Friday 7 April 2017

ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!

uyiu

ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன் (எங்கும் இல்லாத ஏழு கலசம்)

'ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன் ஸ்தலவரலாறு'


வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை
உருவ மற்ற தெய்வம் அனைவருக்கும் குலதெய்வம்
எண்ணத்தில் ஆனந்தாய்பேச்சியை நினைத்தாள் எடுத்தகாரியம் வெற்றியாகும்
சாதி,மதம் பேதம் இன்றி குல தெய்வம் தெரியதவர்கெல்லாம் இதுவே குலதெய்வம்

பொருளடக்கம்


·        குறிப்பு
·        வழி தடம்

பக்தகோடிகளே

அருள் நிறைச்சான்றோர்களே இந்த தெய்வமானது (முனியப்பா தம்பிரான்)             மகன்{பழனியப்பா தம்பிரான்}முன்னோர்களால் காலம் காலமாக புரட்டாசி மாதத்தில் சப்பரம் எடுத்து ஊர்வலமாக வழிபாடு செய்து வரப்பட்டது காலசூழல் காரணமாக இந்த வழிபாடு செய்ய முடியாமல் தெய்வமானது ஆற்றில் விடப்பட்டது




(கோயில் முன் தோற்றம்)
.பின்பு நம் கொங்கு நாட்டில் பொன்னெனத் திகழும் பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி என்கிற கிராமத்தில் வள்ளுவர்கள் குலத்தின் பாரம்பரிய மக்கள் சிலரின் கனவில் தோன்றி உருவ மற்ற ராகு-கேது தேவதைகள் பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்க வந்த கண்கண்ட தெய்வம்,பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.ஆற்றங்கரை ஓரத்தில் ஆதிசக்தியாய் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தாய் தான் இன்ன இடத்தில்ஆற்றின் கரையோரம் விருச்சிகத்தில் புதைந்து உள்ளதாகவும்,தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் இங்குவரும் மக்களையும் இந்த ஊரையும் காத்தபடி இருப்பேன்’’ எனவும் கூறிள்ளது

.
உருவமற்ற குழந்தைதெய்வத்தை அதன்படி வள்ளுவர்கள் கனவில் வந்த 

 
குழந்தை தேவதையான ஸ்ரீஆனந்தாய் என கண்டறிந்து அதன்படி ப.வடிவேல் தம்பிரானின் மகன் A.V.சம்பத் என்கின்ற சண்முக ராஜ் தம்பிரான் ஜோதிடர் அவர்களின   அதி தீவிர     முயற்சியால் பிரசன்ன ஜோதிடமுறைப்படி பாம்பின் வடிவம்                     உள்ள   ஆலயம் எழுப்பி புவியின் உச்சியில் பூரண மகிழ்ச்சியில்   வழிபாடு செய்து வருகிறோம்

முன்னவர்கள் தான் நம் குல தெய்வம் என்பதற்காக முப்பாட்டன்முனியப்ப தம்பிரான் என்பதற்காக கோவில் வளாகத்திற்குள் மிகப்பெரிய மிக பிரம்மாண்டமான முனியப்பன் சிலை அமைத்து அவரை வழிபாடுசெய்து வருகின்றோம்


.வருடா வருடம் சித்திரை பெளர்ணமி அன்று சித்திரை தீர்த்தங்கள்,மேளதாளவாத்தியங்களுடன்,வாணவேடிக்கை,
அன்னதானம்,சிறப்பு பொங்கலிட்டும் பூஜைகள் நடத்தி வருகிறோம் மற்றும் மாதா மாதம் பெளர்ணமி அன்று யாகம்,அபிஷேகம்,அலங்காரம்,அன்னதானம்,சிறப்பு பூஜைகள் செய்து வருகிறோம்.அருள்மிகு ஸ்ரீஆனந்தாய் சுயம்புவாக காட்சி தருகிறாள்.உலக உயிர்கள் அனைத்துக்கும் தாயாக விளங்கி அருள்பாலித்து வருகிறாள்.ஆத்து நீரின் அலை ஓசையோயை தாலாட்டாய் கேட்பவள் எங்கள் அன்னை எழில் தவழ்ந்து கொஞ்சும் நதிசாரலில் பூவும் காவும் விரித்து பொங்கி வரும் ஆழியார் நதிக்கரையில் சரளி மேட்டில் சுகாசனத்தில் வீற்றிருக்கும் அன்னையை தஞ்சம் என்று வருவோரின் சஞ்சலம் போக்கி மங்கலம் அருள்வாள்


இங்கு தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச் செய்து அதன் மூலம் எல்லா மனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப்படுத்திட ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.இங்கு இருக்கிற சக்திகளை உணருங்கள் வெறுமே வணங்கி வருதலில் ஒரு பலனும் இல்லை.தொடர்ந்து மூன்று மாதம் பெளர்ணமி நாளில் தரிசித்தால் இச்சாசத்தி,கிரியாசத்தி,ஞானசத்தி என்ற முப்பெரும் சத்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும்  





காவல்தெய்வமான எல்லை ஸ்ரீகருப்பராயசுவாமி,வெற்றி மஹா முனியப்பசுவாமி  ,சகல ஐஸ்வரியங்களையும் வாரி வளங்கும் ஸ்ரீசம்பத்கணபதி
 மற்றும் பரிவார தேவதைகளான ஸ்ரீஅன்னை பேச்சியம்மன் பதினெட்டு அடி 
உயரத்தில் பதினெட்டு சித்தர்கள் அம்சமாக சிலையாக நின்றாலும்,சீரான வாழ்வு 
தரும் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகின்றாள்.ஸ்ரீ சப்தகன்னிகள்  
ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதி மலைமேல் ஸ்ரீ அங்காளஅம்மன்.இந்தகோவிலின் கோபுரகலசங்கள் [7]சப்த ரிஷிகள் [7 ]
ராகு-கேது ஸ்தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி,திருநாகேஸ்வரம்
கீழப்பெரும்பள்ளம் ஸ்தலங்களுக்கு இணையான சக்தி உள்ள ஏழு அடி 
உயரத்தில் கருங்கலில் நாகப்பாம்பும்,சாரைப்பாம்பும் 


[ராகு+கேது இணைவது
(ஷோடசாம்சம்தில்) மகிழ்ச்சி கருங்கலில் இருப்பது சிலையின் சிறப்புகள்
* ஆதிஷேசன் தலையின்  கீழ்  அமர்ந்த முக்தி தரும்  சிவபெருமான்
* குழந்தை வரம் அருளும் சந்தான கோபாலகிருஷ்ணன்
* செல்வவளம் அருளும் தனதான்ய லட்சுமி
* நிலவளம் மற்றும் ஜோதிடத்தில் சிறந்து விளங்க முருகபெருமான்.
 
இத்தெய்வங்கள் ஐந்து தலை நாகர் சிலை உள்ளது.

நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்களே நாகர் சிலைக்கு அபிஷேகம் 
செய்யப்படுவது தனிச்சிறப்பு
 
பாவம் பொறுத்துப் பால் பசுவும் தான் கொடுத்து விக்னங்கள் வராமல்
வேளிபோல்காத்து ஆதரித்து அருள்புரிவாயே புவனசுந்தரி போற்றி! போற்றி!
குருவடிவாய் வந்து உபதேசங்கள் கொடுத்து உன் திருவடிதந்து அருள்வாயே
எங்கள் அன்னை ஆத்துப்பொள்ளாச்சி ஸ்ரீஆனந்தாய் பேச்சியம்மா!

பெளர்ணமி நாள் மட்டும் (காலை 11.00 முதல் மதியம் 2..30 வரை மட்டும்) 

அபிஷேகம்,அலங்காரம்,சிறப்பு பூஜைகள்,அன்னதானம் நடைபெறும்.

கோவில் பதிவு எண்

766 / 2011

27 நட்சத்திரத்திற்கு 27 சிரசுகள் உள்ள அதிசயமான  நாகர் சிலைகருங்கலில் 
உள்ளது.எங்கள் அன்னை ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் உள்ளஇடத்தில், 
தென் திசை நோக்கி ஓடும் நதி இருப்பது சிறப்பிலும் சிறப்பு நதியில் இருந்து 
அனைத்து தேவதைகளும் நடமாட்டம் உள்ளதாக பிரசன்னத்தின் மூலம் 
கண்டறியப்பட்டது அன்னையின் பாத கமலங்களைச் சரணடைந்து 
பலனடைந்தவர்கள் எண்ணற்றவர் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியர் 
மனம் மாறி இணைந்து வாழ்வார்கள்    தொல்லை கொடுக்கும் துஷ்டர்கள்
இருக்கும் சுவடு தெரியாமல் போய் விடுவார்கள்
,திருமண தடைகள் நீங்கும்,குடும்ப பிரச்னைகள்,
குழந்தை பாக்கியம்,தொழில் விருத்தி என எதை நினைத்து அம்மனுக்கு
உங்கள்வயதுக்கு உரிய தீபத்தை போடவேண்டும்

 
வயதுக்கு உரிய நெய்தீபம் ஏற்றுகிறோமோ அதை உடனே நிறைவேற்றித் தரக்கூடிய சக்தியாக 
அம்மனை வணங்கி அருள்பெற்று வருகிறார்கள்பிரம்மஹத்திதோஷம், 
நாகதோஷம்,கண் திருஷ்டி,கிரகதோஷங்கள்தோஷம்,
திதி சூனியம்தோஷம் கரணம்தோஷம் அகலும்,தீவினைகள் அண்டாது,
செய்வினை தோஷங்கள்,அடிக்கடி பாம்பை நிஜத்திலோ,கனவிலோ பார்பவர் 
செல்வ வளம் இல்லாதவர்கள்,வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தடையினை 
சந்தித்து வருபவர்கள் யாவருக்குமே  வென்கருடன் முன்நின்று  தித்ர்து 
வைப்பார் சிறப்பு பூஜைகளை செய்வதின்மூலம் தோஷம் நிவர்த்தி ஆகும் 
என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை இதன் சக்தியை  அளவிட 
முடியாது இந்த மண்ணில் காலடிஎடுத்து வைத்தாலே முற்பிறவின்  


தீவினைகள் பாவங்கள் தீரும்
 



  கருடன் மகாவிஷ்ணுவின் வாகனமும் ஆகும்.இங்கு யாகம்,
சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும் போது,கோயிலுக்கு நேர் மேலே கருடன் 
வட்டமிடுவதை இன்றும் காணலாம் கருடனை கண்டால் தோஷத்தில் இருந்து 
மோட்சம்.கருடனை மறக்காமல் வழிபடுங்கள் நிறைய பலன்கள் கிடைக்கும் 
அற்புதமான ஸ்தலம் உலகம் போற்றும் ஆன்மிக ஞானிகள் சிறந்த ஜோதிடர்கள், 
குருமார்கள், சிவாச்சாரியார்கள், வழிபாடு செய்த பெருமை உடைய ஸ்தலம்,
சித்திரை பெளர்ணமி அன்று ஓர் இரவு கோவிலில் தங்க நம்முள் மாறுபட்டு 
இருக்கும் குறைபாட்டை நீக்கியும்,ஜீரண உறுப்புகளை தீவிரமாக செயல்பட 
வைக்கும்.தன்மை சமன்படுத்தும் மற்றும் சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து 
சென்றால் இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி மனம் 
குளுமை ஆவதை நன்கு உணரமுடியும்

 இதன் சிறப்புக்களை சொல்லிலோ 
எழுத்திலோ அடங்காதவை
 
 உச்சாகமான மனநிலையும் அதிர்ஷ்டமான 
திருப்பங்களும் ஏற்படும் கோயிலுக்கு வருபவர்கள் குறைந்தது மூன்றுவித 
தான தருமங்கள் செய்வது நல்லது  தருமங்கள் செய்தாள் கர்மங்கள் விளகும் 
இங்கு பரிபூரண சரணாகதி அடைந்து விட்டால் மீதத்தை அன்னைபார்த்துக்கொள்வாள்
 அன்னையை  மனமார ஏற்கும்போது மாரி பொழியும், ஏரி நிறையும்.     
 நம்பி வேண்டுவோரை காப்பதில் முதலிடம்                                                      
உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் உயிர் தெய்வமே 
எங்கள் அன்னை ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்.

அறிவுசக்தியும்ஆட்சிசெய்யும்சக்தி உங்களுக்கு சக்தியமாக கிடைக்கும்
சரணம் சரணம் தாள் பணிந்தேன்

இங்கு அன்னதானம் செய்த குடும்பங்களை மனமார வாழ்த்துங்கள்


 
குறிப்பு
திரு திருக்கோவிலை பற்றிய அனைத்துத் தகவல்களும் 9994150658 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

வழி தடம்






No comments:

Post a Comment

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...