தமிழர்களின் ஆதிசமயமான
இந்துமதத்தின் புராதன, மகிமைமிக்க ஆலயங்கள் எல்லாம் தமிழகத்திலேயே உள்ளன.
இந்துமதத்தின் புராதன, மகிமைமிக்க ஆலயங்கள் எல்லாம் தமிழகத்திலேயே உள்ளன.
சைவ சமயத்தின் முழு முதற் தெய்வமான சிவபெருமானின் முக்கிய கோயில்கள் 276 கோயில்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
108 வைணவ திவ்யதேசத் தலங்களில் 96 திவ்ய தேசக்கோயில்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
முருகப்பெருமானின் 180 முக்கிய கோவில்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
முழுமுதற்கடவுள் விநாயகரின் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழகத்தில் தான் உள்ளன.
சூரியனைத் தெய்வமாக வழிபட்டு, நன்றி செலுத்தும் விழா தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பராசக்தியின் நவதுர்க்கை அம்மன் கோவில்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன.
1.#நிலம் __
பஞ்சபூதங்களில் நிலத்திற்கான கோயில்__
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் (பிருத்வி லிங்கம் அல்லது மணல் லிங்கம்__காஞ்சிபுரம்)
2. #நெருப்பு __
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் ( அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்_ திருவண்ணாமலை)
3. #நீர் __
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்__திருச்சி
(நீர் =அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் _திருச்சி)
5. #காற்று
திருக்காளத்தி __காளத்தீசுவரர் கோயில்_ காற்று 
திருச்சியில் ___ மட்டுமுள்ள #திருமால் கோயில்கள்__
ஶ்ரீரங்கம் __ ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில்
திருஅன்பில் - ஸ்ரீ வடிவழகிய நம்பி பெருமாள் கோவில் __
திருக்கண்ணமங்கை __
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில் .
திருநாகை __ ஸ்ரீ சௌந்தர்யராஜன் நீலமேகப் பெருமாள் கோவில்
திரு காவலம்பாடி _ ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் கோவில்
தமிழகத்தில் கொல்லிமலையில் 2000 ஆண்டு பழமையான மகாவிஷ்ணு ஆலயம் உள்ளது.
#சிவா__விஷ்ணு இணைந்த ஆலயம் சென்னையில் உள்ளன.
இனி __ #இராமர்ஆலயங்கள் __
1. இராமேஸ்வரம் - கோதண்ட ராமர்
2. வடுவூர் - கோதண்ட ராமர்
3. மதுராந்தகம் - ஏரிகாத்த ராமர்
4. கும்பகோணம் - ராமசாமி (பட்டாபிஷேகராமர்)
5. திருப்புல்லாணி - தர்பசயன ராமர்
6. திருவள்ளூர் - வீரராகவப் பெருமாள்
7. தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர்
8. சத்துவாச்சேரி, வேலூர் - ஸ்ரீ ராமர்
9. முடிகொண்டான் - கோதண்ட ராமர்
10. திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீவல்வில் இராமர்
11. திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி இராமர்
12. திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
13. பருத்தியூர் - கோதண்டராமர்
14. அதம்பார் - கோதண்டராமர்
15. விருதுநகர் - ஸ்ரீ ராமர்
16. சிவகாசி - கல்யாணராமர்
17. வடலூர் - ராமர்
18. நெடுங்குணம் - ராமச்சந்திரப் பெருமாள்
19. ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் - ஸ்ரீ ஞான ராமர்
20. இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர்
21. பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
22. படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
23. ஊனமாஞ்சேரி (வண்டலூர் அருகில்) - ஏரி காத்த ராமர்
24. அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி
25. ராம்நகர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
26. ஒண்டிப்புதூர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
27. ஓசூர் - ஸ்ரீ ராமர்
28. வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) - ஸ்ரீ ராமர்
29. பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
30. மேப்பூர் - ஸ்ரீ ராமர்
31. மாம்பலம், சென்னை - கோதண்ட ராமர்
32. நந்தம்பாக்கம், சென்னை - ஸ்ரீ கோதண்ட ராமர்
33. தரமணி, சென்னை - ஸ்ரீ ராமர்
34. நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை - கோதண்ட ராமர்
35.மதுரை பழங்காநத்தம் ராமர் கோவில்.
36. தஞ்சாவூர் புன்னைநல்லூர் சாளக்ராம கோதண்ட ராமர் , மேலராஜவீதி விஜய ராமர் கோவில், பஜார் பட்டாபிஷேக ராமர் கோவில்
37.இராமர் கோயில்_விளாச்சேரி_மதுரை
38.குமரிமாவட்டம்_ அகஸ்தீஸ்வரம்_
ஶ்ரீராமர் ஆலயம். ( எனது தாய்வழி தாத்தா குமாரசுவாமி நாடார் அவர்கள் கட்டி வைத்த ஶ்ரீராமர் ஆலயம்)
சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு மூவரும் இணைந்த
#தாணுமாலயசுவாமி_ஆலயம் _சுசீந்திரம் _குமரி மாவட்டத்தில் உள்ளது.
#நரசிம்மரின் முக்கியமான எட்டு ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன.
தமிழகத்தில் உள்ள முக்கிய நரசிம்மர் தலங்கள் #அஷ்ட_நரசிம்மர் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன__
1. சோளிங்கர்,
2. நாமக்கல்,
3.பூவரசன்குப்பம்,
4. பரிக்கல்,
5.சிங்கிரிக்குடி,
6.சிங்கப்பெருமாள் கோயில் (தென் அகோபிலம்),
7.அந்திலி,
8. சிந்தலவாடி __ஆகியன
மேலும், மதுரை_ யானைமலை, காஞ்சிபுரம் _ திருவேளுக்கை,
திருச்சி _ஸ்ரீரங்கம், திண்டிவனம், நங்கவள்ளி போன்ற இடங்களிலும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.
தமிழகத்திலுள்ள #திருமாலின் ஐந்து திவ்ய தேசங்களாகக் __ 1. கபிஸ்தலம்,
2. திருக்கோவிலூர்,
3. திருக்கண்ணங்குடி,
4. திருக்கண்ணமங்கை
5. திருக்கண்ணபுரம் __ ஆகிய
ஊர்களிலுள்ள கோயில்கள்
விளங்குகின்றன.
கபிஸ்தலத்தைத் தவிர, மற்ற நான்கும் #கிருஷ்ணர் நேரில் காட்சித் தந்தவை என்றும்; திருமங்கையாழ்வாருக்கு #கபிஸ்தலம் கஜேந்திரவரதன் காவிரி ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணனாகவே காட்சித் தந்தவராகக் காணப்படுகிறார் என்பதும் ஐதீகம்.
1.திருக்கண்ணங்குடி,
2. திருக்கண்ணமங்கை, 3.திருக்கண்ணபுரம்,
4.கபிஸ்தலம்,
5.திருக்கோவிலூர்
சென்னையில் __
பார்த்தசாரதி கோயில்,
.மன்னார்குடியின் __ இராஜகோபாலசுவாமி கோயில், ஈரோடு _ மயிலாடி கிருஷ்ணர் கோயில் மற்றும் திருநெல்வேலி__ வேணுகோபால் கிருஷ்ணன் கோயில் ஆகியவையும் முக்கியமான கிருஷ்ணர் கோயில்கள் ஆகும். இவைத் தவிர, மதுரை வடக்கு மற்றும் தெற்குக் __கிருஷ்ணன் கோயில்கள், ஊத்துக்குளி__ கிருஷ்ணர் கோயில் போன்றவையும் சிறப்பு வாய்ந்த கிருஷ்ணர் கோயில்களாகும்.
இனி__ சில முக்கியமான #ஆஞ்சநேயர் கோயில்கள்__
சென்னை_ நங்கநல்லூர், ஆதி வியாதிஹரஆஞ்சநேயர் கோவில்,
சுசீந்திரம்_நாமக்கல்லில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில்,
திருக்கடையூர் அனந்தமங்கலம்_ ஆஞ்சநேயர் கோவில்,
செம்பட்டி நிலக்கோட்டை வழியில் அனைப்பட்டியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்,
சின்னாளப்பட்டி அருகில் மேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்,
தாராபுரம் காடுஅனுமந்தராய சுவாமி கோவில், புதுச்சேரி நலன்குளம் அருகில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அனுமனின் அனுக்கிரகங்களை அள்ளித் தரும் ஆலயங்கள்.
இனி__ #அம்மனின் 12 புகழ்பெற்ற ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளன.
1.புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்__ தஞ்சாவூர்.
2. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்__ மதுரை
3.தேவி கருமாரியம்மன் கோயில்__ திருவேற்காடு
4. அங்காளம்மன் கோயில்__ மேல்மலையனூர்.
பண்ணாரி
5. மாரியம்மன் கோயில்__பண்ணாரி
6. பகவதியம்மன் கோயில்__மண்டைக்காடு
7.முத்தாரம்மன் கோயில்__ குலசேகரம்
8. அபிராமி அம்மன் கோயில்__ திண்டுக்கல்
9. காமாட்சியம்மன் கோயில்__ மாங்காடு
10. சமயபுரம் மாரியம்மன் கோயில்__ திருச்சி
11.மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் __காரைக்குடி.
12. காளிகாம்பாள் கோயில்__சென்னை.
ஆகிய 12 முக்கிய அம்மன் கோயில்கள் தமிழகத்தில் உள்ளன.
இனி புகழ்பெற்ற #விநாயகர் கோயில்கள்__
1.சங்குபாணி விநாயகர் கோயில் _காஞ்சிபுரம்
2. மணக்குள விநாயகர்_புதுச்சேரி
3. ராஜகணபதி விநாயகர்_சேலம்
4. கரும்பாயிரம் விநாயகர்_கும்பகோணம்
5. மலைக்கோட்டை விநாயகர் கோயில்_திருச்சி
6. இடுக்கு பிள்ளையார் கோயில்_திருவண்ணாமலை
7. படித்துறை விநாயகர் கோயில்_அருப்புக்கோட்டை
8. செல்வ விநாயகர் கோயில்__வேலூர்
9. ஆதி விநாயகர் கோயில்_கூதாதனூர்_மயிலாடுதுறை
10. செல்வமுத்து விநாயகர் கோயில்__சிதம்பரம்
11. சக்தி விநாயகர் கோயில்_மேடவாக்கம்_சென்னை
12. தலையாட்டி விநாயகர் கோயில்_ஆத்தூர்__சேலம்
இனி__ 12 புகழ்பெற்ற #முருகப்பெருமான் கோயில்கள்__
மருதமலை, கோவை அருகே
வள்ளிமலை_ காட்பாடி_ வேலூர்
குமரகோட்டம் கோவில்_ காஞ்சிபுரம்
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்__திருப்போரூர்,
சுப்பிரமணியசுவாமி கோவில்_ வல்லக்கோட்டை_காஞ்சிபுரம்
திருமலை கோவில்_ காஞ்சிபுரம், பண்பொலி_ தென்காசி
பச்சைமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி_கோபிசெட்டிபாளையம்,
வடபழனி ஆண்டவர் கோவில்_ சென்னை
சிறுவாபுரி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்,_சின்னம்பேடு, சென்னை
ஸ்கந்தாஷ்ரமம் கோவில்__, தாம்பரம், சென்னை
கந்தசுவாமி கோவில்__ ஜார்ஜ்டவுன், பாரிஸ் கார்னர், சென்னை
குமரன்குன்றம்_ குரோம்பேட்டை, சென்னை.
அறுபடை வீடு முருகன் கோவில், பெசன்ட் நகர்_, சென்னை
சிக்கல் சிங்காரவேலன் கோவில்_ நாகப்பட்டினம்
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில்_ விருத்தாசலம்_கடலூர்
கழுகாசலமூர்த்தி கோவில்_ கழுகுமலை, தூத்துக்குடி
விராலிமலை முருகன் கோவில்_ விராலிமலை, திருச்சிராப்பள்ளி
வயலூர் முருகன் கோவில்_ திருச்சிராப்பள்ளி.
1. திருப்பரங்குன்றம்,
2.திருச்செந்தூர்,
3.பழனி (திருவாவினன்குடி), 4.சுவாமிமலை (திருவேரகம்), 5.திருத்தணி,
6. பழமுதிர்சோலை ஆகும்.
இந்தப் புனிதத் தலங்கள் திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கியங்களில் போற்றப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தலத்திற்கும் தனித்துவமான புராண முக்கியத்துவமும் உண்டு.
இனி___
#18_சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து, ஜீவ-சமாதி அடைந்ததும் தமிழகத்தில் தான்.
#பன்னிரு_ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள்
தோன்றி, வாழ்ந்து முக்தியடைந்ததும் தமிழகத்தில் தான்.
#நவக்கிரகக்கோவில்கள் அனைத்தும் இருப்பதும் தமிழகத்தில் தான்.
12 *ராசிகள் மற்றும் 27
*நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழகத்தில் தான்.
#சப்தலிங்க_ஸ்தலங்கள் இருப்பதும்
தமிழகத்தில் தான்.
இந்துசமயப் பண்பாட்டின் முக்கியமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதும் தமிழகத்தில் தான்.
பாரம்பரிய இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியதும் தமிழகத்தில் தான்.
#ஓம்நமோநாராயணா. 
#தமிழகம்_ஆன்மிகப்புனிதப்பூமி.

No comments:
Post a Comment