இராசி மண்டலத்தை வட்ட வடிவமாக 360 பாகைகள் கொண்டு கணக்கிடுதலில் வாழ்வியலில் நமக்கு எல்லா வகைகளிலும் பொருந்தும் படியான நிலையில் பிரித்துக் காட்டியுள்ளார்கள்.
இதை இரவு பகல் கொண்ட ஒரு நாளாக நாம் பாவிக்கிறோம்..
1’= 4 நிமிடம்
360’* 4 = 1440
1440/60 = 24 மணி
360*60 = 21600
21600/9 = 2400
இப் பூமியில் பிறந்த ஆன்மாகள் ஜீவிதத்தோடு வாழ வேண்டுமானால் பஞ்ச பூத சக்திகளில் அதிமுக்கியமான பிராணன் வேண்டும்.
அந்த பிராணனையும் ஒரு நாளைக்கு 21600 சுவாசம் கொண்டதானால் அந்த ஜீவன் 120 ஆண்டுகள் வாழத்தகுதியா நதாகும்.
அதே போன்று முன்னோர் நாம் வாழும் இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு 5.5 செண்டு என்று 2400 சதுர அடி கொண்டதாக பிரித்துள்ளனர்.
காரணம் இந்த 2400 சதுர அடியை 9 ஆல் பங்கிட்டால் 21600 சுவாசம் வரும் (2400* 9).
அந்த இடத்தில் மனிதன் வாழ்ந்தால் த்ன் வாழ்நாளில் பூரணமாக வாழ் முடியும் என்று இயற்க்கையோடு கூடிய வாழ்வியலை நமக்கு போதித்துள்ளார்கள்.
காலே காற்றாய் காற்றே உயிராய்
காற்றின் அசைவே உயிரின் துடிப்பாய்
துடிக்கும் நாடி வினாடியாகி
நாளிகை நாளாய் திங்கள் ஆண்டாய்.....
கால் என்றால் காற்று. நாம் சுவாசிக்குக் பொர்ருட்டு நம் இதய துடிப்பானது இரவு பகல் 60 நாளிகைக்கு 21600 முறை துடிக்கும்.
இந்த துடிப்பை அளந்துதான் நம் முன்னோர்கள் கடிகாரத்தையும் கண்டு பிடித்து கால விதானத்தையும் கண்டு இன்று நேரம் கண்டு செயல்பட வழி வகுத்துள்ளர்கள்.
நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.
குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள்.
பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.
நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும்.
நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.
எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.

No comments:
Post a Comment