சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?
நான் சாதாரணமாக இருந்தேன். நண்பர் ஒருவர் மூலமாக சிவன் கோவில் போக ஆரம்பிச்சேன். என்னைக்கு சிவன் கோவில் போக ஆரம்பிச்சேனோ அன்னைக்கு இருந்து எனக்கு கஷ்டம்தான்.. நிறைய பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.
உண்மை தான்... இப்ப உடல் நிலை சரியில்லாதவன் தான் டாக்டர் கிட்ட போவான். முதல்ல டாக்டர் என்ன பண்ணுவார். அப்போதைக்கு குணப்படுத்துவார். அப்புறம் நோய் எப்படி வந்ததுன்னு கண்டுபிடிப்பார். நோய் வராம தடுக்கறதுக்கு என்ன வழின்னு கண்டு பிடிப்பார். அப்புறம் மருந்து கொடுப்பார். மருந்து கசக்குது, ஊசி குத்துணா வலிக்கும்னு நெனைச்சா நோய் எல்லாம் சரியாகுமா?.
மருந்து கசந்தாலும் சாப்பிடணும். ஊசி வலிச்சாலும் குத்திக்கணும். ஈசனும் டாக்டர் மாதிரி தான். கஷ்டம் கொடுத்துதான் பிறவி நோயை குணப்படுத்துவார் .
ஆத்மார்த்தமாக வழிபடுகின்றவருக்கு முதலில் அவருடைய பாவ கணக்கிற்கு கஷ்டத்தை தந்து அந்த பாவத்தை அழித்து விட்டு அவனை தூய்மையானவனாக மாற்றி விடுகிறார், பின் அவன் புண்ணிய பலனிற்கு வளங்களை தந்து வாழ்க்கை முழுவதும் அவனை இன்பத்தில் ஆழ்த்தி பின் இறுதியில் அவனை தன்னுடனே இணைத்து கொள்கிறார்... இதனால் தான் சிவன் தன்னை வழிபடுபவர்களுக்கு கஷ்டத்தை தருகிறார்...
அப்ப ஈசனை வழிபடாதவர்களுக்கு,
லேசா காய்ச்சல் வரும் போதே செக் பண்ணிக்கணும். டெங்கு காய்ச்சலா, மலேரியாவா, வைரஸ் காய்ச்சலா இல்லை சதாரண காய்ச்சலான்னு டாக்டர்ட்ட செக் பண்ணி பாத்துக்கணும். அப்போதைக்கு மெடிக்கல் கடையில் மாத்திரை சாப்பிட்டு சரி பண்ணிறலாம் . பின்னாடி அது ஏதாவது பெரிய வியாதில கொண்டு போய் விட்டு உயிரையே குடிச்சிரும்.
அது மாதிரி தாங்க ஈசனும். ஈசனை வழிபடாதவனுக்கு அவனுடைய புண்ணிய பலனிற்கு முதலில் எல்லா வளங்களையும் தருவார், பின் அவனுடைய பாவ கணக்கிற்கு மொத்தமாக அனுபவிக்க நேரும்போது கஷ்டத்தில் சிக்கி தவிக்க வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் ஈசனை திட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை. சில கடவுள் வழிபாட்டினர் இகலோகத்தில் வாழ்வது சில நாட்கள் அதற்குள் அனைத்தையும் அனுபவித்தி விடுவோம் என்பார்கள். இவர்கள் நெறியான வாழ்வை பின்பற்றாமல் செல்வம் ஒன்றே குறிக்கோளாக உள்ளவர்களுக்கு பல பிறவிகள் எடுத்து பல சோதனைகள் அனுபவித்து பின்புதான் முக்திக்கு அவ்வுயிர்கள் முக்திக்கு செல்லமுடியும்.
ஆனால் இப்பிவியிலேயே பிறவா நிலையான மோட்சம் நிலைக்குச்செல்ல எல்லா சோதனைகளிலும் வெற்றிபெற்றால் தான் இந்நிலை பெற முடியும். அது எப்படியென்றால் பறவைகளின் அரசன் கழுகு தனது கூட்டை பஞ்சுபோன்ற மென்மையான பொருள்களால் கட்டும். முட்டை போட்டு குச்சுகளை பொரித்து அவைகளை வளர்த்தும். ஆனால் குஞ்சு சற்று வளர்ந்தவுடன் கூட்டினுள் தாய் முட்களை போட்டு குஞ்சுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். குஞ்சு தாயிடம் கோபமாக இருக்கும். சில வேளை தாயை கொத்தும். இப்படி சில நாட்கள் ஆனதும் குஞ்சை வெளியே தள்ளும். அந்நிலையில் குஞ்சு சிறகை அடித்து பறக்க முயற்சிக்கும். ஆனால் அது பறக்க முடியாமல் கீழே விழப் போகும் நிலையில் தாய் பாய்ந்து வந்து குஞ்சை கவ்வி திரும்பவும் கூட்டில் சேர்க்கும். கூட்டினுள் பஞ்சு போன்ற மென்மையான பொருளை வைத்து சில நாட்கள் குஞ்சினை பராமரிக்கும். திரும்பவும் கூட்டில் முட்களை போட்டு கஷ்டத்தைக் கொடுத்து வெளியேற்றவிடும். இப்போது அது தன்னை தயார்படுத்திக் கொண்டு பறக்கும். அதுபோல இந்த உலக வாழ்வு கஷடமும். வேதனையும், அதுபோல சுகவும் உடையது. தாய் தனது குஞ்சுகளுக்கு கஷ்டத்தை கொடுத்தது துரோகமா? அது தன் குஞ்சுகள் சோதனைகளை கொடுத்து தன் குஞ்சை பறக்க தயார்படுத்தியது.
அதுபோல் உயிர்கள் எப்போதும் சுகபோகத்தில் இருந்து இறந்து போவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த கிடைத்தற்கரிய மனித பிறவியில் தான் முக்திக்கு செல்ல முடியும். அதற்கு நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவன் நல்ல உயிரை முக்திக்குச் செல்ல சில சோதனை வைத்து முடிவு செய்வார்.
சிவனை பற்றியவர்கள் உலகில் கஷ்டம் அனுபவித்தாலும் சிவகதி கிடைக்கும். உலக சுக வாழ்வை விரும்புகிறவர்கள் பல பிறப்பெடுத்து உழல்வர. சிவமே உண்மை. திருமூலர் தருமந்திரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஓம் நம சிவாய...

No comments:
Post a Comment