Monday 31 July 2023

கிடைப்பது என்னவோ பட்டை சாதம்தான்... யோசிக்கவைக்கும் கதை...


 ஒரு ஊர்ல ஒரு இராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைப்பயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.

அப்போ அங்க ஒரு கொடில வெள்ளரிக்காய் காச்சு தொங்கரத பார்த்த ராஜா மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுகிட்டு வா சாப்பிடலாம் ன்னு சொன்னார்.
மந்திரி பறிக்க போனப்போ அது கிட்ட உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும் ன்னு.
ராஜா சொன்னான் யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு வாந்தி வருதா பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி.
ராஜா கேட்டான் யோவ் கபோதி இதுக்கு என்ன remedy ன்னு. அந்த குருடன் சொன்னான் அதும் பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும் அத கைல கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிக்கும் ன்னு.
ராஜா try பண்ண மந்திரி க்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரி க்கு போன உசுரு திரும்பி வந்தது.
ராஜா குருடன் ன பார்த்து கேட்டான் உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட் ஆ சொன்ன அப்படின்னு. குருடன் சொன்னான் ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வெச்சிடுவான்.
ராஜாக்கு சந்தோஷம். இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு.
சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிரீங்களா ன்னு கேட்டான்.
ராஜா சரி இது ஒரிஜினலா duplicate aa ன்னு எப்படி தெரிஞ்சு கரதுண்ணு மந்திரிய கூப்ட்டான்.
ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததாலே எங்கயாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னு ட்டான்.
ராஜா சொன்னான் மந்திரி போய் அந்த கபோதி ய கூட்டிண்டு வா அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்னான்.
மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் டேய் இதுல ஒரிஜினல் வைரம் duplicate வைரம் mix இருக்கா ன்னு பார்த்து சொல்லு.
அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொருத்து அத கைல எடுத்து பிரிச்சு ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.
வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான்.
ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடன பார்த்து கேட்டான் எப்படி கண்டு பிடிச்ச காரண காரியதோட சொல்லு.
குருடன் சொன்னான் ராஜா வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம் ன்னு பிரிச்சேன்.
ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன் ன குடுத்து பட்ட சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பிச்சான்.
இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜா க்கு confusion. யார தேர்ந்து எடுக்கரதுன்னு. மந்திரி கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே சொல்றான்.
ராஜா பார்த்தான் கூப்ட்ரா அந்த கபோதிய. குருடன் வந்தான். ராஜா குருடன் கிட்ட சொன்னான் என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கரேன். எந்த ராஜா வோட ராஜகுமாரி சரி யா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு அப்படின்னான்.
குருடன் சொன்னான் ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்ததுப்பான்.
ராஜாவுக்கு ஒரே குஷி. சபாஷ். இந்தாட டோக்கன் போடா. வடக்கு வாசலுக்கு போ. பட்ட சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னான்.
குருடனும் போய்ட்டான்.
கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான்.
டேய் நான் ஒண்ணு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லணும் அப்படின்னான். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற அப்படின்னான்.
குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல. ராஜா திரும்ப கேட்டான்.
குருடன் சொன்னான் ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான் அப்படின்னான்.
ராஜாக்கு ரொம்ப வருத்தம். ஏண்டா ன்னு கேட்டான்.
ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா குடுத்தது இலவச டோக்கன் பட்ட சாத்துக்கு. ராசாவா இருந்தா கைலஇருந்த மோதிரத்தை குடுத்து இருப்பான்.
அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜா வா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பான். ஆனா நீங்க குடுத்தது பட்ட சாத டோக்கன்.
மூணாவது ஒரு ராஜ்யமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பான். நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்.
இதுலேர்ந்து தெரியர்து சத்தியமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன்னு. ஏன்னா உங்க புத்தி டோக்கநோட முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போவல.
அந்த குருடன் நிலைமைல தான் நாம இருக்கோம்...💐💐💐
நம்ம என்னதான் தெளிவா இருந்தாலும் கிடைப்பது என்னவோ பட்டை சாதம்தான்...
உங்களுக்கு புரிஞ்சா சரிதான்

Thursday 27 July 2023

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.


 ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று

கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.
அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்
புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது.
''கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று
அருமையாக
இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?'' என்று கேட்டது.
கரையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.
''புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால்,
நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.
சோகத்தோடு கிளம்பின கரையான்கள். வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன. சாது பாம்பிடம் பேசினார்.
''பாம்பே! புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.
பாம்பு பேசியது.
சாதுவே! உலகத்தில் பலசாளிகள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலசாளியிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.
கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாதுவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென்றன.
பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில்
வசதியாக வசித்து வந்தது.
ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.
பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில்
சாதுவிடம் பேசியது பாம்பு.
சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால்
வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.
அதற்கு சாது 'பாம்பே! விதி சொல்லிக்கொடுக்கும் பாடம் ஒன்றைத் தெரிந்துகொள். வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய். அதே போல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
ஆகையால், பலவானாக இருக்கும்போது பக்குவமாகவும், பிறருக்கு கெடுதல்
செய்யாமலும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி வாழவில்லை. கரையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும், பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளியிருக்கிறது''.
''பாம்பே! நிதர்சனமான ஒரு உண்மையைத் தெரிந்துகொள். அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த
உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம். ஆனால், நீ கீழே விழும்போது காலம் அதை உன் நினைவில் கொண்டு வரும்.
அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது. உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள்'' என்று சொல்லிவிட்டு சாது சென்றார்.
அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல. காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச் சென்றுவிட்டது. பலம் பொறுந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை காலம் ஒருநாள் எடுத்துச் சென்றுவிடும். அப்போது உணர்ந்து பார்க்கலாம் என்றால் காலம் அதற்கு
இடம் தராது

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...