Saturday, 3 January 2026

வாயுவை விரட்டும் பெருங்காயம்!


 வாயுவை விரட்டும் பெருங்காயம்!

வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு வந்தா வயிறு புடைச்சிக்கிட்டு மூச்சுவிட முடியாம தவிக்கிற நேரத்துல கால் ஸ்பூன் பெருங்காயப்பொடியை மோர்ல கலந்து குடிச்சா 'ஏவ்...'னு ஏப்பம் வெளியேறும். அதோட வாயு வெளியேறி ஊதிக்கிட்டு இருந்த வயிறும் குறையும்.
தூக்கத்துக்கு சீரகம், வெங்காயம்!
சில காரணங்களால சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில வதக்கி, ராத்திரி 9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பலன் கிடைக்கும். 'வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்களா இருந்தா... சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.
கல்லீரல் காக்கும் விளாம்பழம்!
சாராயம், சரக்குன்னு குடிச்சி சிலபேரோட கல்லீரல் கெட்டுப்போய் கிடக்கும். இதுக்கு என்னென்னவோ சாப்பிட்டும் குணமாகலைனா விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே குணம் கிடைக்கும்.
தாய்ப்பால் பெருக்கும் உருளை!
உருளைக்கிழங்குன்னு சொன்னதுமே 'ஐயோ... அது வாயுவை உண்டாக்குமே'னு அலறி அடிச்சி ஓடாதீங்க. குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாம அவதிப்படுற தாய்மார் தினமும் உருளைக்கிழங்கை சாப்பாட்டுல சேர்த்துட்டு வந்தா, தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கும். உருளைக்கிழங்கை அவிச்சி... அதோட மிளகுப்பொடி, உப்பு, நெய் சேர்த்து சாப்பிடுங்க... எந்தப் பிரச்னையும் வராது.
சர்க்கரை நோய்க்கு மாங்கொழுந்து!
சர்க்கரை நோயாளிகள், யார் யாரோ சொல்றதை எல்லாம் சாப்பிட்டுட்டு வர்றாங்க. யாரும் சீண்டாத மாவிலைக் கொழுந்தை துவரம்பருப்பு, உப்பு சேர்த்து வேகவெச்சி சாப்பிட்டு வந்தா நோய் கட்டுக்குள்ள இருக்கும்.
மூக்குப் பிரச்னைக்கு முசுமுசுக்கை!
சளிப்பிரச்னை யாருக்கு, எப்போ, எப்பிடி வரும்னே தெரியாது, ஆனா, பிரச்னை வந்ததும் அதை ரொம்ப சுலபமா சரிபண்ண நிறைய வழிகள் இருக்கு. வேலிகள்ல வளர்ந்து கிடக்குற முசுமுசுக்கை இலையை காலையில தோசை மாவோட சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தாலே நிவாரணம் கிடைக்கும். இந்த இலை சாதாரணமா எல்லா இடங்கள்லயும் வேலிகள்ல வளர்ந்து கிடக்கும்....

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...