Saturday, 27 December 2025

வெண்ணையும் அதன் கொழுப்பும்


 வெண்ணையும் அதன் கொழுப்பும்...

பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணையிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோடின் இழப்பை வெண்ணை ஈடுகட்டுகிறது.
வெண்ணையில் உள்ள 'ஆன்டி ஆக்சிடன்ட்கள்' ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தியாவசிய தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணை உதவுகிறது. வெண்ணையில் உள்ள 'கொலஸ்ட்ரால்', மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள 'வைட்டமின் ஏ', கண்கள், தோலின் ஆரோக்கியம் காக்கிறது.
நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.
#பாலின் வகைகள்:
பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.பசும்புல்லை தீனியாக கொள்ளும் மாட்டின் பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பயறு சாப்பிடும் மாட்டின் பால் மந்த குணம் கொண்டது. குழந்தைகளுக்கு ஆகாது.
#பாலின் தன்மைகள்:
வெண்மை நிற பசுவின் பால் பித்தத்தையும், செம்மை நிற பசுவின் பால் வாதத்தையும், கருமை நிற பசுவின் பால் கபத்தையும் நீக்கும். காராம்பசுவின் பால் கண்நோய் மற்றும் மற்ற பாலின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். எருமைப்பால் புத்தி தெளிவின்மையை உண்டாக்கும். மருந்தின் குணத்தை கெடுக்கும். வெள்ளாட்டுப்பால் ஆஸ்துமா, வாத துன்பங்களை குறைக்கும். சீக்கிரம் செரிக்கும். நல்ல பசி உண்டாக்கும். செம்மறி ஆட்டுப்பால் ஆகாது. இதனை குடித்தால் வயிறு உப்புசம் ஆகும். மேல் சுவாசம் அதிகமாகும். குதிரைப்பால் விந்து பெருக்கத்தையும், புணர்ச்சியில் வன்மையும் உண்டாக்கும். யானைப்பால் வாதம் நீக்கும், மிகுந்த வன்மை உண்டாக்கும். தேக அழகு கூடும். எந்த பாலாக இருந்தாலும் கறந்து இரண்டரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அல்லது நன்கு காய்ச்சி அருந்த வேண்டும்.
பசும் வெண்ணெய்யில் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது. இயற்கையாக உருவாக்கப்படும் வெண்ணெய்யில் வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'டி', வைட்டமின் 'இ', துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் உள்ளது. 100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும். வரவிடாமல் தடுக்கும்.
வெண்ணெய் பயன் படுத்தும் போது பசி தூண்டப்படுகிறது. தோலின் நிறத்தையும், தன்மையையும் மேம்படுத்துகிறது. மூலநோயை குணப்படுத்துகிறது. வெண்ணெய்யுடன் மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். வெண்ணெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்பு வலுப்பெற சிறந்தது. இந்த நன்மைகள் எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்படும் வெண்ணெய் மூலம் கிடைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது.
வெண்ணெய்யை உருக்கி செய்யப் படுவது நெய். இதனை நம் முன்னோர்கள் "மோரை பெருக்கி, நெய் உருக்கி, நீர் சுருக்கி,” என்று சொன்னார்கள். நீர் சுருக்கி என்று சொன்னால் நீரை கொதிக்க வைப்பது என்று பொருள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும், அவை நன்கு செயல்படவும், கொழுப்பு மிகவும் அவசியம் என சித்த மருத்துவம் கூறுகிறது. இதையே தற்போதய நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் 200 மி.கி., கொழுப்பை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம்,
, எனக்கூறுகிறது. நல்ல நெய்யானது நல்ல மஞ்சள் நிறமாகவும், மணல், மணலாகவும் இருக்கும். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும். நல்ல பசுவின் நெய்யினால் தாகம், வாந்தி, வாதம், வயிற்று எரிச்சல், இருமல், மூலம் வறட்சி நீங்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.வைட்டமின் கே2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இருதயத்திற்கு சிறந்தது. உடற்பருமன் குறைய நெய், வெண்ணெய்யில் உள்ள ஆசிட் உதவுகிறது. எனவே தான் "நெய் இல்லா உணவு பாழ்” என பண்டைய உணவு முறை கூறுகிறது.
வெண்ணையில் அதிகமாக கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. குறைந்த அளவு விட்டமின் ஏ இருக்கிறது. வெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மை தீமைகளை காண்போம்.
எடைக் குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுக்கலாம். அதே போல குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
காச நோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது. வெண்ணையை அதிகமாக எடுத்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மையை குறைந்துவிடும். இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக பயன்படுத்துவது நல்லது.
வெண்ணையும் அதன் கொழுப்பும் எது வெல்லும்
கொழுப்பு என்பது உடலுக்கு தேவையான 6 ஊட்டச்சத்துகளில் ஒன்று. இது மனித உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்களுக்கு ட்ரிகிளிசரைட் என்ற ஒரு துணை குழு உண்டு.ரசாயன மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கான தொகுதிகள் உருவாவதற்கு கொழுப்புகள் தேவை. உடலின் எரிபொருளாகவும் இந்த கொழுப்பு பயன்படுகிறது. ஒரு மனிதன் கொழுப்புகளை உண்ணும்போது அதை உடல் பயன்படுத்தாமல், கொழுப்பு செல்களில் தக்க வைத்து கொள்கின்றன. உணவு இழப்பு ஏற்படும் வேளையில் உடல் இந்த தக்க வைத்த கொழுப்புகளை பயன்படுத்தி கொள்கின்றது.
சில வகை கொழுப்புகள் உடலுக்கு அவசியமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். முற்றிலும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது தவறான செயல். அதற்கு மாற்றாக நிறைவுறாத கொழுப்புகளை பயன்படுத்தலாம். கார்போ, புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான முதல் 3 சத்துகள் ஆகும். கார்போ ஆற்றலை கொடுக்கிறது. புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து உடல் காப்பீடாகவும், நரம்பு பூச்சாகவும், ஹார்மோன்களின் மென்மையான இயக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆகையால் முழுவதுமாக கொழுப்பு உணவுகளை ஒதுக்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான கலோரிகளின் 15-20% கொழுப்பு சத்துக்களாக இருக்க வேண்டும். அந்த கொழுப்பு சத்தில் நெய், வெண்ணை மற்றும் எண்ணெய் போன்ற கண்ணுக்கு தெரிந்த கொழுப்பு பொருட்களால் பாதி தேவையும் மற்ற உணவு பொருட்களில் மறைந்திருக்கும் கொழுப்பு சத்தால் மீதி தேவையும் பூர்த்தியாகின்றன. 3 பகுதி பல்நிறைவுறாத கொழுப்பு அமிலங்களும், 1 பகுதி நிறைவு கொழுப்பு அமிலங்களிலும் நல்ல ஆரோக்கியம் தரும். எந்த உணவை சாப்பிட்டாலும் கலோரிகள் கிடைக்கும். சமவிகித உணவில் ஒரு முக்கிய பொருளாக கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு அதிகரிக்கும்போது செல்களில் சேமிக்க பட்டு உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. ஆகவே கொழுப்பை பற்றி அதிகம் பதற்றம் கொள்ளாமல், ஓரளவுக்கு எடுத்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...