Monday, 22 June 2026

தோஷம்,பித்ரு சாபம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்

பித்ரு தோஷம்,பித்ரு சாபம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்

 ♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்கினத்தில் குருபகவான் இருந்தாலும் சரி அல்லது லக்கனாதிபதியுடன் குரு பகவான் சேர்ந்திருந்தாலும் சரி இல்லையென்றால் லக்னத்தில் இருந்து ஒன்பதாம் பாவத்தில் குரு பகவான் இருந்தாலும் சரி இவர்களுக்குத்தான் பித்ரு தோஷம் முன்னோர்கள் சாபம் இருக்கிறது என்று அர்த்தம்.

♦கண்டிப்பாக இவர்கள் பிறப்பதற்கு முன்பாக இவர்கள் பரம்பரையில் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்காமல் இருந்திருக்கின்றார்கள் என்று அர்த்தம்.அதாவது சில பேருக்கு திதி கொடுக்கும் பழக்கத்தை இவர்களுடைய தந்தை விட்டு இருக்கலாம்.தந்தை ஒழுங்காக திதி கொடுக்காமல் இருந்திருக்கிறார் என்று அர்த்தம்.யாருக்கோ திதி கொடுப்பது விட்டிருக்கின்றது என்று அர்த்தம்.
♦இவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்றால் தாத்தா பாட்டி இவர்களுக்கு மட்டும் திதி கொடுத்து இருப்பார்கள் ஆனால் அற்ப ஆயுளில் இறந்து போனவர்களுக்கு இவர்கள் திதி கொடுக்காமல் விட்டிருப்பார்கள்.
திதி என்பது வெறும் தாத்தா பாட்டி இவர்களுக்கு மட்டும் கொடுப்பது கிடையாது அதாவது எல்லாவிதமான சுக துக்கம் இன்பம் துன்பங்களை ஆண்டு அனுபவித்த ஆத்மாக்களுக்கு திதி கொடுக்க வேண்டிய அவசியம் என்பது முக்கியத்துவம் என்பது கிடையாது அற்ப ஆயுளில் இறந்து போன ஆத்மாக்களுக்கு தான் மிக முக்கியமாக திதி கொடுக்க வேண்டும்.
♦அந்த வகையில் இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக அற்ப ஆயுளில் இறந்து போனவர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்திருப்பார்கள்.
♦இதற்கு என்ன ஆதாரம் என்றால் யாருடைய ஜாதகத்தை எல்லாம் இது போன்ற அமைப்பு இருக்கின்றது கண்டிப்பாக இவர்கள் தந்தை பரம்பரையில் தற்கொலை மரணங்கள்,விபத்தில் மரணங்கள், துர் மரணங்கள், அகால மரணங்கள் இதுபோன்று இறந்து போனார்கள் இவர்கள் பரம்பரையில் கண்டிப்பாக இருப்பார்கள் அதேபோன்று இரண்டு திருமணங்கள் செய்தவர்கள் இவர்கள் பரம்பரையில் கண்டிப்பாக உண்டு.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋பித்ரு சாபம் பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கும் என்றால்
♦இவர்களுக்கு வாழ்க்கையில் என்றைக்குமே நிம்மதி சந்தோஷம் சுகபோகம் என்பது அவ்வளவாக இருக்காது.தவறான சிந்தனைகள் தப்பான எண்ணங்கள் தான் இவர்கள் மனதில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.இவர்கள் கையில் என்றைக்குமே பணம் அவ்வளவாக தாங்காது நிற்காது பணம் சேமிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
♦இவர்கள் எடுத்து வைக்கக்கூடிய எல்லா விதமான முக்கியமான விஷயங்கள் செயல்பாடுகள் எல்லாம் இவர்களுக்கு தடைகளில் முடியும் தோல்விகளில் முடியும்.எதுவுமே இவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள்.காரிய தடைகள் என்பது பெரும்பாலான விஷயங்களில் இவர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
♦அதேபோன்று தன்னுடைய உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மூலமாகவும் தேவையில்லாத பிரச்சனைகள் தர்ம சங்கடங்கள் ஏமாற்றங்கள் இழப்புக்கள் அவமானங்கள் மன அழுத்தங்கள் மனவேதனைகள் என்பது இவர்களுக்கு அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
♦நமக்கு ஒரு பிரச்சனை என்று ஒன்று வந்தால் அந்தப் பிரச்சினையே நமக்கு வராமல் தடுப்பதற்கு இரண்டு பேர் மட்டும் தான் வருவார்கள் ஒன்று நம்முடைய பித்ருக்கள் இரண்டாவது நம்முடைய குல தெய்வம்.இந்த இரண்டு பேரின் ஆசீர்வாதமும் நமக்கு இருந்தால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
♦பித்ருக்கள் என்பவர்கள் கடவுளும் கிடையாது தீய சக்திகளும் கிடையாது இரண்டிற்கும் இடையில் இருப்பவர்கள்.அதாவது நமக்கு பிரச்சினை ஏற்பட்டால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அந்தப் பிரச்சினை வராமல் தடுப்பதற்கும் நம்முடைய பித்ருக்கள் தான் நேரடியாக கடவுளிடமிருந்து அந்த பிரச்சனைக்கான வழியை பெற்றுக் கொண்டு நமக்கு உதவுவார்கள்.அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு ஒழுங்காக இருக்க வேண்டுமென்றால் நாம் வருடாவருடம் நம்முடைய முன்னோர் களுக்கு ஒழுங்காக திதி கொடுத்தே ஆக வேண்டும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இது போன்ற அமைப்பு இருக்கின்றதோ நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இந்த சூட்சுமத்தை பொருத்திப் பாருங்கள் நான் சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு மிகச் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment

தோஷம்,பித்ரு சாபம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்

பித்ரு தோஷம்,பித்ரு சாபம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்   யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்கினத்தில் குருபகவான் இருந்தாலும் சரி அல்லது லக்கனாத...