Wednesday, 31 December 2025

ஜோதிடத்தில் புத்திர தடையும், புத்திர தோஷமும்

 


ஜோதிடத்தில் புத்திர தடையும், புத்திர தோஷமும்:💫
✨புத்திர தடை என்பது திருமணம் ஆகி குழந்தை பேரானது தள்ளி போகும் அமைப்பையும் அதாவது குழந்தை பேரு அமைவதில் தடையோ அல்லது தாமதத்தையோ ஏற்படும் அமைப்பினை குறிக்கும்.
✨புத்திர தோஷமானது குழந்தை பாக்கியம் இல்லாமல் போதல் அல்லது பெற்ற பிள்ளைகளினால் மனக்கவலை அடைதல், பிள்ளைகளால் பிரயோஜனம் இல்லாத அமைப்பு, பிள்ளைகளை இழந்து தவிப்பது போன்றவற்றை குறிக்கும்.இந்த இரு அமைப்புகளுக்கும் சிறு வித்யாசம் உள்ளது.
✨ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்பது ஐந்தாம் பாவகம் ஆகும், ஐந்தாம் பாவக அதிபதி அந்த ஜாதகத்தில் புத்திர ஸ்தான அதிபதியாக வருவார், குழந்தைக்கு காரக கிரகம் குரு ஆவார்.
✨ஜோதிடத்தில் குழந்தை பேரு என்று வரும் பொழுது லக்னத்திற்கு ஐந்தாம் பாவகம், ஐந்தாம் பாவகத்தின் அதிபதி மற்றும் குரு போன்ற அனைத்தையும் ஆராய்ந்து பலன் எடுக்க வேண்டும். அதேபோல லக்னத்திற்கு பலன் எடுப்பது போலவே ராசிக்கு ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி போன்றவைகளை பொருத்திப் பார்க்க வேண்டும்.
✨இங்கு ஐந்தாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி பாவர்களால் பாதிக்கப்பட்டு, புத்திர காரகன் குரு வலிமையாக இருந்தாலும், அல்லது குரு பாவ கிரகங்களால் பாவ தன்மையை அடைந்து பாதிக்கப்பட்டு, ஐந்தாம் பாவகம், ஐந்தாம் பாவகாதிபதி வலிமையாக இருக்கும் நிலையில் தாமத புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.
✨புத்திரத்திற்கு காரக கிரகம் குருவாக இருந்தாலும் அதனை உருவாக்கும் விந்துவிற்கும் அதில் உள்ள உயிரணுக்களுக்கும் காரணமானது சுக்கிரன் ஆகும். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வலு குறையும் பொழுது விந்தணு உற்பத்தி சார்ந்த வகையிலும் அல்லது உயிரணுக்கள் சார்ந்த வகையிலும் புத்திரம் சார்ந்த தடைகள் அல்லது குறைகள் கட்டாயம் இருக்கும்.
✨பொதுவாகவே ஐந்தாம் பாவகத்தில் பாவ கிரகங்கள் இருப்பதும், ஐந்தாம் பாவகாதிபதி பாவ கிரகங்களின் தொடர்பினால் பாவத்தன்மை அடைவதும், புத்திரம் சார்ந்த யோகங்களுக்கு நன்மையை அளிக்காது.
✨ஒரு லக்னத்திற்கு ஐந்தாம் பாவக அதிபதி பாவ கிரகமாக அமைந்தாலும், ஐந்தாம் பாவகத்தினில் ஆட்சி பெற்று அமரக்கூடாது. ஏனெனில் ஐந்தாம் பாவக அதிபதியே ஆனாலும் ஒரு பாவ கிரகம் எனும் நிலையில் தான் அமரும் பாவகத்தை அந்த பாவ கிரகம் கெடுக்கவே செய்யும்.
✨ஒரு ஜாதகத்தில் புத்திர தோஷம் என்பது வெறும் குழந்தை இல்லாமல் இருப்பதை மட்டும் குறிக்காது, குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதும், தொடர்ச்சியாக குழந்தைக்கு உடல் நல பாதிப்பினால் பெற்றோர் மனம் வருந்தும் அமைப்பும்,பெற்ற பிள்ளைகளினால் பிற்காலத்தில் தொந்தரவுகளையும் அவமானங்களையும் அனுபவிக்கும் அமைப்பும், குழந்தை இருந்தும் பெற்றோர்களுக்கு பிரயோஜனம் இல்லாத அமைப்பு, பெற்ற பிள்ளைகள் தன் ஆயுளுக்கு முன்பாகவே அவர்கள் மரணம் அடையும் அமைப்பு போன்ற அனைத்துமே புத்திர தோஷமே.
✨ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகமும், ஐந்தாம் பாவகத்தின் அதிபதியும் வலுப்பெற்று, சுப கிரக தொடர்புடன் சுபத் தன்மையை அடைந்து, புத்திரக்கார கிரகமான குருவும் வலுப்பெற்று, பாவகிரகத் தொடர்பினை பெறாமல் இருக்கும் நிலையில், அந்த ஜாதகருக்கு குழந்தை சார்ந்த வகையில் மன நிறைவும், பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும்.
✨ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் பாவ கிரகங்களால் கெட்டு, ஐந்தாம் அதிபதியும் வலுவிழந்து பாவ கிரகங்களின் தொடர்பினால் பாவத்தன்மையை அடைந்திருக்கும் நிலையில், குருவும் வலுவிழப்பதும் அல்லது பாவ கிரகங்களால் பாதிக்கப்படும் போது புத்திரம் சார்ந்த தடைகளோ அல்லது குழந்தை பேரு இல்லாமல் போவதும் உண்டாகும்.
✨ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகமும், ஐந்தாம் அதிபதியும் வலுப்பெற்று இருக்கும் நிலையில், புத்திரக்காரக கிரகமான குருவானவர் பாவ கிரகங்களின் தொடர்பினால் பாவத்தன்மையை அடைவதும், அல்லது நீசம் போன்ற நிலையில் வலுவிழப்பதும் குழந்தை சார்ந்த வகையில் ஏதேனும் குறையினை ஏற்படுத்தும்.
✨ஐந்தாம் பாவம், ஐந்தாம் அதிபதி வலுப்பெற்று, குரு முழுவதுமாக கெடும் நிலையில் குழந்தை பேரு வகையில் தடையோ தாமதமோ ஏற்படுவது, அல்லது பெற்ற குழந்தைகளால் மனம் வருந்தும் அமைப்புகளை தருவது அல்லது பிள்ளைகளால் நன்மை அடையாத நிலையினை தருவது போன்ற பலன்களும், அதேபோல குரு மட்டும் வலுவிழந்து பாவ கிரகங்களால் பாவத்தன்மை அடையும் நிலையில் குறிப்பாக சனியினால் ஆபத்தன்மையை அடையும் பொழுது ஆண் வாரிசு தடையானது இருக்கும்.
✨இது போன்ற அமைப்புகளில் குரு முழுவதும் பாவத்தன்மை அடைந்து கெட்டு ,ஜாதகருக்கு குருவானவர் தசா நடத்தும் காலத்தில், குரு இருக்கும் பாவகத்தினை பொருத்து பிள்ளைகளால் பிரச்சனைகளை அனுபவிப்பது, பிள்ளைகளால் துன்பப்படுவது, பிள்ளைகளால் அவமானங்களை சந்திப்பது அல்லது பிள்ளையை இழப்பது போன்ற பலன்களானது ஆனது குரு தசாவானது தரும்.
✨ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதி பாதிக்கப்பட்டு, ஐந்தாம் பாவகமும், குருவும் சுப கிரக தொடர்புடன் சுபத்தன்மையை அடைந்து நல்ல நிலையில் இருப்பதும்.
✨ஐந்தாம் பாவகம் சனி, செவ்வாய், ராகு, அமாவாசை நிலையில் உள்ள சூரிய, சந்திரன் போன்ற பாவ கிரக தொடர்பினால், பாதிக்கப்பட்டு, ஐந்தாம் பாவகாதிபதி மற்றும் குருவும் நல்ல நிலையில் சுபத் தன்மையை அடைந்திருப்பது.
✨ஐந்தாம் பாவகம், ஐந்தாம் பாவக அதிபதி சுப கிரக தொடர்பினால் சுபத் தன்மையை பெற்று வலுப்பெற்று இருக்கும் நிலையில், குரு பாவ கிரக தொடர்பினால் பாவத்தன்மையினை அடைந்து வலுவிழந்து இருக்கும் அமைப்பானது புத்திரத் தடையினை குறிக்கும் அமைப்புகள் ஆகும்.
✨இது போன்ற அமைப்பானது ஒரு ஜாதகத்தில் இருந்து, குழந்தை தொடர்பான ஐந்தாம் அதிபதி, ஐந்தாம் பாவகம், குரு போன்றவர்கள் தொடர்பு கொள்ளும் தசா புத்திகளிலும்.
✨இவர்கள் இரண்டாம் பாவகத்துடன் தொடர்பு கொள்ளும் தசா புத்தியிலும் தடைகளுக்கு பிறகு குழந்தை பாக்கியமானது கிட்டும். ஆனால் பாதிக்கப்பட்டுள்ள அந்த கிரகத்தின் அல்லது பாவ அதிபதியின் தசா வரும் நிலையில் குழந்தை சார்ந்த வகையில் சிறிது பிரச்சனைகள் உண்டாகும்.
✨இதுவே ஐந்தாம் பாவகம் ஆனது சனி, செவ்வாய் , ராகு போன்ற பாவ கிரகங்களால் சூழப்பட்டு கடுமையான பாதிப்பு அடைந்திருக்கும் நிலையிலும், ஐந்தாம் பாவக அதிபதி முற்றிலுமாக வலுவிழந்து இருக்கும் நிலையிலும், ஐந்தாம் பாக அதிபதி முற்றிலும் வலுவிழந்து பாவ கிரக தொடர்பினையும் பெற்று முழுவதுமாக பாவத்தன்மையை அடைந்திருக்கும் நிலையிலும், புத்திர காரக கிரகமான குரு முற்றிலும் வலுவிழந்து, பாவ கிரகங்களால் பாவத்தன்மையை அடைந்திருக்கும் நிலையிலும்.
✨குடும்பஸ்தானமான இரண்டாம் பாவகம்,அதன் பாவகாதிபதி இவை யாவும் பாவ கிரகங்களால் பாவத்தன்மையை அடைந்தது வலுவிழுந்த பாதிக்கப்படும் நிலையில், புத்திர தோஷமானது ஏற்பட்டு குழந்தை இல்லாத அமைப்பும், ஒருவேளை குழந்தை இருந்தாலும் அந்த குழந்தைகளால் முழுவதுமாக மன கவலைகளும், குழந்தைகளால் நிம்மதியை இழப்பது, பிள்ளைகளால் பிரயோஜனம் இல்லாத நிலையையும் அல்லது குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட தசா புத்திகளில் குழந்தையை இழப்பது போன்ற பலன்கள் ஆனது நடைபெறும். இது வலுவான புத்திர தோஷ அமைப்பாகும்.
✨

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...