Saturday 30 March 2019

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க

 நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.
பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்

நெருப்பில் முடி பொசுங்க கூடாது

                                                   

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

                                                 நெருப்பில் முடி பொசுங்க
                                                                   கூடாது
 இன்றளவும் கிராமப்புரங்களில்நெருப்பில் முடி பொசுங்க கூடாது எனக்கூறுவார்கள்.
அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ, தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள் எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும் எனபார்கள்.
இதன் ரகசியம்தான் என்ன?
கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது .
அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது.
ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி .
ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும்.
இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல .
அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள்.
இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும்.
முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.
தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும்.
அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது.
இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது .
இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருகிறதை ஆய்வு மூலம் பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும் .
அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும் .
அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில் மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள்.
அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும் .
அதை பொருத்தி இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள்.
அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்திருந்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள்.
அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே உயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது .
அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை ஆட்கொண்டது .
அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.
இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள்.
அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.
அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள்.
இதுதான் வித்தியாசம் .
ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும்.
காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.
சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள்.
கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள்.
இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே .
நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள்.
இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை .
இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும் .
நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும்.அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது.
எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும் .
அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே இதை நன்கு உணர்ந்திருந்தனர்.
அதனால் கோழியை,பன்றியை இறைச்சியுண்பதற்காக கொன்று அதன் ரோமத்தை முதலில் தீயில் பொசுக்குவார்கள்.
பொசுக்கிய பின்னர் அந்த தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூள் அதன் உடல் முழுக்க பூசுவார்கள்.
பிற்காலத்தில் வந்தவர்கள் தீய்ச்சல் வாடை போவதற்காகவும்,உணவின் ருசிக்காகவும்மஞ்சள் பூசுவதாக கருதினார்கள்.உண்மையில் அவ்வாறுஇல்லை.
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம் படிந்துஇருக்கும்.
மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்.
( சிக்கு வாசனை என்பார்கள்)
அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,
ஆனால் நெருப்பில் போடக்கூடாது,
மகா தரித்திரம் பிடிக்கும் .
நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது .
போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு .
அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும்

Friday 29 March 2019

குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்


                               

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

                            குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம் 


ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி ,
தேடிய ஞாயிறு ,செவ்வாய் , சனி தனில் ,
கூடிய ரோமம் குறைத்திட வல்லிரேல் ,
மாடு , மக்கள் , மைந்தர் , மாள்வீரே ---
-
பாடல் விளக்கம் :
&&&&&&&&&&&&&&&&&&
ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி மாதங்களில் , ஞாயிறு , சனி , செவ்வாய் , கிழமைகளில் , குழந்தைக்கு முடி எடுத்தால் , மாடும் , மக்களும் ,பிள்ளைகளும் இறந்து விடுவார்கள் என்பதாம் --
பொதுவாகவே இந்த கருத்தை தலைச்சன் குழந்தைக்கு , முதல் முடி எடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -- 2 வது 3 வது குழந்தைக்கும் முதல் முடி எடுக்க இந்த விதிகளையும் பயன் படுத்துங்கள் -
2 , 3 , வது மொட்டை அடிக்கும்போது இந்த விதிகள் தேவை இல்லை—பொதுவாகவே ஞாயிறு கிழமைகளில் முடி எடுக்க , சுப காரியங்கள் செய்ய தடைகள் உண்டு --- ஆனால் அனுஸ்டானத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது -- ஆகவே தான் ஞாயிறு கிழமைகளில் சுப முகூர்த்தம் பஞ்சாங்களில் குறிக்கப் பட்டுள்ளது -
-
இசை ஞானி இளையராஜா அவர்கள் தமிழ் நாட்டில் தற்போது உயிருடன் உள்ள சித்தர்களை பௌர்ணமியில் நேரில் சந்தித்து ஆசி பெற்று , பௌர்ணமியில் மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் -- இதன் பிறகு தான் அவர் சிம்பொனி இசைத்து உலகப்புகழ் பெற்றார்கள் –
-
எனக்கு தெரிய சில சித்தர்கள் , அம்மாவசை அல்லது பௌர்ணமியில் முக சவரம் அல்லது மொட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறனர் –
-
மருத்துவர்கள் அல்லது நாவிதர்கள் நமது ஊர்களில் சனிக்கிழமைகளில் வார விடுமுறையும் , அம்மாவாசைகளில் , மாத விடுமுறைகளும் விடப்படுகின்றனர் – இது ஊறுக்கு ஊர் விடுமுறைகள் மாறுபடும் –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாள் மாதம் என்பது ஆகும் -- ஆதி காலம் தொட்டே புரட்டாசி சனிக்கிழமைகளில் பழைய சமையல் மண் பாண்டம எடுத்து விட்டு , புதிய சமையல் மண் பாண்டம் வாங்கி ,சமையல் செய்து , இறைவனுக்கு புரட்டாசி 5 சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளுகை , படைத்தது , துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டு , பெருமாள் கோவிலுக்கு சென்று திருக்கோடி தீபம் ஏற்றி , அன்னதானம் செய்யும் வழக்கம் இன்றும்கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது – அன்று மொட்டை போடுவதும் வழக்கத்தில் உள்ளது – 5 வது கடைசி சனிக்கிழமைகளில் சொந்தம் , பந்தம் , உற்றார் , உறவினர்களையும் , அழைத்து அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளது –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது திருப்பதி பெருமாள் மாதம் ஆகும் – சுமார் 1௦௦ வருடங்களுக்கு முன் புரட்டாசி 1 ஆம் தேதி நடைபயணம் செய்து 1௦ நாட்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்து மொட்டை போட்டு , பின் நடை பாதையாக வீடு திரும்பி வந்தனர் , 1 மாதம் முழுவதும் பெருமாள் மாதம் ஆக வழிபட்டு வந்தனர் – ஆன்னால் தற்போது கார் , ரயில் , பஸ் , ஏரோப்ப்லன் , மூலம் திருப்பதி செல்லுகின்றனர் – ஆனாலும் இன்றும்கூட நடை பாதையாக திருப்பதி சென்று தரிசனம் செய்து , பின் பஸ்ஸில் ஏறி திரும்பி ஊருக்கு வருகின்றனர் --

Monday 11 March 2019

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!


ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!



உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல்ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.




அந்த ஆறு முக்கிய பகுதிகள் :

1) முன் மடல் (frontal lobe)



2) லிம்பிக் அமைப்பு (limbic system)
                                        


3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate)





4) அமிக்தலா (amygdale)

                              


5) தாலமஸ்(thalamus)
                                    
                                      

                                       
6) சுவர் மடல்(parietal lobe)





தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்துபுத்தயூதகிறிஸ்தவஇஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!

(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடுகடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும்மதிப்பையும்அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.

(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.

(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்திசமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது.
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமாமதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன்தகவல் தொடர்புத் திறன்படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம்தியானம்பிரார்த்தனைவழிபாடுஇதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள்.
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும்,
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல்பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்

இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!

Saturday 9 March 2019

*சாப்பாட்டில் முடி இருந்தால் சாப்பிடலாமா?*

                                  *சாப்பாட்டில் முடி இருந்தால் சாப்பிடலாமா?*

நம் உறவினர் வீட்டிற்கு சென்றால் அங்கு விருந்து உபசரிப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் பரிமாறும் உணவில் முடி இருந்தால் நம் உறவு நீடிக்கும் என்று சொல்வார்கள்.
ஆதலால் நாமும் சிரித்த முகத்தோடு உணவு உட்கொள்வோம்.
ஆனால் அவை உண்மையா? என்றால் நிச்சயம் இல்லை.
நாம் உட்கொள்ளும் உணவில் முடி இருந்தால் அவை சுத்தமில்லாத உணவாகும். சாப்பிடுபவர்க்கு தரித்திரம் வந்து சேரும்.
மேலும் அதை சாப்பிடவும் கூடாது.
அப்படி சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படும்.
இறைவனுக்கு காட்டும் நைவேத்யமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதிலும் முடி இருந்தால் நம் குருக்கள் அந்த உணவினை சுவாமிக்கு காட்டமாட்டார்கள்.
மேலும் மறுபடியும் உணவினை தயார் செய்து சுவாமிக்கு நைவேத்யம் காட்டுவார்கள்.
ஆதலால் தான் நமது குருக்கள் அந்நிய மக்களின் உணவினை ஏற்பதில்லை.
மடப்பள்ளியிலே வைத்து சுத்தமாக சமைக்கிறார்கள்.
மேலும் ஒரு சில பிராமணர் சமுதாயத்தில் உணவு உட்கொள்ளும் பொழுது ஓர் சிறிய முடி கண்ணில் தென்பட்டாலும் கூட அந்த உணவினை உட்கொள்ளும் அன்பர்கள் சாப்பிடுவதில்லை.. இலையை
மடக்கிவிடுகின்றனர்.
யாராவது அன்பர் கேட்டால் அவர் மனது வருத்தம் அடையாமல் இருப்பதற்கு , திடீரென்று வயிறு உபாதை ஏற்படுகிறது என்று சொல்லி அவ்வுணவினை சாப்பிடுவதில்லை.
*ஏன் முடி இருந்தால் சாப்பிடக்கூடாது?*
நீங்கள் பரிமாறும் உணவில் அறிந்தோ அறியாமலோ உணவில் முடி இருந்தால் உணவை உட்கொள்பவர் தரித்தரத்தால் அவதிப்படுவர்.
துன்பம் வந்து சேரும்.
உணவை இடும் எஜமானருக்கு பலன் தராது.
நீங்கள் ஹோட்டல் கடைகளில் இருந்து வரவைத்தாலும் சரி,
விழா காலங்களில் அமுது செய்வித்தாலும் சரி அவை பொருந்தும்.
எந்த ஒரு இடத்தில் உணவு பரிமாறும் பொழுதும் , சமைக்கும் பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் அன்னலட்சுமி என்கிற தான்ய லட்சுமி நமக்கு வாசம் செய்வாள்.
ஆதலால் இனி நீங்கள் ஒரு இல்லத்திற்கு சென்று உணவு உட்கொள்ளும் பொழுது முடி இருந்தால் அதை அப்படியே இலையை மூடிவிடவும். அவ்வில்லத்தில் சாப்பிடுவது அன்று ஒருநாள் மட்டும் தவிர்த்து விடவும்.
குறிப்பு :
உணவு உட்கொள்பவர் உட்கொள்ளும் பொழுது உணவில் முடி இருந்தால் இலையை (உணவை) மூடிவிடவும். சாப்பிடக்கூடாது. மேலும் சாப்பிடும் பட்சத்தில் தரித்திரம் உண்டாகும்.
உணவு உட்கொள்ளும் அன்பர்களுக்கு முடி இருப்பினும் அவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
இவை இல்லத்திற்கும் பொருந்தும்

நீங்கள் ஒரு காந்தம்!

                                                                   நீங்கள் ஒரு காந்தம்!



உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்..

முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை

                                           முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை
 நம் முன்னோர்கள் மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது.

பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்த நூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.]

தனி மனிதன் ஒரு நாளை நான்கு வகைளில் தான் செலவு செய்யலாம்.

1. இன்பம். 2. துன்பம. 3. அமைதி 4. பேரின்பம்

இந்த உலகில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலும் அனுபவித்தது, இந்த 4 நிலைகளில் முதல் இரண்டு நிலைகளை மட்டும்தான்.

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மனிதன் அனுபவித்துக் கொண்டு இருப்பது இன்பமோ அல்லது துன்பமோ என்ற நிலைகளைத்தான்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்களில் பலர், வாழ்வின் பெரும்பகுதி அமைதி மற்றும் பேரின்ப நிலையில் தன் வாழ்நாளைக் கழித்தனர்.

நம் முன்னோர்கள் கிராமங்களில் வாழ்ந்து, விவசாயம் செய்து, சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள் மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்த நூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.

மனிதன் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு வாழ்க்கையின் முதல் பாதியில் பணம் சம்பாதிக்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்த பாதியில் சம்பாதித்த அனைத்தையும் உடல் ஆரோக்கியத்தைத திரும்பப்பெற செலவு செய்கிறான்.

நவநாகரீக மனிதன் செல்வத்தை சேர்க்கும் ஒரே குறிக்கோளோடு உடல் ஆரோக்கியதை, மன ஆரோக்கியத்தை, ஆன்ம ஆரோக்கியதை ஒவ்வொரு நாளும் தொலைத்துக் கொண்டுருக்கிறான். என்ன மடமை !

நம் முன்னோர்களின் அர்த்தமான வாழ்க்கை:

நம் முன்னோர்கள் அமைதி மற்றும் ஆனந்தத்திற்க்கு வெளியில் தேடாமல், தனக்குள்ளேயே தேடினார்கள்.

நம் முன்னோர்கள், இன்பம் மற்றும் துன்பம் என்ற சாதாரண மனநிலையைத் தாண்டி அமைதி நிலையை தினம் தினம் அடைந்தனர். மேலும், அமைதியிலேயே மனதை நிறுத்தி அந்த பேரின்ப நிலையில் திளைத்து, அர்த்தமுள்ள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகப் புரியும், நம் முன்னோர்கள், எப்படி உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்று.

அவர்கள் எளிமையான மற்றும் ஆடம்பரமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள், விளைவு, அமைதியான நிறைவான வாழ்க்கை. அவர்களுடைய அருள் நோக்கிய உன்னத பயணத்தில் பொருள் வறுமை நிலவியது உண்மைதான். ஆனால், அறிவு நிறைவு அடைந்தது, விளைவு, நம முன்னோர்கள் மனதளவில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள், பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது.

நம் முன்னோர்களின் மெஞ்ஞானப் பயணம்:

நம் முன்னோர்களின் ஞானப் பயணம், உள்ளே இருந்து வெளியே சென்றது. அதாவது, மனதின் உள்ளே இருந்து இந்த உலகத்தை நோக்கி சென்றது.

'நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிய உண்மை.

உன்னை உன் உடலை, மற்றும் மனதை சரியாகப் புரிந்து கொண்டால், இந்த உலகை சரியகப் புரிந்து கொள்ளலாம்.

நம்முடைய போலி வாழ்க்கை:

இன்று நம்மில் பல இளைஞர்கள், விட்டில் பூச்சியாக, விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக உருவான பல தேவையற்ற பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். விளைவு, வெளியே ஆடம்பர வாழ்க்கை மற்றும் பகட்டான வாழ்க்கை வாழ மனிதன் ஆசைப்படுகிறார்கள்.

இத்தகைய நவநாகரீக மனிதனின் ஆடம்பர வாழ்க்கையின் விளைவு, அசாதாரண் மனித வாழ்க்கையில், அசாதாரண் மனிதன், சாதரண் மனிதர்களாக வாழ்கின்றனர். விளைவு, உன்னதமான மனித வாழ்க்கை மனதளவில் வெறுமை மற்றும் போலி வாழ்க்கையில் போய் முடிகிறது.

ஆனந்தம் மற்றும் அமைதி நம்மிடம் இருப்பது தெரியாமல், அமைதியை வெளியில் தேடி, தேடி கிடைல்லாமல் நவநாகரீக மனிதன் வாழ்நாள் முழுவதையும் மன நிம்மதியின்றி வீணடிக்கின்றான்.

இன்றைய விரைவான உலகத்தில், இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதைப் புரிந்துகொண்டால் போரும், என்று நினைக்கிறார்கள். தன், உடலை, தன் மனதை, மருத்துவர் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் இன்றைய படித்த மேல்தட்டு வர்க்கம் மற்ரும் நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்து உள்ளது.

நம்முடைய விஞ்ஞான பயணம்....... போலி வாழ்க்கை:

நம் நாகரீக மனிதனின் விஞ்ஞானப் பயணம், வெளியே இருந்து உள்ளே செல்கிறது.

இன்றைய இளைஞர்கள் நினைப்பதெல்லாம "தரணியை தான் ஆண்டால், தன்னை டாக்டர் ஆள்வார்", என்பது தான். மேலும் இந்த உலகத்தை இண்டர்நெட் மூலம் புரிந்து கொண்டால், தன்னை, தன் உடல் நலத்தை மற்றும் மனநலத்தை டாக்டர் (மருத்துவர்) பார்த்துக் கொள்வார் என்ற கருத்து அவர்களிடம் நிலவுகிறது.

என்ன மடமை ?

சென்ற 20ஆம் நூற்றாண்டு வாழ்க்கை:

நம் முன்னோர்கள்........

.....மெதுவாக உணவு (Slow Food) உண்டனர்.

.....மெதுவாக செல்வம்(Slow Money)ஈட்டினர்.

.....மெதுவாக வாழ்க்கை(Slow Life)வாழ்ந்தனர்.

.....மெதுவான இறப்பு(Slow Death)நிகழ்ந்தது.

நிதானமான இளமை வேகம்...........

முதுமையில் விடை பெறு !

நோயற்ற வாழ்க்கை....... முழுமையான வாழ்க்கை !!

இளமையில் நிதான வாழ்க்கை...........முதுமையில் மரணம். இந்த அருள் நோக்கிய பயணத்தில் அறிவு, நிறைவு, ஆனால் பொருள் வறுமை என்ற நிலை நம் முன்னோர்களுக்கு இருந்தது.

இந்த 21 ஆம் நூற்றாண்டு வாழ்க்கை.............

இன்றைய விரைவான வாழ்க்கையில் மனிதர்கள்............

......வேகமான / துரித உணவு(Fast Food) உண்ணுகின்றனர்.

......வேகமாக செல்வம்(Fast Money)ஈட்டுகின்றனர்.

.....வேகமாக வாழ்க்கை(Fast Life)வாழ்கின்றனர்.

.....வேகமான இறப்பு(Fast Death)நிகழ்கிறது.

இந்த பொருள் நோக்கிய பயணத்தில் மனிதனுக்கு அறிவு வறுமை அதிகமாகிறது, ஆனால் பொருள் நிறைவு கிடைக்கிறது. உண்மை அறிவை விட்டு, பொருள் அறிவை அதிகரித்துக் கொண்டு நவீன கால மனிதன் அல்லல் படுகிறான்.

நிதானமற்ற இளமை வேகம்........ இளமையில் விடைபெறு !

இளமையில் திசை தெரியாத வேகம்...... இளமையிலேயே நோய்........

முழுமையற்ற வாழ்க்கை.......... இளமையில் மரணம்.

நோயற்ற வாழ்க்கை..... இன்றைய வாழ்க்கை......

மெய்ஞானப் பயணம்.........

அமைதியை நோக்கிய உன்னத மெய்ஞானப் பயணம்

தன்னை ஆண்டால் தரணியை ஆளலாம் !

ஆடம்பரத்தை நோக்கிய, போலி விஞ்ஞானப் பயணம்

தரணியை ஆண்டால், தன்னை மருத்துவர் ஆள்வார் !!

நேற்றைய நம் முன்னோர்கள் வாழ்க்கை......

நமது முன்னோர்கள் மெதுவான, உள்நோக்கிய உயரிய சிந்தனை வாழ்க்கை (Intutive thinking) என்ற நிலையில் வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனால் மெதுவான இறப்பு நிகழ்ந்தது.

இன்றைய நவநாகரீக வாழ்க்கை.........

இன்றைய நவநாகரீக மனிதன், வேகமான வெளிநோக்கிய சாதாரண சிந்தனை () என்ற நிலையில் வாழ்க்கையை வாழ்கின்றனர். அதனால் வேகமான இறப்பு அல்லது இளம் வயதிலேயே இறப்பு நிகழ்கிறது.

நம்முடைய போலி வாழ்க்கை........

சராசரி மனிதன், சராசரி வாழ்நாளில்............

.......ஆடிய ஆட்டம் என்ன ?

.......பாடிய பாட்டும் என்ன ?

கூடுவிட்டுப் கூடு போனால் கூடவே வருவது என்ன ?

வாழ்நாள் முழுவதும் அலைந்து அலைந்து சம்பாதித்த பணமா?.........இல்லை, தேடித்தேடி கிடைத்த புகழா....... இல்லை...... பதவியா......... இல்லை, பட்டமா........... இல்லை!

இனிய வாழ்க்கை.......

ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடைசி காலத்திற்க்கு தேவை மூன்றுதான். அவைகள், உடல் அரோக்கியம், உள்ள ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம்.

இன்றைய விரிவான வாழ்க்கை முறையில், இலட்சத்தில் ஒருவருக்கு கூட அத்தகைய, உடல் ஆரோக்கியத்துடன், உள்ள ஆரோக்கியத்துடன் மற்றும் ஆன்ம ஆரோக்கியத்துடன் கூடிய பரிபூரண வாழ்க்கை கிடைப்பதே இல்லை.

அவ்வாறு மூன்று ஆரோக்கியம் அமையப்பெற்ற சிலரை நாம் பாக்கியசாலிகள் அல்லது கொடுத்துவைத்தவர்கள் என்று அழைக்கலாம்.

நவநாகரீக மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம், அதுவும் ஒரே ஒரு போராட்டம் தான் அந்தப் போராட்டம் - நேரப் போராட்டம்.

மனிதன் ...... தேவையற்ற எண்ணங்களைத் தேவையாக்கிக் கொண்டான். விளைவு, வாழ்க்கைச் சிக்கலில் மாட்டிக் கொண்டான்.

கடைசியில், தேவையான பலப்பல எண்ணங்களை நினைக்க நேரம் இல்லாமல் முழுவதும் தத்தளிக்கிறான்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் பழக்கத்திற்க்கும், விளக்கத்திற்க்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் இந்த உன்னத நிலை தெளிவாகப் புரியும்

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...