Tuesday 28 March 2023

நமக்கு ஏற்படும் துன்பத்துக்கு யார் காரணம்?

 நமக்கு ஏற்படும் துன்பத்துக்கு யார் காரணம்?

மகாபாரத கதையுடன் ...
கர்ணனனை அர்ஜுனன் மட்டும் தான் கொன்றாரா?
யார் யார் கொன்றார்கள்...

ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ


மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் கர்ணன். இவர் தான தர்மங்களாலும், மிகச்சிறந்த ஆட்சி செய்து நற்பெயரை மக்கள் மத்தியிலிருந்தாலும், இவர் பிறப்பு குறித்து பலரின் கேள்வி எழுப்பினர். இவருக்கு ஆதரவு, ஒரு சிறிய ராஜ்ஜியத்தை ஒதுக்கிய துரியோதனன் பக்கம் சேர்ந்தார். இதனால் இவர் பாண்டவர்களால் கொல்ல நேர்ந்தது. இருப்பினும் கர்ணனின் மரணம் அர்ஜூனனால் மட்டும் ஏற்படவில்லை. அதன் பின் இருந்த விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

கர்ணன் மரணத்திற்கு யார் யார் காரணம்.
நம் வாழ்வில் பல்வேறு துன்பங்கள், சங்கடங்கள், தோல்வியைக் கடந்து தான் நாம் இனிமையான, மகிழ்ச்சியான வாழ்வை நடத்தி வருகின்றோம்.
அதில் நம் துன்பத்திற்கு இவர் தான் காரணம் என நாமே யாரையாவது நினைத்து, அந்த துன்பத்தை மேலும் அதிகரித்துக் கொள்கிறோம். அதை நினைத்து துன்பப்படுகிறோம்.

உண்மையில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பத்திற்கு யார் காரணம், நாம் நினைத்த நபர் மட்டும் தானா, அல்லது நம்முடைய கர்ம வினைகளும் காரணமா?
என்பதை மகாபாரதத்தில் வரும் கர்ணன் மரணம் அர்ஜுனன் மூலம் மட்டும் ஏற்பட்டது இல்லை, அதற்கு காரணமானவர்கள் யார் யார் என்ற கதையை இங்கு பார்ப்போம்.

உண்மையில் கர்ணனின் வலிமை இழந்து அவரை கொல்வதற்கு முக்கியமாக பங்களித்தவர்கள் ஆறு பேர். அவர்களை வரிசையாக பார்ப்போம்.
​முதலாவதாகப் பரசுராமர்

இவர் அந்தணர்களுக்கு மட்டும் தான் வில்வித்தையை கற்றுத் தருவேன் என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த கர்ணன் வில்வித்தையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் அந்தணர் என பொய் சொல்லி அவரிடம் வில் வித்தையை கற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரன் ஒரு வண்டாக உருமாறி வந்து கர்ணனின் தொடையை துளைத்துக் கொண்டு மறுபகுதியில் வந்தது. அதனால் வந்த ரத்தம் பரசுராமர் மீது பட்டு அவர் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்.
ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தன் வலியைப் பொறுத்துக் கொண்டார்.

ரத்தம் பட்டு விழித்தெழுந்த பரசுராமர், இத்தனை வலியைப் பொறுத்துக் கொண்ட நீ அந்தணன் இல்லை என தெரிந்து கொண்டு சபித்தார்.
“நீ கற்ற வித்தைகள் அணைத்தும் உனக்கு தகுந்த சமயத்தில் மறந்து போகட்டும்” என சபித்தார்.

இரண்டாவதாக ஒரு முனிவர்...
ஒரு முனிவருடைய பசுங்கன்று ஒன்று கர்ணனின் தேர் சக்கரத்தில் சிக்கி அடிபட்டு இறந்தது. இதனால் அந்த முனிவர், ‘யுத்தத்தில் உனக்கு இக்கட்டான நேரத்தில் உன் தேர் பழுதுபடட்டும்’ என சபித்தார்.

மூன்றாவதாக இந்திரன் :
போருக்கு முன் கர்ணனின் கவச குண்டலத்தை அந்தணன் போல வந்து இந்திரன் தானமாக பெற்றுச் சென்றான்.

நான்கவதாக குந்தி தேவி :
சூரிய பகவனை நினைத்து கர்ணனை பெற்றெடுத்த குந்தி தேவியே, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் நீ கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் மறுமுறை தொடுக்கக்கூடாது என வாசுதேவ கிருஷ்ணனின் வற்புறுத்தலின் பெயரில் கர்ணனிடம் வரமாக பெற்று வந்தார்.

ஐந்தாவதாகச் சல்லியன் :
கர்ணனுக்கு தேரோட்டியாக சென்றவன் சல்லியன். முதல் முறை நாகஸ்திரத்தை அர்ஜுனன் மீது தொடுத்த கர்ணன், கண்ணனின் லீலையால், தலைப்பாகை மட்டும் எடுத்துக் கொண்டு போனது. சல்லியன் மீண்டும் இரண்டாவது முறை நாகாஸ்திரத்தை தொடுக்கச் சொன்னான். ஆனால் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியால் அம்பை செலுத்தவில்லை. அதனால் தக்க சமயத்தில் பள்ளத்தில் சிக்கியதும் தேரிலிருந்து இறங்கி ஓடி விட்டான்.

ஆறாவதாக கண்ணன் :
கர்ணன் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனை தாக்காதபடி, சரியான நேரத்தைல் தேரை தரையில் அழுத்தியதால், தலைக்கு வந்த அம்பு, தலைப்பாகயை மட்டும் வீழ்த்தி சென்றது.
அதுமட்டுமல்லாமல், இந்திரன் மூலம் கவச குண்டலத்தையும், குந்தி மூலம் நாகஸ்திரத்ஹ்டை ஒரு முறை பயன்படுத்த வேண்டும் என்ற வரம் என கர்ணன் வீழ காரணமாக இருந்த பல காரணங்களுக்குப் பின்னால் இருந்தார்.
முன் ஜென்மத்தில் சகஸ்ரகவசன் என்னும் அரக்கனாக இருந்து பல பாவங்கள் செய்ததாலும்

கடைசியாக தான் செய்த தான, தர்மங்களால் போரில், அர்ஜுனனின் அம்பால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், உயிர் பிரியவில்லை. கடைசியாக கண்ணன் அவனது அனைத்து புண்ணியங்களையும் யாசித்து பெற்றான்.

அதன் பின்னரே கர்ணனின் உயிர் பிரிந்தது.
கர்ணனைப் போல நம் துன்பம், கஷ்டத்திற்குப் பின்னால் நம்முடைய பல்வேறு ஊழ்வினைகள் கர்ம வினைகள் பல வழிகளில் வந்து நம்மை கஷ்டப்படுத்துகிறது. அதனால் நம் துன்பத்திற்கு இவர் தான் காரணம் என யாரையும் நாம் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

நம் கஷ்டங்களுக்கு நாம் தான் பொறுப்பு என்பதை உணருங்கள். நல்லது செய்ய முடியாவிட்டாலும், மற்றவர்களுக்குக் கெடுதல் கூட நினைக்க வேண்டாம்.
நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு ..!

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...