மணப்பெண்ணுக்கு மட்டும் தான் அறிவுரையா ?
~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~
திருமணம் செய்து கொள்ள போகும் தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்ல வேண்டியவை ...
1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மாவுடன் ஒப்பிடவே கூடாது...!!!
மறந்தும் கூட உன் மனைவியை என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்காதே... உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 25 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனால் உன் மனைவி உன்னை மாதிரி தான், இந்த வாழ்க்கைக்கு புதிது. உன்னை நான் வளர்த்த மாதிரி தான், அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்கு அனுப்பியிருபார்கள். அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதற்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
2. புது மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!!
உன் மனைவி உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனித்துக் கொள்வது மட்டும் தான் வேலை. ஆனால் உனக்கு, உன் மனைவியயை கவனித்துக் கொள்வதும் முக்கியம். நீங்கள் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கவனித்து அன்பு செலுத்துவது மிக மிக முக்கியம்.
3. மதிக்கப்பட வேண்டியவள் மனைவி...!!!
உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப் போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கும் உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு...
4. அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல் உணர்வை உண்டாக்கு...!!!
புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய். பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்துள்ள உன் மனைவியை இயல்பாக இருக்க வைக்க நீதான் உதவ வேண்டும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்... அதை நீதான் கவனித்து அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்க வேண்டும்.
5. எப்போதும் மனைவியைக் காதலிக்க வேண்டும் ...!!!
காதலிக்க வயது ஒரு விஷயமே இல்லை ... எப்போதும் உன் மனைவியை சந்தோஷமா வைத்துக்கொள் .. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளியே அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை கிலாகித்துப் பேசுதல், சந்தோஷமாக வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்கள் இருவரையும் எப்போதும் இளமையாக உணர வைக்கும்...!!!
மிக முக்கியம்...
உன் அப்பா என்னை எப்படி நடத்துகிறாரோ...!
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமாக மதித்துக் குடும்பம் நடத்து மகனே..!!!
உனக்கும் மருமகளாக வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள்....!!!
~மகிழா. 

No comments:
Post a Comment