Saturday, 3 January 2026

உடைபட்ட நட்சத்திரங்கள் என்றால் என்ன?


 உடைபட்ட நட்சத்திரங்கள் என்றால் என்ன?

இரண்டு ராசிகளில் சம்பந்தப்படும் நட்சத்திரங்கள் உடைபட்ட நட்சத்திரங்களாகும்
சூரியனின் காலற்ற நட்சத்திரங்களான கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்
செவ்வாயின் உடலற்ற நட்சத்திரங்களான மிருசிரீடம்-சித்திரை-அவிட்டம்
குருவின் தலையற்ற நட்சத்திரங்களான புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி
இவை ஒன்பது நட்சத்திரங்களும் உடைபட்ட நட்சத்திரங்கள்
குருவுக்கு ஏன் தலையற்று போனது? குரு ஆகாய கிரகம். அறிவுக் கிரகம்.அறிவு வந்தாலே ஆணவம் கூடவே சேர்ந்து வரும்.அதனால்தானே பிரம்மனின் தலை கிள்ளப்பட்டது.
குருவுக்கு மற்றொரு குருவோ (சுய நடசத்திரங்கள்-புனர் பூசம்-விசாகம்-பூரட்டாதி)அல்லது புத்திசாலியோ (பாதகாதிபதி-புதனின் நட்சத்திரங்கள்-ஆயில்யம்-கேட்டை-ரேவதி)கூட இருக்க கூடாது.
அப்படி கூட்டாளியாக இருந்தால் குருவும் குருவும் குருட்டாட்டம் ஆடி இருட்டில் விழுவர்.குருவும் புதனும் சேர முடிவு தவறாக வரவைப்பதில் புதன் புத்திசாலித்தனமாக வேலை செய்துவிடும்.
சூரியனுக்கு காலற்றது ஏன்?
அக்னி-நெருப்பு நிரந்தரமானது-ஸ்திரமானது. விளக்கு-தீபம்-ஜோதி ஓரிடத்தில் இருக்க வேண்டியது.இவற்றை மற்றவர்கள் எடுத்து சென்றால் வழிகாட்டும்
ஆனால் இவை தானாக கால் முளைத்து நடந்து சென்றால் அழிவுதான் உண்டாகும்.
சூரிய அரசன் நிரந்தரமாக இருந்து ஆட்சி செய்ய வேண்டும்.அங்கும் இங்கும் அலையக்கூடாது.
குறிப்பாக காலாக விளங்கும் சனி(பூசம்-அனுசம்-உத்திரட்டாதி) துணையை நாடக் கூடாது.
இப்போது ஆட்சியில் உள்ள மகத்து சூரியன் அப்படித்தானே நடந்து கொள்கிறது
ஆனால் மகத்து சூரியனுக்கு 2-11க்குடைய புதனின் ரேவதி உதவிக்கு வருகிறது அல்லவா!
ஆனால் ஒன்று மகத்தின் எலி மீது கேது பிள்ளையார் உட்கார்ந்திருந்தாலும் கூட இந்த மகத்து சூரிய எலி ரேவதி என்ற பெண்யானை மீது அமர்ந்துள்ளது அல்லவா?
ஆக மகத்து எலி பெண்ணாகி ரேவதி யானையும் பெண்ணானால் அது சஷ்டாஷ்டகமாக இருந்தாலும் நட்பு பிரச்சனைகளோடு தொடரும்
மகத்து எலி பெண்ணாகி ரேவதி பெண்யானை ஆணாக இருந்தால் மகத்து பெண் ரேவதிஆணுக்காக உழைத்து கடைசியில் உயிரையும் இழப்பாள்.இதுவும் சஷ்டாஷ்டமத்தின் பலன்தான்.
செவ்வாய் உடலற்றது ஏன்?
செவ்வாய் வீரம் வேகம் தேகம் காமம் கொண்டது.ஏழாம்பாவ சுக்கிரனை கண்டாலே காதலும் காமமும் பொங்குவது.செவ்வாய் ஆண்சக்தி. அது பெண்சக்தியான மது-மாது-சூதுக்கு ஈர்ப்பாவது.
முதல் மரியாதை சிவாஜி இறக்கும் தருணத்தில் மீனவப்பெண் ராதாவின் கண்ணீர்த்துளி கால்களில் பட்டவுடன் ஒரு சிலிர்ப்பு காட்டுவாரே அது செவ்வாயின் வேலைதாங்க! அதற்கு முன் இளவட்டக் கல்லை தூக்க முயற்சி செய்வாரே அதுவும் செவ்வாயின் தேக காமத்தின் விளைவுதாங்க
செவ்வாயின் தேக காமத்தை குறைக்க அதை ராசி மண்டல நட்சத்திரங்களில் இரண்டாய் வெட்டி போட்டுட்டாங்க.
நடந்தது என்ன?
மகத்து எலி பெண்ணாகி ரேவதி பெண்யானை பெண்ணாக இருந்தால் மகத்து(ஜெ) பெண் ரேவதி(சசி) பெண்ணுக்காக/ உழைத்து கடைசியில் உயிரையும் இழப்பாள்.இதுவும் சஷ்டாஷ்டமத்தின் பலன்தான்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...