Monday 26 November 2018

மகா சிவராத்திரி மகிமை

                                               மகா சிவராத்திரி மகிமை

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தவை நவராத்திரிகள் என்றால், அரனாருக்கு உகந்தது ஒரு ராத்திரி; அதுவே மகிமைகள் பல கொண்ட புண்ணிய சிவராத்திரி. `சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். ஆக, சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி’ என்பார்கள் பெரியோர்கள். இப்படி, சீரும் சிறப்பும் மிகுந்த சிவராத்திரி குறித்து நாமும் விரிவாக அறிந்துகொள்வோமா?
பொதுவாக 15 திதிகளில் 14-வது திதிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன் ஆவார். அந்த ருத்ரனின் ராத்திரியே சிவராத்திரி ஆகும். அதாவது, சதுர்த்தசி திதி நாளே சிவராத்திரி ஆகும். இந்த தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும்.
சதுர்த்தசி திதி, மாதம் இருமுறை வரும். இந்த இரண்டில் தேய்பிறை சதுர்த்தசி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதிநாளுக்குக் கூடுதல் மகத்துவம் உண்டு. அந்தத் திருநாளையே நாம் மகா சிவராத்திரி புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறோம்.
இந்தத் திருநாளுக்கு அப்படியென்ன மகத்துவம்? இதுபற்றி புராணங்கள் விரிவாகக் கூறுகின்றன!
உமையவள் செய்த சிவ வழிபாடு
ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு, படைப்புகள் அனைத்தும் சிவபெருமானுக்குள் ஒடுங்கின. அண்டபகிரண்டத்தையும் இருள் சூழ்ந்த அந்த வேளையில், பார்வதிதேவி நான்கு காலம் சிவபெருமானை வழிபட்டாள்.
மேலும், தன்னைப் போன்று சிவராத்திரி அன்று சிவனாரைப் பூஜிப்பவர்களுக்கு சகல செளபாக்கியங்களும் அருள வேண்டும் என்றும் சிவனாரிடம் வேண்டிக்கொண்டாள் உமையவள். சிவபெருமானும் `அப்படியே ஆகட்டும்’ என்று அருள்பாலித்தார். இப்படி, பார்வதிதேவி துவங்கிய சிவராத்திரி புண்ணிய வழிபாடு இன்றைக்கும் தொடர்கிறது.
கண்களை மூடினாள்… உலகம் இருண்டது!
ஒருமுறை பார்வதிதேவியார் விளையாட்டாகக் கருதி சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். ஆகவே, உலகம் இருளால் சூழப்பட்டது. இதனால் உயிர்கள் யாவும் கலங்கித் தவித்தன.
அப்போது ருத்திரர்கள் ஒன்றுசேர்ந்து, உலகின் இன்னல் நீங்க சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டனர். அதன் நினைவாகவே சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதாகச் சொல்வார்கள்.
இதுதொடர்பாக இன்னொரு கதையையும் சொல்வார்கள். பார்வதி தேவியார், சிவனாரின் கண்களைப் பொத்தியதும், அவர் தம்முடைய நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதனால் உண்டான வெம்மையைத் தாங்க முடியாமல் உலகம் தவித்தது. உடனே பார்வதிதேவியார் சிவனாரை தொழுது பணிந்தாள். அதனால் மகிழ்ந்த சிவனாரும் தம் நெற்றிக்கண்ணால் உண்டான சுடர் ஒளியை குளிர்ச்சி பொருந்தியதாகத் திகழும்படி அருள்செய்தார்.
இப்படி, பார்வதியாள் பூஜித்ததும் சிவனார் அருளியதுமான அந்தத் திருநாளே புண்ணியமிகு சிவராத்திரி என்பர்.
பாற்கடலும் சிவராத்திரியும்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த திருக்கதை தெரியும் அல்லவா? அப்போது பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அருந்திய சிவனார், மயங்கிக் கிடப்பது போல் அருளாடல் புரிந்து, பிறகு சந்தியாகாலத்தில் ஆனந்த தாண்டவமும் புரிந்தார். இது நிகழ்ந்தது ஒரு திரயோதசி தினத்தில். தொடர்ந்து சதுர்த்தசி அன்று இரவு நான்கு ஜாமங்களிலும் தேவர்கள் அவரை வழிபட்டு, துதித்தார்கள். இதுவே சிவராத்திரி என்றும் சில பெரியோர்கள் கூறுவார்கள்.
அடி-முடி தேடிய திருக்கதை!
பெரும்பாலும் இந்தத் திருக்கதையையே சிவாராத்திரிக்கான காரணக்கதையாகச் சொல்வார்கள்.
ஒருமுறை, மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் இடையே, ‘யார் பெரியவர்’ என்று வாக்குவாதம் துவங்கி, அது சண்டையாகவே உருமாறியது. அந்தப் போர் முடிவில்லாமல் தொடர்ந்தது. ‘அடுத்து என்னவாகுமோ’ என்று தேவர்கள் கலங்கினார்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரியதொரு நெருப்புத் தூணாக நின்றார் சிவபெருமான். அந்தத் தூணின் பிரகாசத்தைக் கண்ட இருவரும் பிரமித்தனர்.
அப்போது திருமால், பிரம்மனை நோக்கி, “நமக்கு இடையில் அதிமகிமை பொருந்திய மூன்றாவது ஒருவரும் இருக்கிறார். அவராலேயே இது உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இதன் அடியையும் முடியையும் முதலில் அறிவோம்’’ என்றார். பிரம்மனும் ஒப்புக்கொண்டார்.
உடனே, திருமால் வலிய கொம்புகளுடைய வராஹ அவதாரம் எடுத்து, பூமியை அகழ்ந்து சென்று அதன் மூலத்தைக் காண முயன்றார். பிரம்மன் அன்னத்தின் வடிவம் எடுத்து உச்சியைக் காணச் சென்றார். ஆண்டுகள் பலவாயின; அவர்களால் எதையும் காணமுடியவில்லை. அவர்களின் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயின.
ஆகவே, இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பழையபடி பூமியை அடைந்தனர். இருவரும் நெருப்புத் தூணின் இருபுறமும் நின்று, சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். அவர்களோடு சேர்ந்து தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் எல்லையில்லாச் சிறப்புகளைப் போற்றிப்பாடியும், ஆடியும், நெஞ்சு நெகிழ்ந்து பலவாறு துதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த நெருப்புத் தூணின் மையத்தில் மான், மழு, அபய, வரத முத்திரைகளைத் தாங்கியவராகத் தோன்றினார் சிவபெருமான்.அவர் மகாவிஷ்ணுவையும், பிரம்மனையும் நோக்கி, ‘‘வேண்டிய வரங்களைக் கேளுங்கள்” என்றார்.
அவர்கள் இருவரும் அவரை வணங்கித் தொழுததுடன், தங்களின் படைத்துக் காக்கும் தொழில் ஞானம் பழையபடியே பொலிவுடன் திகழ அருளும்படியும், போரில் வெந்து அழிந்து போன தங்களுடைய ஆயுதங்களை மீண்டும் தர வேண்டுமென்றும் வேண்டினர்.
அப்படியே அருள்பாலித்த சிவனார், ‘‘அன்பர்களே! இன்று நான் உங்கள் முன்னே தோன்றி அருள்பாலித்த நாள் சிவராத்திரியாகும். இதுபோல் முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை அர்ச்சித்துப் பேறுபெற்றாள். இந்நாளில் ஆகமங்களில் கூறியுள்ளபடி பூசை செய்தால் நினைத்த நல்லவை யாவும் நடக்கும்.” என்று அருள் புரிந்து மறைந்தார்.
இந்த திருக்கதையை சிவமகா புராணம் பூர்வபாகம், உபமன்யு பக்தவிலாசம், மகா ஸ்காந்தம், நாரதம், லிங்க புராணம் ஆகிய ஞானநூல்கள், சிற்சில மாறுதலுடன் விரிவாக விளக்குகின்றன.
தமிழில் கந்தபுராணம், அருணகிரிபுராணம், சிவராத்திரி புராணம், அருணாசல புராணம் ஆகியவற்றிலும் இந்தத் திருக்கதையைக் காணலாம்.
இக்கதையையொட்டியே, பிரம்மனுக்காக தாழம்பூ பொய்யுரைத்து சாபம் பெற்ற கதையும் கூறப்படுவது உண்டு. பின்னர், தாழம்பூ தனது தவறை உணர்ந்து சிவனாரிடம் விமோசனம் கேட்க, `சிவராத்திரி அன்று மட்டும் தமக்கான பூஜையில் தாழம்பூ இடம்பெறும்’ சென்று சிவனார் அருள்புரிந்ததாகவும் ஒரு திருக்கதை உண்டு.
சிவராத்திரி வழிபாடு தோன்றியதற்கான காரணக் கதைகளைப் படித்தறிந்தோம். இனி, சிவராத்திரியின் வகைகள் மற்றும் சிவராத்திரி வழிபாடு குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
சிவராத்திரியின் வகைகள்
சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை: நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாக சிவராத்திரி.
நித்ய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறைகளில், சதுர்த்தசி திதி இடம்பெறும் நாட்களில் வரும் இரவுகள் நித்ய சிவராத்திரி ஆகும். அதேபோல், தினமும் இரவு அர்த்தஜாம பூஜை நடைபெறும் காலத்தையும் நித்ய சிவராத்திரி என்று சொல்வது உண்டு.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படுவது, மாத சிவராத்திரி ஆகும். இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும். அந்த விவரமும், குறிப்பிட்ட அந்த தினங்களில் வழிபட்டு சிவனருள் பெற்றவர்களின் பட்டியலும் வருமாறு:
சித்திரை – தேய்பிறை அஷ்டமி. இந்த தினத்தில் உமாதேவி வழிபட்டு அருள்பெற்றாள்.
வைகாசி – வளர்பிறை அஷ்டமி; சூரியன்.
ஆனி – வளர்பிறை சதுர்த்தசி; ஈசானன்.
ஆடி – தேய்பிறை பஞ்சமி; முருகன்.
ஆவணி – வளர்பிறை அஷ்டமி; சந்திரன்.
புரட்டாசி – வளர்பிறை திரயோதசி; ஆதிசேஷன்.
ஐப்பசி – வளர்பிறை துவாதசி; இந்திரன்.
கார்த்திகை – வளர்பிறை சப்தமி மற்றும் தேய்பிறை அஷ்டமி; சரஸ்வதி.
மார்கழி – வளர்பிறை சதுர்த்தசி மற்றும் தேய்பிறை சதுர்த்தசி; லட்சுமி.
தை – வளர்பிறை திரிதியை; நந்தி.
மாசி – தேய்பிறை சதுர்த்தசி; தேவர்கள்.
பங்குனி – வளர்பிறை திரிதியை; குபேரன்.
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, தொடர்ந்து 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது, `பட்ச சிவராத்திரி’ எனப்படும்.
யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகை உண்டு. அதன் விவரம்:
1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி)அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.
2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பதும் யோக சிவராத்திரி ஆகும்.
3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணி முதல் 6 மணி வரை) அரை நாழிகைப் பொழுது அமாவாசை இருந்தாலும் அது யோக சிவராத்திரி ஆகும்.
4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருப்பதும் யோக சிவராத்திரி.
இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.
மாக சிவராத்திரி: மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே `மாக’ சிவராத்திரி. இதையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.
‘ராத்திர’ என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம். இதனால், இம்மையில் சுகானந்த வாழ்வையும், மறுமையில் சுகப் பேரானந்த வாழ்வையும் பெற்றுச் சிறக்கலாம்.
இனி, மகிமைகள்மிகு மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில், சிவனாரை வழிபடுவதற்கு உரிய நியதிகள் மற்றும் விரத தாத்பர்யங்கள் குறித்து விளக்கமாக அறிவோமா?
மகா சிவராத்திரி வழிபாடு!
சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும்.
மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பிறகு, சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
சிவாலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும் அல்லது சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.
சிவராத்திரி புண்ணிய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். ஓவ்வொரு கால பூஜைக்கும் சில குறிப்பிட்ட நியதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலத்துக்கும் உண்டான நியதிகளைப் பற்றிப் பார்ப்போம்.
முதல் காலம்
முதல் காலத்தில் சிவபெருமானுக்கு அனைத்து விதமான திரவியங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும். பொதுவாக, சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நான்குகால பூஜை வேளையிலும், அனைத்துவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும் என்பது சாஸ்திரம். ஆனாலும், ஒவ்வொரு காலத்துக்கும் ஓர் அபிஷேகம் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் காலத்தில் விசேஷமான திரவியமாக சொல்லப்பட்டு இருப்பது பஞ்சகவ்யம். இந்த பஞ்சகவ்யத்தை தயாரிப்பது பற்றியும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
‘பஞ்சகவ்யம்’ என்பது பசுவிலிருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்களைக் குறிப்பது ஆகும். பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் முறைப்படி ஒவ்வொரு படி எடுத்துக்கொள்ளவும். பிறகு நடுவில் பசுவின் பாலையும், அதன் கிழக்கே தயிரையும், தெற்கே நெய்யையும், வடக்கே கோமியத்தையும், மேற்கே பசுவின் சாணத்தையும் வைத்து, முறைப்படி நடுவே ஈசானன், கிழக்கே தத்புருஷன், தெற்கே அகோரன், வடக்கே வாமதேவன், மேற்கே ஸத்யோஜாதன் என்பதாக இறைவனின் ஐந்து நாமாக்களையும் கூறி பூஜிக்கவேண்டும். பின்னர் பசுவின் சாணத்தை எடுத்து, கோமியத்தில் இட வேண்டும். அடுத்து இந்தக் கலவையை பசுநெய்யில் சேர்க்கவேண்டும். பிறகு, இந்த மூன்றும் சேர்ந்த கலவையை பசுந் தயிருடனும் கலந்தபிறகு, நிறைவாக அனைத்தையும் பசும்பாலில் கலந்துகொள்ளவேண்டும். இப்படி பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் உரிய மந்திரம் சொல்லி கலக்கவேண்டும். தெரியாதவர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.
பஞ்சகவ்யம் தயாரானதும், அதில் சிவபெருமானை ஆவாகனம் செய்து, அந்த பொருளை பூஜிக்கப்பட்ட ஒரு விசேஷத் திரவியமாகக் கொள்ள வேண்டும். இந்த பஞ்சகவ்யம் அபிஷேக திரவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.
இந்த பஞ்சகவ்யத்தை நாம் வெவ்வேறு வண்ண பசுக்களிடமிருந்து பெற வேண்டும். பால் சிவப்புநிற பசுவிலிருந்தும், தயிரானது வெண்மை நிற பசுவிலிருந்தும், நெய்யானது சாம்பல் நிற பசுவிலிருந்தும், கோமியம் கறுப்பு நிற பசுவிலிருந்தும், பசுஞ்சாணம் பலவர்ணமுடைய பசுவிலிருந்தும் பெறப்பட வேண்டும். ஒருவேளை அப்படி கிடைக்காவிடில், அனைத்தையும் கறுப்பு வண்ண பசுமாட்டிலிருந்து இவற்றைப் பெறலாம்.
முதல் கால அபிஷேகம் முடிந்ததும் ஸ்வாமியின் திருமேனியில் சந்தனம், தேன் கலந்து தடவவேண்டும்.
முதல் காலத்துக்கு உரிய விசேஷ அபிஷேகப் பொருளாக பஞ்சகவ்யம் திகழ்வதுபோன்று, விசேஷ பூக்கள், வஸ்திரம், நைவேத்தியம் முதலானவை குறித்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவை:
வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டு
மாலை: வில்வம்
தூபம்: சந்தனக் கட்டைளைத் தூள் செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பருப்பும் நெய்யும் சேர்த்த அன்னம்.
பாராயணம்: ரிக்வேதம் மற்றும் சிவபுராணம்
.
இரண்டாவது காலம்
இரண்டாவது யாமத்தில் அனைத்துவித திரவியங்களால் அபிஷேகம் செய்வதுடன், விசேஷ திரவியமாக பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவேண்டும்.
இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ரச பஞ்சாமிர்தம், மற்றொன்று பழ பஞ்சாமிர்தம். நாம் பார்க்கின்ற இந்த சிவராத்திரியிலே இரண்டாவது காலத்திலே சொல்லப்படுகிற பஞ்சாமிர்தம் ரச பஞ்சாமிர்தம். ரசம் என்றால் திரவநிலை.
சிவப்பு பசுவிலிருந்து பெறப்பட்ட பாலை நடுவில் வைக்கவேண்டும். பின்னர், வெள்ளை பசுவின் பாலில் உருவான தயிரை கிழக்கிலும், சாம்பல் பசுவின் பாலில் பெறப்பட்ட நெய்யை தெற்கிலும், அச்சுவெல்லம் அல்லது தூள்சர்க்கரையை வடக்கிலும், தேனை மேற்கிலும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு முன்னர் சொன்னதுபோன்று சிவமந்திரம் அல்லது சிவநாமம் சொல்லி பூஜித்து அவற்றை கலந்துகொள்ளவேண்டும். இந்தக் கலவைக்கே ரச பஞ்சாமிர்தம் என்று பெயர். இயலாவிடின், ஐவகை பழங்களைக் கொண்டு பழ பஞ்சாமிர்தத்தால் அபிஷேகித்தும் வழிபடலாம்.
இரண்டாம் கால அபிஷேகம் முடிந்ததும், பச்சைக் கற்பூரம் அரைத்து சுவாமியின் திருமேனியில் பூசவேண்டும்.
வஸ்திரம்: மஞ்சள் வண்ண வஸ்திரம்.
மாலை: குருந்த மர இலைகளால் ஆன மாலை. துளசியால் அர்ச்சனை செய்யலாம்.
தூபம்: சாம்பிராணியும் குங்கிலியமும் கலந்து தூபம் இடவேண்டும்.
தீபம்: இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பாயசம்.
பாராயணம்: யஜுர் வேத பாராயணமும் எட்டாம் திருமுறையில் கீர்த்தித் திருவகவலும் பாராயணம் செய்யவேண்டும்.
மூன்றாம் காலம்
மூன்றாம் யாமத்தில் அதாவது காலத்தில், சிவபெருமானுக்கு அனைத்துவிதமான திரவியங்களுடன், விசேஷமாக தேனபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்ததும், கஸ்தூரி சேர்த்த சந்தனத்தை ஸ்வாமிக்குப் பூசவேண்டும்.
வஸ்திரம்: வெள்ளை வஸ்திரம்.
மாலை: கிலுவை இலை மற்றும் விளா இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையும் ஜாதிமுல்லை மாலையும் மூன்றுதள வில்வத்தால் அர்ச்சிக்க வேண்டும்.
தூபம்: குங்கிலிக பூவினால் தூபம் போடவேண்டும்
தீபம்: நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நைவேத்தியம்: மாதுளை, எள் அன்னம்.
பாராயணம்: சாம வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாவது திருமுறையில் திருவண்டகப் பகுதி பாராயணம் செய்யவேண்டும்.
நான்காம் காலம்
நான்காம் கால பூஜையின்போது, கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவேண்டும். புனுகு, சந்தனம் சேர்த்துப் பூசவேண்டும்.
வஸ்திரம்: பச்சை அல்லது நீலவண்ண வஸ்திரம்.
மாலை: கருநொச்சியினால் அலங்காரம் செய்து, வெள்ளை நந்தியாவட்டையால் ஆன மாலையை அணிவிக்கவேண்டும். மேலும் நிறைய புஷ்பங்களால் அலங்கரிக்கவேண்டும்.
தூபம்: கற்பூரம் மற்றும் லவங்கப்பட்டையைப் பொடி செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நைவேத்தியம்: வாழை முதலான அனைத்துவகைப் பழங்களும், சர்க்கரைப்பொங்கலும் படைக்கலாம்.
பாராயணம்: அதர்வண வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்யவேண்டும்.
ஐந்தெழுத்து மகிமை!
சிவபெருமானை நாள்தோறும் திருவைந்தெழுத்து ஜபித்து வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். முறைப்படி தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருவைந்தெழுத்து ஜபிக்க முடியும். ஆனால், சிவராத்திரி அன்று மட்டும் முறைப்படி தீட்சை பெறாதவர்களும் பஞ்சாட்சரத்தையோ அல்லது காரண பஞ்சாட்சரத்தையோ ஜபித்து சிவபெருமானை வழிபடலாம்.
நமசிவாய எனும் திருவைந்தெழுத்தில், `சிவ’ என்ற இரண்டு எழுத்து காரண பஞ்சாட்சரமாகும். இந்த இரண்டு எழுத்தைச் சொன்னாலும் நமக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கும்.
ஐந்தெழுத்தைச் சொல்லும்போது, `ஓம்’ என்ற பிரணவத்தை முதலிலும், `நம’ என்ற போற்றும் பதத்தை நிறைவிலும் சேர்ப்போம். ஆனால், `சிவ’ என்று உச்சரிக்கும்போது அவை தேவையில்லையாம். `சிவ’ என்ற அந்த இரண்டு எழுத்தை பேச்சுவாக்கில் சொன்னாலும் அதற்கான பலன் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள்.
உதாரணத்துக்கு குழந்தை பசியால் அழுகிறது. அதற்கு நாம், ‘பசி வந்துவிட்டது குழந்தை அழுகிறது’ என்கிறோம். அப்படி சொல்லும்போது ‘பசி’ என்ற சொல்லின் இறுதி எழுத்தும் ‘வந்துவிட்டது’ என்ற சொல்லின் முதல் எழுத்தும் சேர்ந்து ‘சிவ’ என்று மாறி, நம் பாவங்கள் விலகிப்போகின்றனவாம்.
திருமூலரும், ‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்று சொல்லி இருக்கிறார். நாமும், எப்போதும் சிவநாமம் கூறி, சிவனருள் பெறுவோம்.
மகிமையைச் சொல்லும் திருக்கதை!
அங்குலன் என்றொரு வேடன் இருந்தான். தரையில் மட்டுமின்றி விருட்சங்களிலும் வலைவிரித்து விலங்குகளைப் பிடிப்பதில் வல்லவன் அவன்.
அழகான மனைவி, அறிவுமிகுந்த குழந்தைகள் என அமைதியாக சென்றது, அங்குலனின் வாழ்க்கை.
ஒரு நாள்… அங்குலன் தனது வழக்கப்படி வலைகளை விரித்து விட்டுக் காத்திருந்தான். பறவைகளோ விலங்குகளோ எதுவும் அவற்றில் சிக்கவில்லை. சின்னஞ்சிறிய அணில்கூடச் சிக்கவில்லை. அங்குலன் வருந்தினான். அவன் வருத்தத்தை மேலும் அதிகமாக்குவது போல, சூரியனும் மறையத் தொடங்கினான். ஆனாலும் வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்ப மனம் இல்லாத அங்குலன், ‘இன்று இரவு இங்கேயே தங்கி, நாளைக்கு ஏதாவது கொண்டுபோக வேண்டும்’ என்று தீர்மானித்தான்.
எனவே, காட்டிலேயே ஒரு குளத்தங்கரையில் இருந்த வில்வ மரத்தின் மீது ஏறி வாகாக உட்கார்ந்தான். இரவில், குளத்தில் நீர்ப் பருக வரும் விலங்குகளை வேட்டையாடலாம் என்று காத்திருந்தான். ஆனால், வெகுநேரம் ஆகியும் விலங்குகள் எதுவும் அந்தப் பக்கம் வருவதாகத் தெரியவில்லை. தூக்கம் வேறு கண்ணைச் சுழற்றியது அங்குலனுக்கு.
`தூக்க கலக்கத்தில் மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் என்னாவது’ என்ற பயத்தில், ஓர் உபாயம் செய்தான். தூக்கத்தைக் கலைக்கும் விதமாக, மரத்தில் இருந்து வில்வ இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழேபோட்டான்.
அவ்வளவு இலைகளும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
காற்று அதிகமாக வீசாத காட்டுப் பகுதியானதால் ஸ்வாமியின் மீது விழுந்த வில்வ இலைகள் அப்படியே, யாரோ ஒருவர் பொறுப்பாகப் பூஜை செய்து அலங்கரித்ததைப் போல் இருந்தது.
பொழுது விடிந்தது. ஒரு விலங்குகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப்போன அவன், வேறு வழியின்றி வீடு திரும்பினான்.
இரவு முழுவதும் கணவன் வராததால் பரிதவித்துக்கொண்டிருந்த அங்குலனின் மனைவி, காலையில் அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்தாள்.
அதுசரி! கதையின் முடிவென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது!
மிக அற்புதமான பலன் கிடைத்தது அங்குலனுக்கு. ஆமாம்! வாழ்நாள் முடிவில் அங்குலன், சிவ கணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான்.
`எப்படி…’ என்கிறீர்களா?
காட்டில் அங்குலன் பகல் பொழுது முழுவதும் சாப்பிடாமல் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, மரத்தின் மேல் இருந்தபடி வில்வ இலைகளை உதிர்த்தது எல்லாமும் நடந்தது ஒரு சிவராத்திரி நாளில். அதன் விளைவாகத்தான் அங்குலனுக்கு சிவ கணங்களில் ஒருவராகும் பேறு கிடைத்தது. அறியாமல் செய்த வழிபாட்டுக்கே இப்படியொரு பலன் என்றால், பலன் அறிந்து பக்தியுடன் செய்யும் வழிபாட்டுக்கான மகிமையைச் சொல்லவும் வேண்டுமா?
இப்படிச் சிவனருள் பெற்ற வேடன் குறித்த கதைகள் வேறுசிலவும் உண்டு.
ஒரு சிவராத்திரி தினத்தில், வேட்டைக்காக வில்வ மரத்தின் கிளையில் காத்திருந்தான் வேடன் ஒருவன். அன்றைய இரவின் மூன்று காலங்களிலும் முறையே இரண்டு பெண் மான்களும், ஒரு ஆண் மானும் அந்த இடத்துக்கு வர, வேடன் ஒவ்வொரு முறையும் வில்லில் அம்பு பூட்டி குறிபார்க்கும் தருணத்தில், மான் ஒவ்வொன்றும் தமது கடமையை நிறைவேற்றிவிட்டு வருவதாகக் கூறிச் சென்றன.
சொன்னபடியே அவை வந்து சேர்ந்ததைக் கண்ட வேடன், மனம் நெகிழ்ந்து அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் சிவதரிசனமும் அருளும் கிடைத்ததாகவும் கதை நீளும்.
அவன் ஒவ்வொரு முறையும் வில்லில் அம்பு பூட்டி குறிபார்த்த வேளையில், அவனுடைய அசைவால் வில்வ இலைகள் உதிர்ந்து மரத்தடியில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் விழுந்தன என்றும், வேடன் இடையில் கட்டிவைத்திருந்த குடிநீர்க் குடுவையில் இருந்த தண்ணீர் விழுந்து லிங்கத் திருமேனியை அபிஷேகித்தது என்றும் இந்தக் கதை விவரிக்கும்.
இப்படி தன்னையுமறியாமல் வில்வார்ச்சனையும், அபிஷேகமும் செய்த அந்த வேடன், பெரும் புண்ணியம் பெற்றான். ஆம்! அவன் மறுபிறவியில் குகனாகப் பிறந்து, ஸ்ரீராமனே தன் சகோதரனாக ஏற்கும்வண்ணம் பேறு பெற்றான் என்றும் ஒரு திருக்கதை சொல்லப்படுகிறது.
சிவராத்திரியில் `லிங்கோற்பவ’ வழிபாடு!
திருவாதிரை தினத்தில் நடராஜப் பெருமானையும், உமா மகேசுவர விரத காலத்தில் உமாமகேசுவரரையும், திரிசூலவிரதத்தின்போது அஸ்திர தேவரையும் வழிபடுவது போன்று, சிவராத்திரி தினத்தில் லிங்கோற்பவ மூர்த்தியை வழிபடவேண்டும்.
சிவராத்திரி புண்ணிய தினத்தில் நான்குகால பூஜைகள் நிகழும். இதில் 3-வது காலம் லிங்கோற்பவ காலம்.
சிவனாரின் திருவடிவங்களில் ஒன்றான லிங்கோற்பவ மூர்த்தி வடிவத்துக்குக் காரணமாக, அயனும் அரியும் அடிமுடி தேடிய திருக்கதையைச் சொல்வார்கள்.
சிவராத்திரியில் லிங்கோற்பவ காலத்தில்தான், சிவபெருமான் நெருப்புத்தூண் நடுவில் இருந்து மான், மழு, அபய வரத முத்திரைகளுடன் தோன்றி அருள்பாலித்தார்.
லிங்கம் என்ற சொல்லுக்கு உருவம் என்பது பொருள். அங்ஙனம் உருவம் தாங்கி சிவனார் வெளிப்பட்டு அருள்பாலித்ததால், இது லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது.
லிங்கோற்பவ திருவடிவில்… லிங்க மூர்த்தியின் மையத்தில் அழல் போன்ற பிளவில் தனித்த சந்திரசேகரமூர்த்தி எழுந்தருளியிருக்க, பிளவினைச் சுற்றி அக்னிச் சுடர்கள் காட்டப்படுகின்றன. பெருமானின் பாதமும், உச்சியும் காட்டப் படுவதில்லை. இதன் மூலம் முதலும் முடிவுமற்ற நிலையில் அவர் இருப்பது உணர்த்தப்படுகிறது.லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், உச்சியில் அன்ன வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்ம தேவனும் பெருமானின் அடிமுடிதேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் வலப்பகுதியில் பிரம்மதேவனையும் இடப்புறம் திருமாலையும்… இருவரும் சிவனாரை வழிபடும் பாவனையில் அமைப்பதும் உண்டு. இம்மூர்த்தியை புராணங்களும் கல்வெட்டுகளும் ‘லிங்க புராணமூர்த்தி என்றே குறிப்பிடுகின்றன. சிவாலயத்தில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடமாகும். ஆலயத்தின் மற்ற இடங்களில் லிங்கோற்பவ மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை.
‘லிங்கபுராணத் தேவரான’ லிங்கோற்பவரை கல் திருமேனியாக எழுந்தருளி வைப்பதே வழக்கமாகும். என்றாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் மனைவியால் செய்து அளிக்கப் பட்ட உலோகத் திருமேனியிருந்ததை கல்வெட்டு குறிக்கின்றது.
லிங்கோற்பவ வழிபாடும் தலங்களும்…
சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த மூர்த்திக்கு நெய்பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளித் துணிகள் அணிவித்து தாழைமடல்களால் அலங்கரித்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும் என்பர்.
ஆகமங்களில் சொல்லப்பட்ட வகையில் லிங்கோற்பவரை, பல்லவர்கள் கண்ட காஞ்சிக் கலைக்கோயில்கள் அனைத்திலும், வட ஆற்காடு மாவட்டம் குடிமல்லூரிலும் காணலாம்.
லிங்கோற்பவ மூர்த்தம் திருவண்ணாமலைத் தலத்தோடு தொடர்பு உடையதால் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர் ஆலயங்களில் இந்த மூர்த்தத்தைச் சற்று கலைநயத்துடனும் காவியநயத்துடனும் அமைத்துள்ளனர்.இக்காட்சியில் பின்னணியில் அண்ணாமலையும், அதன் மீது தீபமும் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து வெளிப்பட்டு தேவியுடன் கூடியவாறு இடபம் பின் நிற்க பெருமான் காட்சியளிக்கின்றார். இத்தகைய அமைப்பான லிங்கோற்பமூர்த்தியை எங்கும் காண முடியவில்லை.
பிள்ளையார்பட்டியில் உள்ள லிங்கோற்பவர், இரண்டு கரங்க ளுடன் காட்டப்பட்டிருக்கிறார்.
பொதுவாக லிங்கோற்பவ மூர்த்தியில் உள்ள சிவபெருமானை நான்கு கரங்களுடன் அவற்றில் மான், மழு, அபய, ஊரு முத்திரைகள் கொண்டவராகவே அமைப்பது வழக்கம். ஆனால் காஞ்சிபுரம் கயிலாசநாத கோயிலில் எட்டு கரங்களுடன் கூடிய லிங்கோத்பவரைக் காண்கிறோம். இவ்வடிவமும் வேறெங்கும் இல்லாததாகும்.

Sunday 25 November 2018

அருள்வடிவே! அண்ணாமலையானே!!

அருள்வடிவே! அண்ணாமலையானே!!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 திருவண்ணாமலை... நிலம், நீா், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் உலக மக்கள் உணா்வதற்காக இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் ஐந்து. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரா் (நிலம்), திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரா் (நீா்), திருக்காளத்தியில் காளத்தீஸ்வரா் (காற்று), சிதம்பரத்தில் சிதம்பரஸ்வரா் (ஆகாயம்), திருவண்ணாமலையில் அண்ணாமலையாா் (அக்கினி). இவற்றில், காஞ்சியில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, தில்லையில் தாிசிக்க முக்தி, ஆனால் ஜோதி வடிவான திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. எனவேதான் இதற்கு முக்திபுாி எனும் சிறப்பும் உண்டு. தலேச்சுரம், சிவலோகம், ஞானநகரம், சுத்தநகரம், கவுாிநகரம், தென்கயிலாயம், சோணாச்சலம், சோணகிாி, அண்ணாத்தூா், அருணாத்திாி, அருணச்சலம், அருணகிாி, அருணை, திருவருணை என்பதெல்லாம் திருவண்ணாமலையின் திருப்பெயா்கள்...
அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பு, உமையாளுக்கு இடப்பாகம் அருளிய அருளாளன், கிாிவலம் வரும் பக்தா்களுக்கு நலம் தரும் ஈசன், அண்ணாமலையாராக எழுந்தருளியிருக்கம் திருத்தலம் திருவண்ணாமலை, அண்ணாமலையின் அடியொட்டி, விண்ணுலக காட்சியாக பரந்து, விாிந்து, வானுயா்ந்த கோபுரங்கள் கொண்ட திருத்தலத்தில் அருளாட்சி நடத்துகிறாா், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாா்.
அக்கினி வடிவானஅண்ணாமலையாா் கோயிலில், காா்த்திகை மாதம் பவுா்ணமி நாளில் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போது காா்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவாக 10ம் நாளில் நடைபெரும் பரணி தீபமும் , மகா தீபமும் தாிசிக்க முற்பிறவி பயன்வேண்டும்.
தீபத்திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையாா் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.'ஏகன் அனேகன்' எனும் தத்துவத்தை உணா்த்தும் வகையில் , ஒரு மடக்கில் ஏற்றப்படும் தீபம் கொண்டு பஞ்சமுக தீபங்கள் ஏற்றப்படும். அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக, அண்ணாமலையாா் கோயில் தீப தாிசன மண்டபத்தில் பஞ்ச மூா்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்வாா்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அா்த்தநாரீஸ்வரா், ஆனந்த தாண்டவம் காட்டுவாா். அப்போது "அண்ணா மலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா" எனும் முழக்கம் விண்ணதிரும். மிகச்சாியாக மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடி மரம் எதிரே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதைத் தொடா்ந்து, மலை உச்சியில் மகா தீபம் பிரகாசிக்கும்.
பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே யாா் பொியவா் என எழுந்த சா்ச்சையின் போது, அடி, முடி காணாத விஸ்வரூப மூா்த்தியாக, ஜோதி வடிவாக சிவபெருமான் எழுந்தருளியது திருக் காா்த்திகை தினத்தன்று. எனவே, நான் எனும் அகந்தையை அழித்து, உள் முகத்தால் அத்வைத ஆண்ம ஜோதியை காண்பது தான் தீப தாிசனம். அதற்காகவே இறைவனின் திருவருளால் தீபத்திருவிழா நடைபெருகிறது.
மலையில் ஏற்றப்படும் மகா தீபம் தொடா்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும், தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டா் திாி (காடா துணி) பயன்படுத்தப்படும். பருவதராஜகுல வம்சத்தினா் தீபம் ஏற்றும் உாிமையை பெற்றுள்ளனா். தீபம் எாியும் 11 நாட்களும் மலை மீது முகாமிட்டு திருப்பணியை நிரைவேற்றுகின்றனா். தீபம் ஏற்றப்படும் பாரம்பாியமான கொப்பரை காலப்போக்கில் சேதமடைந்ததால், தா்போதுள்ள தீபக் கொப்பரை கடந்த 1991 ம் ஆண்டு,92 கிலோ செம்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவாக்கப்பட்டது. மகா தீப கொப்பரையின் உயரம் 57 அங்குலம், அடிவிட்டம் 27 அங்குலம், மேல்பாக விட்டம் 37 அங்குலம். 11 நாட்களுக்குப் பிறகு, அந்த கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டு, அதில் ஒட்டியிருக்கும் தீப மையை வழித்து பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகிறாா்கள்....

Thursday 15 November 2018

அனுமன் ஜெயந்தி

                                                                     அனுமன் ஜெயந்தி

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார். சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி அருகில் உள்ள தெய்வச் செயல்புரம் என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு. அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர்.
ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக் கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார்.அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை. நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. கண்டேன் சீதையை என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர். இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக் கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை எப்படி நான் திரும்பச் செலுத்துவேன். எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள் போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும் என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறான். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என்று, அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம் பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்.
குங்குமப் பொட்டு:
வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
வால் அறுபட்ட ஆஞ்சநேயர்:
ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார். பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.
பாலரூப ஆஞ்சநேயர்:
உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
யோக ஆஞ்சநேயர்:
வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.
யந்த்ரோத்தாரக அனுமன்:
ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது. அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.
ஜன்மபூமி ஆஞ்சநேயர்:
பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.
பிரபத்யாஞ்சநேயர்:
மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.
திரிநேத்ர சதுர்புஜ அனுமார்:
நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.
குபேர ஆஞ்சநேயர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம். இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்õலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.
பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்:
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.
அபயவரத ஆஞ்சநேயர்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
ஜெயமங்கள ஆஞ்சநேயர்:
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.
வீரஆஞ்சநேயர்:
கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்:
கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்:
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.
பக்த ஆஞ்சநேயர்:
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.
யோக நிலையில் ஆஞ்சநேயர்:
மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.
பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்:
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அநுமேசுவரர்:
சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.
சத்திய ஆஞ்சநேயர்:
செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

Monday 5 November 2018

தமிழுள் 96 தத்துவங்கள்

                                                    தமிழுள் 96 தத்துவங்கள் 

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


தமிழுள் 96 தத்துவங்கள்
ஓம் = அ+உ+ம் = 8*2*6 =96

எட்டு(8/அ)*இரண்டு(2/உ)*ஆறு(6/ம்)= ஓம் = 96 தத்தவங்கள். ஓம் என்னும் சொல் அ+உ+ம் என்ற முன்று எழுத்துக்களால் ஆனது. " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்குத் தொகை 8 x 2 x 6 = 96.
ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே

-ஆசான் திருமூலர்
(திருமந்திரம் 2627)
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

-ஆசான் திருமூலர்
(திருமந்திரம் 2628)
என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "

- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற ஆசான் வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
ஆசான் அகத்தீசப்பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- ஆசான் மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
- ஆசான் அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி ஆசான் யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்
"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "


என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி ஆசான் திருமூலர்,
"ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் "
என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம். 
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட வேண்டும்.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே "
- என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை ஆசான் காகபுசண்டர் பாடலில் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே .
...
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
பீரு முகமது அவுலியா ஆக்கிய ஞானக் கருவூலமாகிய “ஞானரெத்தினக் குறவஞ்சி”
ஞானரெத்தினக் குறவஞ்சி :
“அ” தமிழ் எண்ணிக்கை எட்டைக் குறிக்கும்.
இங்கே கெதியான(மூச்சான) “உம்” எழுத்து மவுனமாச்சு.
“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி
சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.
விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.
மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.
அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.
அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.
கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் - பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.
கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.
தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.
வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்
“அ”வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.
ஆக “அ”காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.
“அ”காரம் 12 பிரிவுகளாம்.
1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபரநாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
எட்டு எழுத்தாக எழுந்த எழுத்து என்னடி சிங்கி?
மட்டில் அடங்காத ஓம் எனும் ஓங்கார வட்டமாம்.


எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.


பிரம்மனின் தலை கொய்த பைரவர்! ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!

   பிரம்மனின் தலை கொய்த பைரவர்! ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


பிரம்மனின் தலை கொய்த பைரவர்! ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!
ஆதியில் சிவனும், பிரம்மாவும் ஐந்து தலைகள் கொண்டிருந்தனர். ஆனாலும் ஐம்முகங்களும் தனக்கே அழகாய் உள்ளது என்று எண்ணிய பிரம்மா கர்வம் கொண்டார். விளைவு தேவையில்லாமல் சிவனை நிந்திக்கத் தொடங்கினார்.
இதனை முதலில் கண்டும், காணாமலும் இருந்த சிவன், பொறுக்க முடியாத அளவுக்குச் சென்ற பின்னர், பிரம்மனைத் தண்டிக்க முடிவு செய்தார். எரிகிற கொள்ளியை இழுத்தால், அடுப்பு அணையும் அல்லவா..?

ஐந்து தலைகளாக இருப்பது அழகு என்ற எண்ணம்தானே பிரம்மனை ஆட்டிப் படைக்கிறது. அதில் ஒன்றைக் கொய்தால் என்ன என்ற சிந்தனை வயப்பட்ட சிவன், இந்த வேலையைச் செய்ய தன்னுடைய அஷ்ட பைரவர் கோலங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். ஒரு தலை போய் நான்கு தலையுடன் விளங்கிய பிரம்மனுக்கு, அன்று முதல் சதுர் முகன் என்ற பெயர் தோன்றியது. ருத்ர பைரவராகத் தோன்றிய சிவன், காண்பதற்குச் சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் மேல் நோக்கிய தலைமுடியுடனும் காட்சி அளித்தார். இந்தத் தலைமுடியில் செருகினாற்போலச் சந்திர பிரபை காணப்பட்டது.

தலைமுடியோ சுடும் ஜுவாலை. அதில் இருந்தது குளிர் நிலவு. என்னே ஒரு முரண் ?

நான்கு திருக்கரங்கள் கொண்ட அவரது கைகளில் உடுக்கை, சூலம், பாசக்கயிறு ஆகியன இருக்க, இவரது நான்காம் கரத்தில், இவர் கொய்த பிரம்மாவின் ஐந்தாம் தலை. பூத, பிசாசக் கூட்டங்களை அடக்கி ஆளும், தலைவராக விளங்குகிறார் பைரவர்.

அதனால், பூத, பிசாச பயங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள், இவரை வணங்குவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. ஆணவம் கொண்ட பிரம்மனின் கபாலத்தைக் கொய்ததால் ஆணவத்தை அடக்குவதற்காகவே தோன்றியவர்
, இந்த ருத்ர பைரவர் எனலாம். பிரம்மனின் தலை கொய்த நிகழ்வு நடந்தேறிய இடம் தமிழகத்தில் உள்ள திருக்கண்டியூர் என்பார்கள்.

சிவன் கோயில்களில் ஒற்றை நாயை வாகனமாகக் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தல் விசேஷம்.

சிறிய சிவப்புத் துணியில் சில மிளகுகளை இட்டுக் கட்டி, அதனை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இதற்கு மிளகு தீபம் என்று பெயர். ஒன்று அல்லது எட்டு என்ற எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும்.

ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!

வாழையிலை குளியலை

                                                         வாழையிலை
                                                            குளியலை

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/





💎 வாழையிலை
குளியலை

காய், கனி, பூ, தண்டு, வேர்க் கிழங்கு என்று அனைத்தையும் மனிதருக்கு அளித்து, அவர்களின் வாழ்வைக் காக்கும் அதிசய மரம் வாழை.
தற்காலத்தில் நடைமுறையில் உள்ள சூரிய குளியல் போன்று தான் முற்காலத்தில் சித்தர்கள் வாழையிலை குளியலை மேற் கொண்டுத்தான் 100 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகின்றது.

வாழை இலை குளியல் என்பது காலை வெயிலில், உடலில் துண்டுடன் கோரைப்பாயில் கிடந்து, தலையில் ஒரு ஈரத்துண்டை முண்டாசு போல கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வாழை இலை கொண்டு நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

மூச்சு விடுவதற்கு மட்டும் இலைகளை முகத்தின் அருகே சற்று விலக்கி விட்டு, குறைந்தபட்சம் அரை மணி நேரம் அந்த சூழலில் இருப்பதே, வாழை இலை குளியல்.

அவ்வப்போது இலைகளின் மேல் தண்ணீர் தெளித்து வர வேண்டும், நல்ல வியர்வை சுரக்கும், ஆயினும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், இடையிலேயே வெளியில் வந்து விடலாம்.

வாழை இலை குளியல் எதற்கு?
உடலில் உள்ள சுவாச கோளாறுகள், ஒவ்வாமை சரும பாதிப்புகள், கை கால் வீக்கம், உடலில் சேர்ந்த கெட்ட நீரால் ஏற்படும் வியாதிகள்
,
சிறுநீரக கோளாறுகள், உடல் சுரப்பிகளின் பாதிப்புகள், தசை நரம்பு பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் அனைத்தையும் சரிசெய்து,

உடல் எடையைக் குறைத்து, மனதுக்கு புத்துணர்வு கொடுத்து, உடலை பொலிவோடு, வலிமையாகவும் ஆக்கவல்லது.

குளியலுக்கு முன் நிறைய தண்ணீர் பருக வேண்டும், குளியல் முடிந்த பின் சிறிது இந்துப்பு கலந்த எலுமிச்சை தேன் சாற்றை, நிறைய தண்ணீர் விட்டு, நிதானமாக பருகிய பின், சற்று நேரம் கழித்து, வழக்கமான குளியலை மேற்கொள்வது நலம்.

குளியலுக்கு பின்னர், அன்றைய தினம் முழுவதும், பச்சையான பழ காய்கறி உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது இல்லையெனில் சிறிது அரிசி உணவு சேர்த்துக் கொள்ளலாம்.


தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...