Saturday, 27 December 2025

பிரபஞ்சத்தில் நாம்

 பிரபஞ்சத்தில் நாம்

இந்த பூமியில் எத்தனை கொண்டாட்டம் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது பிரபஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது, கடவுள் நீதி அதிசயமானது ஒருபுறம் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்து மறுபுறம் மனிதனை சிருஷ்டித்தார் மனிதன் கடவுளிடம் கேட்டான் என்னை படைத்தாய் எனக்கு என்ன கொடுத்து இருக்கிறாய் என்று
கடவுள் சொன்னார் இந்த பிரபஞ்சமே உன்னுடையது தான் என்றார்.
மனிதன் பிரபஞ்சமே நம்முடையதுதான் என்று சந்தோஷமடைந்தான்.
அதைக்கேட்ட பிரபஞ்சன் மிகவும் கோபமடைந்து வஞ்சக கடவுளே உன்னைப் போல் மோசம் செய்வது வேறுயாருமில்லை என்னையும் படைத்து மனிதனுக்கு அடிமை ஆக்கினாய் நான் என்ன குற்றம் செய்தேன் என்று முறையிட்டது.
அதற்கு கடவுள் சொன்ன உன்னை மானுடனுக்கு அடிமை ஆகவில்லை அவன் உன்னுடைய காவலாளி அவன் தேகத்தை பார் நீதான் இருக்கிறாய் அதனால் சர்வமும் உன்னுடையது தான் என்றார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது தேகம் இருக்கும் வரை அதில் ஜீவன் இருக்கும் வரை பிரபஞ்சம் நமக்கு தஞ்சம் ஜீவன் பிரிந்துவிட்டார் பிரபஞ்சத்துக்கு வஞ்சம்.
ஜீவன் சிவன் மூச்சு ஒலி என்றெல்லாம் பல்வேறு பரீட்சைகளில் அழைக்கின்றார்கள்.
ஒரு மகான் சொல்லுகிறார் வாசி என்றழைக்கப்படும் இந்த மூச்சை ஒளி என்று உறுதிபடக் கூறி வாசி எனும் ஒளியில் இருந்து ஒளியை பார்ப்பது ஞானதிருஷ்டி என்கிறார்!
எங்கேயோ சுற்றி எங்கேயோ வருவது போல் தோன்றுகிறதா என்ன செய்வது நம்முடைய மூச்சு 21600 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது அதனால்தான் நம் மூச்சு வரும் பேச்சு எத்தனை ஆயிரக்கணக்கான மயில் கடந்தாலும் கேட்கிறது.
பூமி கடலில் இருக்கும் காற்றை இழுத்து வெளிவிடுகிறது நம்முடைய சரீரத்தில் இருக்கும் ஜீவன் பூமியில் இருக்கும் காற்றை இழுத்து வெளிவிடுகிறது தீபம் அதன் ஒளியாகவும் உள்ளது

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...