Monday, 29 December 2025

அங்காளி பார்த்து கொள்ளவாள்


 அங்காளி

பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இல்லாமல் போனதும் நினைவில் வைத்திரு
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் எத்தனை யாகம் செய்தாலும் தீராது எத்தனையோ உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ
சோகத்தைப் போக்க
வார்த்தைகள் தேவையில்லை
புரிந்து கொள்ளும் நொடிகள் போதும்!💖
உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தக்க மிகவும் துல்லியமாக தருபவர் தெய்வம்
எல்லாருக்கும் நல்லவனாவே இருக்கணும்னு மெனக்கெட்டே பாதி வாழ்க்கைய தொலைச்சிடுறோம்..
மீதி இருக்க வாழ்க்கையாவது பிடிச்ச மாதிரி வாழலாம்னு நினைச்சா நீ முன்னலாம் இப்படி இல்லையே இப்போ ஏன் இப்படி இருக்கேனு சொல்லிகாட்டியே அது தான் நாமனு நம்ப வச்சிடுறாங்க..
இதுல சந்தோஷமான வாழ்க்கைய தான் வாழுறோம்னு நாமலே சில நேரங்கள்ல நம்மல ஏமாத்திக்கிட்டு வாழ்ந்துட்டு
உங்கள் வாழ்க்கையை,
என்றும் நீங்கள்,
நிம்மதியாக வாழ,
வேண்டுமென்றால்,
நடந்தது மட்டுமல்ல,
இனி நடப்பதும்,
நன்மைக்கே என்று,
வாழ்ந்து பழகுங்கள்..
அவையும் அருளின் வெளிப்பாடே….!
சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றே.
விளக்கம்:-
உலக இச்சைகளை அழித்துவிட்டுச் சிவம் ஆனவர் உயிரின் ஐந்து மலங்களையும் நீக்கி விட்டவர். சிவத்துடன் இவ்வாறு பொருந்தாதவர் ஐந்து மலங்களை உடையவர். இவர்கள் உலகத்தில் வாழ்ந்து விட்டுச் சுவர்க்கம் அல்லது நரகம் சென்று விட்டு மீண்டும் உலகில் வந்து பிறவி எடுப்பர். இவர்கள் இப்படிப் பிறந்து உழல்வதும் அந்த சிவசக்தியரின் செயலால் என்பதை இவர்கள் உணர்வதில்லை.
இருக்கோம்..
“துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்” .
மாறா வருளரன் றன்னை மனவா லயத்திருத்தி
ஆறா வருளா லணிவிளக் கேற்றி யகமலராம்
வீறா மலரளித் தன்பெனு மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவாரே.
#நேற்று நல்லதே நடந்தால் இன்றையபொழுதை அனுபவிக்கின்றோம் ..
#இன்றும் நன்மையையே எதிர்கொள்ள போகின்றோம் ..
#நாளை அதிலும் நன்மையை சுவைக்கவே இருக்கின்றோம் ..
ஆகமொத்த நன்மையே நம் வாழ்வு ..
புரிந்த நன்மையென்றால் அது நல்லநாள் என்கின்றோம் !!
புரிந்துகொள்ள இருக்கும் நன்மை என்றால் அது கெட்டநாள் என்று அறியாமையில் சொல்கிறோம் !!
அறியாமையாவும் அறியவே வாழ்க்கை இட்டுச்செல்கிறது ..
நன்மை கடந்து வேறேதும் எப்போதும் செய்யத்தெரியா நல்லவனே இறையை இருந்து நம்மை நாமாக வைத்து காத்துக்கொண்டே இருக்க ..
நன்மைதானே அனைத்தும் ..
வாழ்த்துகள்
நன்மையை நன்மையென்று உணரவே நன்றாய் பிறந்து, நலமாய் வாழ்கின்றோம் ..
உணராத நன்மையை ( தீமை ) நன்மை என்றே உணர வாழ்த்துகள் !! நல்லவன் கருணையால் ..
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை உனது குடும்பத்தில் திரும்ப வரும்போது தெரியும் நீ செய்த என்ன என்று
*அப்பர் பெருமான் அருளிச் செய்த நான்காம் திருமுறை*
*பதிகம் - 110*
*பொதுத் திருப்பதிகம்*
*பசுபதித் திருவிருத்தம்*
*திருச்சிற்றம்பலம்*
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு நின் தாள் பரவி
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வனமுலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய் இருள் ஓடச் செந்தீ
அடும்பு ஒத்து அனைய அழல்மழுவா! அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரித் திரைப்பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு கால்
வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப்
பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்டாய் அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண்திசையும்
சுடர்த் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி
படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
அடலைக்கடல் கழிவான் நின் அடிஇணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்டாய் நறுங்கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்-சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து
படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!
துறவித்தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவித்தொழில்அது மாற்றுக்கண்டாய் மதில்மூன்று உடைய
அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்-
பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்
மத்தத்து அரக்கன் இருபதுதோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
*திருச்சிற்றம்பலம்*
*பறவை எவ்வளவு தூரம் பறந்தாலும் கூடு என்னவோ மரத்தில் தான்*
*அது போல் வாழ்க்கையில் பணத்தினால் ஆணவம் கொண்டு தாண்டவம் ஆடினாலும் மரணம் வந்தால் மண்ணில் தான்*
*ஒருவரின் மனம் தூய்மை இல்லையெனில்,பணமோ, பலமோ பலன் தராது*
*மண்ணில் வாழ தான் பணம் வேண்டும்*
*மற்றவர் மனதில் வாழ நல்ல குணம் இருந்தாலே போதும்*
*அதாவது தராசுகள் தரமென்றாலும்*
*தரமற்றவர்களின் கையில் நம் மதிப்பின் எடை கூடும், குறையும்*
*ஆகவே அடுத்தவரின் கணிப்பை கண்டு கவலைக் கொள்ளாதீர்கள்*
*சரி செய்து வாழ்வதை விட*
*சரியான செயலைச் செய்து வாழ்வதே*
*வாழ்க்கையின் சிறப்பு👍*

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...