Tuesday, 30 December 2025

பேய் திரைப்படமும் தாரை ரகசியமும்

 


பேய் திரைப்படமும் தாரை ரகசியமும்

===============================
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் வடிவம் பேய்/பூதம்/வேதாளம் ஆகும். மிருகசீரிடம் என்பது திருவாதிரையின் அதிநட்பு நட்சத்திரம். அதனால்தான், திருவாதிரை நட்சத்திர சிவபெருமான் பேய்கள் நடமாடும் மயானத்தில் இருக்கிறார். அவரை சுற்றி பூதங்களும் வேதாளங்களும் உண்டு.
இவை பயத்திற்கான உருவமல்ல; ஞானத்திற்கும், கருணைக்கும் வழிகாட்டும் அகோர தத்துவம்.
🔱 திருத்தொண்டர் புராணம் கூறுவது போல, காரைக்கால் அம்மையார், பேய் உருவம் எடுத்தே சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.
✨ காரைக்கால் அம்மையாரின் ஜென்ம நட்சத்திரம் – சுவாதி
✨ சுவாதியின் பரம மித்ர தாரை – மிருகசீரிடம்
👉 அதனால் தான் கயிலாய மலையை தலைகீழாக ஏற உதவியாக பேய் ரூபம் அமைந்தது. (படத்தை காணவும்)
👉 அதீத ஞானத்தில் உயர்ந்த அவரை, சிவபெருமானே “அம்மையே” என அன்புடன் அழைத்து, உரிய மரியாதை செய்தார் என புராணம் கூறுகிறது.
📌 முக்கிய தத்துவம்
அகோர ரூபங்கள் அனைத்தும் மிருகசீரிடம் சார்ந்த தாரை ரகசியங்கள்.
மேலும் மிருகசீரிடமும் – திருவாதிரையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நட்சத்திர கூட்டங்கள் ஆகும்.
🛕 ஆகவே பேய், பூதம் அல்லது வேதாளம் தோன்றும் திரைப்படங்களை அல்லது நாடகங்களை கண்டு வருபவர்களுக்கு
🌟 புகழ்
🌟 புத்திர பாக்கியம்
🌟 செல்வ வளம்
🌟 நல்ல உடல்நலம்
இவை கிடைக்கும்.
🔔 கீழ்க்கண்ட நட்சத்திர நபர்கள், பேய் அல்லது வேதாள அல்லது பூதங்கள் வரும் திரைப்படங்கள், காட்சிகள் அல்லது நாடகங்களை காண்பது பரிந்துரை செய்யப்படுகிறது.
• ரேவதி
• ஆயில்யம்
• கேட்டை
• பரணி
• பூரம்
• பூராடம்
• ரோகிணி
• அஸ்தம்
• திருவோணம்
• மிருகசீரிடம்
• சித்திரை
• அவிட்டம்
• திருவாதிரை
• சுவாதி
• சதயம்
• புனர்பூசம்
• விசாகம்
• பூரட்டாதி
🙏 பயப்பட வேண்டாம்… புரிந்து கொள்ளுங்கள்.
அகோர ரூபம் = அருளின் மறைமுக வடிவம்.
அது தான் பூத கணத்தின் ரூப தாரை ரகசியம்

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...