Tuesday, 30 December 2025

#ஒன்பதாம்_பாவம்


 #ஒன்பதாம்_பாவம்

ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகர் பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பார் . இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பார். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பார் . ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பார் .
ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகர் அதிகம் படித்தவனாகவும், செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பார் .
ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகர் நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும் இருப்பார்.
இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகர் தெனாவெட்டாக இருப்பார் . தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டார் . இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பார்.
லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது ஜாதகர் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பார்.
ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது அந்த யோகத்திற்குப் பெயர் தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள் ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம காரியங்கள் ஆகும்.
ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டமானவனர்.
ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால், ஜாதகன் துரதிர்ஷ்டமானவர்.
11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகர் அதிர்ஷ்டமானவர். வளமாக வாழக்கூடியவர். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர் களை உடையவர் . அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவர். கொள்கைப்படி நடப்பவர் . பெருந்தன்மை உடையவர்.
இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன் பல தர்மச் செயல்களைச் செய்வார். பலவிதமான சொத்துக்களை வாங்கிக்
குவிப்பார். பல நாடுகளுக்கும் சென்று வருவார் .
ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகர் பலவிதமான
துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின் தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல் ஜாதகர் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்.
லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை யில் இருந்தால், ஜாதகர் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர்.
ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத் துன்பங்கள்தான் ஏற்படும்.
சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத் திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகர், அவனுடைய பெற்றோர் களால் புறக்கணிக்கப்படுவார்.
ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும். ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும்.
ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக்
குறிக்கும் பிடிவாதக்காரனாகவும், முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பார் .
. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகர் இருப்பான்.
ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகர் விஞ்ஞானியாக அல்லது பெரிய இசை மேதையாக இருப்பார். கெட்டிக்காரனாக இருப்பார். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால் மேதையாக இருப்பார் .
ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகர் சிறந்த அறிவாளியாக இருப்பார் . நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பார்.. தந்தையுடன் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார் . பல அமைப்புக்களில் சிறப்பாக உரை யாற்றுபவனாக இருப்பார். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின் பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பார் .
ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகர் தனித்து வாழும்படி ஆகிவிடும். சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள ஜாதகர் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவார்.
ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது.
ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகர் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில் நிபுணனாக இருப்பார் . இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான பொருள் ஈட்டுவார். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய வனாக இருப்பார்.
ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகர் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவார்.
ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டமானவர். கல்வி, வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக் கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான்.
ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகர் அருமையாகப் பேசக்கூடியவனாக இருப்பார் . உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பார்.
ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகர் கடுகடுப்பான ஆசாமியாக இருப்பார். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.
ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.
ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு, போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும்

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...