காரிய வெற்றி தரும் வழிபாடு முருகனின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடு என்று நம் அனைவருக்கும் தெரியும். முருகனை பலவிதங்களில் வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு விதத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும்.
அதே போல் தான் முருகனின் கையில் இருக்கக்கூடிய வேலையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான வழிபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறலாம். மேலும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருகனின் அருள் மட்டும்தான் நமக்கு கிடைக்கும். இதே வேலை வழிபாடு செய்து விட்டோம் என்றால் முருகப்பெருமானின் அருளோடு பராசக்தியின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
எந்த ஒரு காரியத்தை செய்யப் போகிறோம் என்றாலும் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் வராமல் விரைவிலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்னும் பட்சத்தில் அந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து இந்த வேல் வழிபாட்டை தொடங்க வேண்டும்.
நம்முடைய வீட்டு பூஜை அறையில் கண்டிப்பான முறையில் முருகனின் திருவுருவப்படம் என்பது இருக்கும். அந்த படத்தில் முருகன் தன்னுடைய கையில் வேலை வைத்திருப்பார்கள். அந்த வேலை வைத்து நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். முதலில் முருகனின் திருவுருவப்படத்தை சுத்தமாக துடித்துக் கொள்ளுங்கள். முருகனுக்கு மட்டும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒன்று அல்லது ஆறு என்ற எண்ணிக்கையில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து “முருகா” என்ற திருநாமத்தை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு முருகனின் கையில் இருக்கக்கூடிய வேலின் அடியில் ஒரு சந்தன குங்கும பொட்டை வைக்க வேண்டும்.
இதேபோல் தினமும் முருகனின் வேலுக்கு கீழிருந்து மேலாக முருகா என்ற நாமத்தை 108 முறை கூறி சந்தன பொட்டு வைத்துக் கொண்டே வரவேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் விரைவிலேயே நல்ல விதத்தில் வெற்றிகரமாக நடைபெறும். எப்படி ஆஞ்சநேயரின் வால் வழிப்பாடு சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறதோ அதேபோல் முருகனின் வேல்வழிப்பாடும் பல மடங்கு நன்மைகளை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும்.
கஷ்டங்களை தீர்க்கும் குலதெய்வ வழிபாடு முருகனின் அருளையும் முருகனின் தாயான அன்னை பராசக்தியின் அருளையும் ஒருசேர பெற்று நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்திட வேல் வழிபாடு நமக்கு உறுதுணையாக இருக்கும்.

No comments:
Post a Comment