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பதும் ஒரு ஐதீகம். சபரிசாஸ்தா ஐயப்பனைக் காண கடும் விரதமிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் புனிதம் நிறைந்த - புண்ணியம் அருள்கின்ற இந்த 18 படிகளில் ஏறிச்சென்று அகிலம் காத்திடும் அய்யப்பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு குலதெய்வ வழிபாடு ஆகும்.
ஐயப்பனின் வேறு பெயர்கள்
மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன்
ஹரிஹரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லக்ஷ்மண பிராணதத்தா
பந்தள ராஜன்
பந்தளவாசன்
பம்பாவாசன்
சபரிவாசன்
சபரீசன்
சபரீஷ்வரன்
சபரி கிரீசன்
சாஸ்தா
வீரமணிகண்டன்
அரியரச்செல்வன்
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.
ஐயப்ப வழிபாடு
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனைக் காென்றவன் என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.
ஆறு அய்யப்பன் கோயில்கள்
அய்யப்பனுக்கு கேரளத்தில் ஆறு கோவில்கள் உள்ளன
ஆரியங்காவு
ஆரியங்காவு ஐயப்பன் கோவில்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் சௌராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.
அச்சன்கோவில்
அச்சன்கோவில் தர்மசாஸ்தா
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.
குளத்துப்புழா
குளத்துப்புழா ஐயப்பன் கோவில்
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.
எருமேலி
இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலி கேரளமாநிலத்தில் உள்ளது.
பந்தளம்
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.
சபரிமலை
சபரிமலை அய்யப்பன் கோயில்
கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.
சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நெய் தேங்காய்:
ஐயப்பா சாமி புலிப்பால் கொண்டு வர சென்ற போது தேங்காய் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. மூன்று கண்களுடைய தேங்காய் முக்கண் உடைய சிவபெருமானைக் குறிக்கும். காட்டு வழியில் வனவிலங்குகளால் ஏற்படும் தீமைகளிலிருந்து இந்த நெய் நிரம்பிய தேங்காய் பக்தர்களைக் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. தேங்காயின் கண் பகுதி மனிதனின் ஆன்மீக அறிவையும், நெய்யானது ஆத்மாவையும், தேங்காய் மனித உடலையும் குறிக்கும்.
தேங்காய் பசு நெய் கொண்டு ஒரு கண் வழியாக நிரப்பப்பட்டு அதனை அடைப்பான் கொண்டு நன்கு மூடிவிடுவர். ஒருவர் கடுமையான விரதமிருந்து இருமுடிகட்டி நெய் நிரம்பிய தேங்காயை தலையில் சுமந்து சென்று ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
மகர ஜோதி தரிசனம்:
ஐயப்பன் தனது ராஜவம்சத்துப் பெற்றோருக்காக ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று உத்திர நட்சத்திரத்தில் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். இதற்காக இன்றைக்கும் ராஜவம்சத்து வாரிசுகள் தங்கம், வைரம் உள்ளிட்டபல்வேறு ஆபரணங்களை ஐயப்பனுக்கு சாத்தி ஜோதியை தரிசிப்பது வழக்கம்.
இதற்காக ஆபரணப் பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பாம்பாடிதலம் என்ற இடத்தில் ஓய்வு எடுத்து மீண்டும் பெரியவாரை வட்டம், நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் சென்றடைகிறது.
ஐயப்பனுக்கு ஆண்டு முழுவதும் மேல்சாந்திகள் வழிபாடுகளை மேற்கொண்டாலும் ஜன.15 மகர பூஜையில் இருந்து 20-ம் தேதி வரை ஐயப்பனுக்கு ராஜவம்சத்து வாரிசுகளே பூஜைசெய்வர். இதற்காக ராஜவம்சத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆபரணப் பெட்டிகளுடன் வருகின்றனர்.
புல்மேடு பாதையில் இருந்து பார்த்தால் மகரஜோதி தெளிவாகத் தெரியும் .மகர விளக்குப் பூஜை 20-ம்தேதி இரவு முடிந்ததும் மறுநாள் காலை ராஜவம்சத்து வாரிசுகள் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட்டுச் செல்வர்.
சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்
1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
மஹா ஸா ஸ்தாமாலா மந்த்ரம்
1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக
த்யானம்
1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன் ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம் பூதநாயகா
2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர் ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண புஷ்களா நாத த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்
த்யானம்
ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி
ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம் பஞ்ச ரத்தினம்
1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்
2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்
3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்
ஆரத்தி மங்களம்
1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்
3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்
தேவர்கள் ஸ்துதி
மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும் ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம் மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம் மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும் அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும் துதிப்பது மிக விசேஷமாகும்.
தேவர்கள் வேண்டுதல்
1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம
2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ நம
3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ நம
4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம
5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம
6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி ஜெகத்பதே
7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக ஜீவஸ்வரூபக
8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா சர்வநாயகா
தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க வினாசன
விருத்தம்
1. ஐயனே கருணாக ரானந்த மூர்த்தி
அசில லோகாதி நாதா
2. மெய்யாய் எழுந்தருளி விளையாடி வர
மருள வேண்டும் மிது சமயம் ஐயா
3. கையினால் அடியவர்கள் பூஜா நைவேத்தியமும்
நெய்யினால் விளக் கேற்றியும்
4. ஐயா நீர் இங்கு வந்து எழுந்தருள்வீர்
என்று அனைவரும் காத்திருக்கோம்
5. கருணாகரா ஓங்கார பொருளான தெய்வமே
ஹரிச் சந்திர சூடா பாலா
6. பெரிதான காட்டினில் புகுந்து வந்துன்
மனம் தெரிவிக்க ஆசைக் கொண்டோம்
7. கோர மிருக மேவிவளர் பாமாலை ஊடு
வழி தீரமாய் ஏறி வந்தோம்
8. காருண்யனே எங்கள் கண்ணெதிரில்
உந்தனை காணாது மனம் வாடுகிறோம்
9. ஐயனே உன் வசதி ஆரியங்காவிலோ
அச்சனார் கோவில் தன்னிலோ
10. தென் குளத்தூரிலோ தேவர்கள் மலர்
சொரியும் முத்தையனார் கோவில் தன்னிலோ
11. விண்ணவர்கள் போற்றும் பொன்னம்பலம்
தன்னிலோ சபரி ஹிரி வரை தன்னிலோ
12. எங்கெங் கிருக்கினும் எழியோர்கள் மீது
கிருபை செய்தருள வேண்டுமையா
13. மலைநசட்டில் வளமோங்கு மாமலையின்
வாசனை மதனே சதகோடி வடிவே
14. அந்த மதியற்ற மகிக்ஷி முகி வதை
காரணார்த்தமாய் அவதாரமான பொருளே
15. பாண்டி முதலான பல தேச வாசிகளெல்லாம்
பக்தி பூண்டிங்கு வந்தோம்
16. பரம காருண்யனே கருணை மிக காட்டியே
பரிவுடன் பவனி வருவாய்
17. வந்தால் ஒழித்திடும் என் சந்தாபமும்
எங்கள் சகல வித துரித மெல்லாம்
18. சித்திப் பறக்கடித்திடும் உனது பாத சார
சீரகத்தின் பொடியதை தந்தருள்வீர்
19. அந்தி பகல் உந்தனது நாமமே சிந்தனைகள்
செய்ய அருள் வாய்
20. பொய்யா தவமுனிவர் போற்றும் பொற்பாதனே
பூர்ணா புஷ்களை நாதனே
21. பொன்னம்பலத்தில் வளர் பூர்ணாச் சந்திர
பிரபா சோபி தானந்த திவ்யா
22. தவயோக சித்தாந்த சபரீ பீடாஸ்ரம
ஸ்தான மெய் ஞான குருவே
சபரிமலை போக்குவரத்து தகவல்கள்
போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்
முகவரி:
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்,
சபரிமலை 689713
ரானி தாலுக்கா
பத்தனம் திட்டா மாவட்டம்,
கேரளா. போன்: 04735 -202048, 0471-2 316963, 04735 202026, 04735 202038, 04735 202048
தரிசன நேரம்: காலை 4 மணியில் இருந்து, மதியம் 1.30 வரை, மாலை 4 முதல் இரவு 11 மணி வரையில் திறந்திருக்கும்.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் அடர்ந்த காட்டு வழியாக ஆபத்தான பயணம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. எனவே மண்டலபூஜை-மகரவிளக்கு நடைபெறும் சமயத்தில் , மன்னரகுளஞ்சி-சாலக்கயம் சாலை வழியாக 5000 பக்தர்களே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் இப்போது சபரிமலைக்கு செல்ல எருமேலி, வண்டிபெரியார், சாலக்கயம் ஆகிய மூன்று பாதைகளும் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 கோடிக்கும் மேலான பக்தர்கள் இந்த மூன்று வழிகளில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
1. எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.
2. குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம்.
3.சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து
1. செங்கோட்டை-புனலூர்-பத்தனம்திட்டா வழி - 170 கி.மீ.
2. குமுளி-வண்டிபெரியார்-எருமேலி-பிலாப்பள்ளி - 180 கி.மீ.
சபரிமலைக்கு கோட்டயம் மற்றும் செங்கனூரிலிருந்து புனலூர் வரை ரயிலிலும், புனலூரிலிருந்து பம்பைக்கு பஸ்ஸிலும் செல்லலாம்.
சபரிமலைக்கு திருவனந்தபுரம், கொச்சி, நெடும்பாசேரி வரை விமானத்திலும், அங்கிருந்து பம்பைக்கு பஸ் மற்றும் கார் மூலமாக செல்லலாம்.
கோவை, பழநி, தென்காசி போன்ற இடங்களிலிருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பம்பை வரைக்கும் செல்லும். தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வரும் பஸ்கள் நிலக்கல் வரை மட்டும் அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல முடியும்.
புறப்படும் இடம் சேரும் இடம் தூரம்
எருமேலி பம்பா 56 கி.மீ.
கோட்டயம் எருமேலி 72 கி.மீ.
கோட்டயம் பம்பா 128 கி.மீ.
செங்கனூர் பம்பா 93 கி.மீ.
திருவல்லா பம்பா 99 கி.மீ.
எர்ணாகுளம் பம்பா (வழி)கோட்டயம் 200 கி.மீ.
ஆலப்புழா பம்பா 137 கி.மீ.
புனலூர் பம்பா 105 கி.மீ.
பத்தனம்திட்டா பம்பா 69 கி.மீ.
பந்தளம் பம்பா 84 கி.மீ.
திருவனந்தபுரம் பம்பா 175 கி.மீ.
எர்ணாகுளம் எருமேலி (வழி)பாளை, பொன்குன்னம் 175கி.மீ.
சென்னையிலிருந்து
1. சென்னையிலிருந்து சபரிமலை தூரம் 780 கி.மீ
2. சென்னையிலிருந்து பம்பைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சிறப்பு அரசு பஸ் விடப்படுகிறது.(தேனி, கம்பம் வழியாக)
3. சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கும், சென்னை - திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணிக்கு புறப்படுகிறது. கோட்டயத்தில் இறங்க வேண்டும்.
பாண்டிச்சேரியிலிருந்து
பாண்டிச்சேரியிலிருந்து சபரிமலைக்கு 3 வழிகளில் செல்லலாம்.
1. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - மதுரை- குற்றாலம் - புனலூர் - பம்பை 650 கி.மீ
2. பாண்டி - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல்- குமுளி - எருமேலி- பம்பை 625 கி.மீ
3. பாண்டி - விழுப்புரம் - சேலம் - கோயம்புத்தூர் - குருவாயூர் - கோட்டயம் - எருமேலி-பம்பை 750 கி.மீ
ரயில் வழி....
கடலூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரசில் சென்று அங்கிருந்து சபரிமலைக்கு செல்லலாம்.
வேலூரிலிருந்து
1. வேலூர் - ஆம்பூர்-வாணியம்பாடி - திருப்பத்தூர் - தர்மபுரி - பவானி - மேட்டூர் - பெருந்துறை - கோவை - பாலக்காடு - குருவாயூர் - சோட்டானிக்கரை - வைக்கம் - கோட்டயம் - எருமேலி - பம்பை - சபரிமலை 830 கி.மீ
2. வேலூர் - திருவண்ணாமலை - திருச்சி - மதுரை - குற்றாலம் - செங்கோட்டை- கோட்டயம் - வடசேரிக்கரா - பம்பை - சபரிமலை 760 கி.மீ
3. வேலூர் - திருவண்ணாமலை - திருக்கோயிலூர் - மடப்பட்டு - உளுந்தூர்பேட்டை - திருச்சி - திண்டுக்கல் - தேனி - கம்பம் - எருமேலி - பம்பை - சபரிமலை 689 கி.மீ
ஈரோட்டிலிருந்து
ரயிலில் செல்பவர்கள், ஈரோடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
ஈரோட்டிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லை. சேலம் - குருவாயூர், சேலம் - எர்ணாகுளம் அரசு விரைவு பஸ்கள் ஈரோடு வழியாக செல்கின்றன. குருவாயூர் அல்லது எர்ணாகுளம் சென்று அங்கிருந்து சபரிமலை செல்ல வேண்டும்.
இந்த பஸ்களின் விபரம்:
சேலம் - குருவாயூர் வழி: ஈரோடு, கோவை, பாலக்காடு, திருசசூர். (ஈரோட்டிலிருந்து எர்ணாகுளம் தூரம்: சுமார் 310 கி.மீ.)
கோவையிலிருந்து
ரயிலில் செல்பவர்கள், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் சென்று, செங்கனூர் இறங்கி, அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
கோவையிலிருந்து 3 வழிகளில் சபரிமலை செல்லலாம்.
1. கோவை - திருச்சூர் - பெரும்பாவூர் - தொடுபுழா - ஈராட்டுபேட்டா - காஞ்சிராபள்ளி - எருமேலி - சாலக்கயம் - சபரிமலை 330 கி.மீ
2. கோவை - திருச்சூர் - எர்ணாகுளம் - அரூர் - சேர்த்தலை - ஆலப்புழை - பத்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 380 கி.மீ
3. கோவை - பாலக்காடு - எர்ணாகுளம் - கோட்டயம் - திருவல்லா - பந்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 360 கி.மீ
திருச்சியிலிருந்து
திருச்சியிலிருந்து மணப்பாறை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி, கம்பம், குமுளி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
1. திருச்சி - குமுளி பயண தூரம் 241 கி.மீ
2. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், பாம்பனாறு, முண்டக்கயம், காஞ்சிரம்பள்ளி, எருமேலி வழியாக பம்பை வரை கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குமுளி - பம்பா பயண தூரம்: சுமார் 115 கி.மீ
திருநெல்வேலியிலிருந்து
ரயிலில் செல்பவர்கள், சென்னையிலிருந்து திருநெல்வேலி வழியாக குருவாயூர் எக்ஸ்பிரசில் செங்கனூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் சபரிமலை செல்லலாம். திருநெல்வேலியிலிருந்து பஸ்சில் 2 வழிகளில் சபரிமலை செல்லலாம்
1. திருநெல்வேலி - செங்கோட்டை - அச்சங்கோவில் - ஆரியங்காவு- புனலூர் - பத்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 228 கி.மீ
2, திருநெல்வேலி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் - கொட்டாரக்கரை-சாலக்கயம் - பம்பை - சபரிமலை 329 கி.மீ
மதுரையிலிருந்து....
மதுரையிலிருந்து பஸ்சில் எருமேலியை அடையும் வழிகள்.
1. மதுரை - நாகர்கோவில் - திருவனந்தபுரம் - - கொட்டாரக்கரா - பந்தளம் - எருமேலி 474 கி.மீ
2. மதுரை - குற்றாலம் - செங்கோட்டை - அச்சங்கோவில் - ஆரியங்காவு - குளத்துப்புழை-எருமேலி 385 கி.மீ
3. மதுரை - கம்பம் - குமுளி - வண்டிப்பெரியார் - காஞ்சிரப்பள்ளி - எருமேலி 253 கி.மீ
எருமேலியிலிருந்து பம்பைக்கு ரான்னிவழி - 80 கி.மீ
எருமேலியிலிருந்து காட்டுவழி (பெரியபாதை) காளகட்டி, அழுதா, கரிமலை, பம்பை, சபரிமலை வரை 56 கி.மீ
5. பம்மை - சபரிமலை 5 கி.மீ
6. மதுரையிலிருந்து பம்பைக்கு நாள்தோறும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் செல்கிறது.
ரயில் வழி....
1. மதுரையிலிருந்து சபரிமலை சென்றடைய நேரடி ரயில் வசதி இல்லை. இரவு 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் .அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.
2. மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 6.30 மணி, 11 மணி, மாலை 5 மணிக்கு பாசஞ்சர் ரயில் உள்ளது. அந்த ரயிலில் செங்கோட்டை சென்று அங்கிருந்து சபரிமøக்கு செல்லலாம்.
கேரள பஸ் சர்வீஸ்
சபரிமலை சீசன் ஆரம்பமானதும் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, பந்தளம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், எருமேலி போன்ற இடங்களிலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும். வழக்கமான கட்டணத்திலிருந்து 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
சபரிமலைக்கு முக்கிய வழிகளும் தூரமும்
கோட்டயம் வழி
1. கோட்டயம் - கோழஞ்சேரி - ரான்னி - பம்பை - 119 கி.மீ
2. கோட்டயம் - கொடுங்கூர் - மணிமல - பம்பை - 105 கி.மீ
3. கோட்டயம் - மணிமலை - அத்திக்கயம் - பம்பை - 103 கி.மீ
4. கோட்டயம் - பொன்குன்னம் - எருமேலி - பிலாப்பள்ளி - பம்பை - 90 கி.மீ
எருமேலி வழி
5. எருமேலி - ரான்னி - வடசேரிக்கரை - பம்பை - 76 கி.மீ
6. எருமேலி - கண்ணமலை - பம்பை - 56 கி.மீ
7. எருமேலி - அத்திக்கயம் - பெருநாடு - பம்பை - 64 கி.மீ
8. எருமேலி - செத்தோங்கரை - அத்திக்கயம் - பம்பை - 69 கி.மீ
பந்தளம் வழி
9.பந்தளம்- பத்தனம்திட்டா - வடசேரிக்கரை - பம்பை - 84 கி.மீ
செங்கோட்டை வழி:
10. செங்கோட்டை - புணலூர் - பத்தனம்திட்டா - பம்பை - 170 கி.மீ
11. குமுளி - வண்டி பெரியாறு - எருமேலி - பம்பை - 180 கி.மீ
12. நாகர்கோவில் - திருவனந்தபுரம் - பத்தனம்திட்டா - வடசேரிக்கரை - பம்பை - 225 கி.மீ.
ஹரிஹர சுதனே சாமியே சரணம் ஐயப்பா

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...