Saturday, 3 January 2026

ஜாதகத்தில் யாருக்கெல்லாம்

 ஜாதகத்தில் யாருக்கெல்லாம்

"(செவ்வாய்,கேது),(சந்திரன்,ராகு)
(குரு,சனி)" இந்த மூன்று கிரகச் சேர்க்கைகளில் ஏதேனும் ஒரு கிரக சேர்க்கை பெற்று இருப்பவர்களுக்கு அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரி பிரச்சினைகள்,குணங்கள் ஏமாற்றங்கள்,கஷ்டங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋1.(செவ்வாய்,கேது கிரகச் சேர்க்கை)
♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (செவ்வாய்,கேது) கிரகச் சேர்க்கை இருக்கின்றதோ அவர்களுக்கு வீடு வண்டி வாகனங்கள் சொத்து இது போன்ற விஷயங்கள் மீது விருப்பங்கள் ஆசைகள் அவ்வளவாக இருக்காது.இவர்கள் தங்கி இருக்கும் வீடு இவர்களுக்கு பிடிக்காது வீட்டில் இருப்பதற்கே ஆசைகள் விருப்பங்கள் அளவுக்கு அதிகமாக இருக்காது.ஏதோ நாம் வீட்டில் இருக்க வேண்டுமே இருந்தாக வேண்டுமே வேறு வழியிலேயே என்ற எண்ணத்தோடு தான் இவர்கள் இருப்பார்கள்.
♦வண்டி வாகனங்கள் இவர்களுக்கு ஓட்டுவதற்கே பிடிக்காது.ஏதோ ஒரு வேண்டா வெறுப்பான எண்ணத்தோடு தான் வண்டி வாகனங்கள் ஓட்டுவார்கள்.
வீடு வண்டி வாகனங்கள் சொத்து இதன் மீது இவர்களுக்கு பெரும்பாலும் ஆசைகள் விருப்பங்கள் அளவுக்கதிகமாக இருக்காது.
♦அதேபோன்று உத்தியோகத்திற்கு செல்வதற்கே இவர்களுக்கு பிடிக்காது வெறும் கடமைக்காக கடனுக்காக என்றுதான் இவர்கள் உத்தியோகத்திற்கு(job)வேலைக்கு செல்வார்கள்.உத்தியோகத்தில் வேலை பார்க்கவே இவர்களுக்கு பிடிக்காது.வெறும் கடமைக்காக கடனுக்காக என்றுதான் இவர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
உத்தியோகத்தில்(job) இவர்கள் எவ்வளவுதான் வேலை செய்தாலும் உழைத்துக் கொட்டினாலும் இவர்களின் திறமைக்கேற்ற முன்னேற்றம் வளர்ச்சி சம்பள உயர்வு பதவி உயர்வு என்பது இவர்களுக்கு வராது.
♦என்னை விட்டு விடுங்கள் நான் எங்காவது கண்கானாத இடத்திற்கு சென்று விடுகிறேன் எனக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்ற எண்ணங்கள் இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.
♦அதேபோன்று உத்தியோகத்திற்கு இவர்கள் செல்ல இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக வாழ்க்கையில் இவர்கள் உத்தியோகத்திற்கு செல்லக்கூடிய நிலைமைகள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.
அதேபோன்று உத்தியோகத்தில் வேலை செய்யும் மேல் அதிகாரிகள் சக ஊழியர்கள் இவர்களை வைத்து தேவையில்லாமல் அதிகாரம் செய்வார்கள்,அரசியல் செய்வார்கள் இவர்களை முன்னேற வளர உத்தியோகத்தில் யாருமே விட மாட்டார்கள்.
♦வம்பு வழக்கு அடிதடி சண்டைகள் கோர்ட்டு கேஸ் போன்ற விஷயங்களில் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற எண்ணங்கள் ஒரு பயம் தாழ்வு மனப்பான்மை அடிமை மனோபாவம் இது போன்ற எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♦தன்னுடைய பலத்தையும் வீரத்தையும் ஆக்ரோஷத்தையும் கோபத்தையும் என்றைக்கும் இவர்கள் வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தவே மாட்டார்கள்.யார் என்ன பேசினாலும் இவர்கள் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள்.அதாவது தன்னுடைய சுயமரியாதைக்கும் சுய கௌரவத்திற்கும் இவர்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋2.(சந்திரன்,ராகு கிரகச் சேர்க்கை)
🌹முதலில் சந்திர பகவானுடைய காரத்துவங்களை பார்க்கலாம்.
♦சந்திர பகவான் மிக முக்கியமாக தாய் ஸ்தானத்திற்கு அதிபதி.மேலும் உறவுகள்,சொந்தங்கள்,இயற்கை வளங்கள்,உணவுகள்,மன அழுத்தங்கள்,மனவேதனைகள்,
சமூகம் இது போன்ற விஷயங்களுக்கு சனிபகவான் தான் காரணத்துவமான கிரகம்.
♦எனவே இது போன்ற விஷயங்களுக்கு அதிபதியாக சந்திர பகவான் ராகு பகவானோடு சேரும்பொழுது சந்திர பகவானுடைய காரத்துவங்கள் அனைத்தும் ராகுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும்.பிறகு ராகு பகவானுக்கு என்னென்ன குணங்கள் எண்ணங்கள் எல்லாம் இருக்கின்றதோ அது எல்லாம் சந்திர பகவான் காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் நமக்கு இருக்கும்.
♦எனவே யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (சந்திரன்,ராகு) கிரக சேர்க்க இருக்கின்றதோ இவர்களுக்கு
நம்ம சொந்தங்கள், நம்ம உறவுகள் நம்ம மதம், ஜாதி,மக்கள்,உறவுகள் சமுதாயம் இது சார்ந்த விஷயங்கள் மீதி இவர்களுக்கு ஆசைகள் விருப்பங்கள் மிக மிக அதிகமாக இருக்கும்.நான்கு பேர் மத்தியில் இவர்களுடைய பெயர் கெட்டுப்போக கூடாது யாருமே இவர்களைப் பற்றி தவறாக பேசிடக்கூடாது என்ற எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.
♦சொரணையான சாப்பாடு தான் இவர்கள் என்றைக்குமே சாப்பிடுவார்கள் எந்த ஓட்டலில் எந்த உணவு ருசியாக இருக்கும் என்பது இவர்களுக்கு அசால்டாக தெரியும்.
தண்ணீர்,தோட்டங்கள்,,இயற்கை வளங்கள் ஆறுகள் ஏரிகள் இந்த விஷயங்களில் இவர்களுக்கு விருப்பங்கள் ஆசைகள் மிக அதிகமாக இருக்கும்.இயற்கை வளங்கள் சார்ந்த அத்தனை விஷயங்களிலும் இவர்களுக்கு ஆசைகள் விருப்பங்கள் மிக அதிகமாக இருக்கும்.
♦மேலும் இவர்கள் அம்மா பாசம் கொண்டவர் அம்மா சொல்லை மீறாதவர்கள்.இவர்களுடைய அம்மா இவர்கள் மீது அளவுக்கு அதிகமான அன்பு பாசம் வைத்திருப்பார்கள்.
அதேபோன்று இவர்களுடைய வாழ்க்கையில் அம்மா எடுக்கக்கூடிய எல்லாவிதமான முடிவுகளும் தலையிடுகளும் இவர்களுக்கு பிரச்சனைகளில் ஏமாற்றங்களில் தர்ம சங்கடங்களில் கஷ்டங்களில் முடியும்.
♦அம்மாவால் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏமாற்றங்கள் கஷ்டங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.அம்மா சொல்படி இவர்கள் செய்யக்கூடிய எல்லா விஷயங்களும் செயல்களும் இவர்களுக்கு தோல்வியில் முடியும் பிரச்சனைகளில் முடியும்.
♦மேலும் இவர்களுக்கு மன அழுத்தங்கள், மனக்குழப்பங்கள், மனவேதனைகள், மனஸ்தாபங்கள்
உளவியல் சார்ந்த பிரச்சினைகள்
(Psychological problems) இதுபோன்ற பிரச்சனைகள் குணங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.எந்த நேரமும் இவர்கள் மனக்குழப்பத்திலேயே இருப்பார்கள் மன அழுத்தங்களிலேயே இருப்பார்கள்.ஏதாவது ஒன்றை இவர்கள் அடிக்கடி யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்களால் வாழ்க்கையில் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க முடியாது.
♦நிலையான மனம் நிலையான என்ன ஓட்டங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருக்காது வாழ்நாள் முழுவதும் மனப் போராட்டங்கள்,
மனக்குழப்பங்கள் தேவையில்லாத மன அழுத்தங்கள் இவர்களுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்.
♦அடுத்தவர்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் இவர்களைப் போன்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாராலும் முடியாது. எப்பேர்ப்பட்ட கஷ்டம் துக்கம் பிரச்சனை கொண்டவர்களுக்கும் இவர்கள் அறிவுரை ஆலோசனை
கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் அந்த கஷ்டம் துக்கம் பிரச்சனை போய்விடும்.
அதே கஷ்டம் துக்கம் பிரச்சனைகள் இவர்களுக்கு வந்தால் இவர்களுக்கு யாருமே வாழ்க்கையில் அறிவுரை ஆலோசனை கொடுக்க முன்வர மாட்டார்கள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
3.♋(குரு,சனி கிரகச் சேர்க்கை)
♦யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (குரு,சனி) சேர்க்கை இருக்கின்றதோ ஒருவேளை இவர்கள் சொந்தமாக தொழில் இவர்களுடைய பெயரில் செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனைகள் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் தர்ம சங்கடங்கள் என்பது கண்டிப்பாக ஏற்படும்.
♦தொழில் மூலம் தர்ம சங்கடங்கள் பிரச்சனைகள்,ஏமாற்றங்கள், பணக்கஷ்டங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவிக்க கூடிய சூழ்நிலைகள் இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஏற்படும்.
தொழில் சார்ந்த விஷயங்களில் அடுத்தவர்கள் இவர்களை ஏமாற்றி விடுவார்கள் மற்றும் இவர்களுக்கு துரோகங்கள் செய்து விடுவார்கள்.
தொழில் சார்ந்து அடுத்தவர்களால் ஏமாற்றப்படுபவர்கள் இவர்கள்தான்.
♦மேலும் தொழில் சார்ந்து கடன் பிரச்சினைகள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும் கடன் சீட்டு லோன் எடுத்து இவர்கள் சொந்த தொழில் செய்து பிறகு தொழில் மிகப் பெரிய நஷ்டத்திற்கு ஆளாக கூடிய நிலைமைகள் இவர்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏற்படும்.
♦அதேபோன்று தொழில் மூலம் இவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை இவர்களால் தங்களுக்காக என்று தங்களுடைய சுயநலத்திற்காக என்று கொஞ்சம் கூட அனுபவிக்க முடியாது.அதாவது தொழில் மூலம் இவர்கள் சம்பாயக் கூடிய பணத்தை வருமானத்தை இவர்களால் தனக்காக என்று அனுபவிக்க முடியாது.
♦மேலும் இவர்கள் தொழில் மூலம் சம்பாதிக்கும் பணத்தை வருமானத்தை இவர்களால் சேமித்து வைக்க முடியாது.இவர்கள் கையில் பணம் தாங்காது நிற்காது.தொழில் ரீதியாக பணம் சேமிப்பு சார்ந்த பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
♦இந்த (குரு,சனி) சேர்க்கை இருப்பவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்னவென்றால் இவர்களின் ஜாதகத்திற்கு தகுந்தவாறு சரியான தொழிலை தேர்ந்தெடுக்காமல் தொழில் செய்வார்கள் அதனால் தான் இவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் "(செவ்வாய்,கேது),(குரு,சனி)
(சந்திரன்,ராகு)"இந்த மூன்று கிரக சேர்க்கைகளில் ஏதேனும் ஒரு கிரக சேர்க்கை இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...