எதற்கும்_சத்தியம்_செய்யாதீர்கள்.
#சத்தியம்_என்பது சாதாரண வார்த்தையல்ல. ஒரு சத்தியம் செய்து விட்டால் அந்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அல்லது செய்து முடிக்கவேண்டும். நாம் செய்யும் சத்தியத்தை காப்பாற்ற முடியுமா? என்றால் மிக மிக குறைவே. சிலர் தெய்வத்தின் பெயரைச்சொல்லியும், விளக்கின்மீது சத்தியம் செய்தும், சிலர் தன் தலைமீது அல்லது பிள்ளைகளின் தலை மீது சத்தியம் செய்தும் வருகிறார்கள். இது மாபெரும் குற்றமாகும். அதைவிட சிலர் கோயில் முன்பு கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்வார்கள். இப்படிப்பட்ட செயலை இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்களோ தெரியவில்லை. குற்றத்திலிருந்து தப்பிக்கவே இந்த சத்தியம் என்ற சொல் பயன்படுகிறது. சில நேரங்களில் நீதியை நிலைநாட்டப் பயன்படுகிறது. சில வேளைகளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சத்தியம் என்ற வார்த்தை சாதாரண வார்த்தையல்ல. ராகு பகவானுக்கு அதிதேவதை காளியம்மனாகும். சத்தியம் செய்பவர்கள் அந்த காளியின் சாபத்திற்கும் ஆளாகிறார்கள். இதுவரை எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்தவர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதை அனுபவித்தவர்களுக்கேத் தெரியும். அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் யோகமாக இருக்கும். ஆனால் அவர்கள் படும் கஷ்டம் பாவமாக இருக்கும். சொல்ல முடியாத கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். அதை சிலர் முன்ஜென்ம பாவம் என்றும், முன்னோர்கள் சாபமென்றும் சொல்வார்கள். அவர்களைக் கேட்டுப்பார்த்தால் எங்கோ எப்போதோ ஒரு சத்தியம் செய்திருப்பது தெரியவரும்.
புராணங்களில் சத்தியத்தைக்காப்பாற்ற எவ்வளவு அனுபவித்தார்கள், கஷ்டப்பட்டார்கள், துன்ப பட்டார்கள் என்பதைப் பார்க்கலாம். சபதமும்-சத்தியம்போல்தான். சபதத்தை நிறைவேற்ற போராட வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்ற கஷ்டப்படவேண்டும். மக்கள் சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போனால் காளியின் கோபத்திற்கும் ஆளாகலாம். காளிதேவி அதிவேக சக்தி. அவள் சத்தியத்திற்கு காவளாக இருக்கிறாள். அந்த சத்தியத்தை தவறுபவர்களை அவள் கண்டிப்பாக தண்டிப்பாள். அதனால் சத்தியம் செய்யாதீர்கள். சத்தியத்தை காப்பாற்ற முடியும் என்பவர்கள் மட்டும் சத்தியம் செய்யுங்கள். சத்தியம் செய்வது. ஒரு நொடியில் நடப்பது. ஆனால் அந்த சத்தியத்தைக் காப்பாற்ற எவ்வளவு காலம் போராட வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு பெற்றவர்களும், ஆசிரியர்களும் இந்த சத்தியம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவரலாம். ஆண் தெய்வங்களின் மீது சத்தியம் செய்தால் உங்கள் குடும்பத்திலுள்ள ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண் பிள்ளைகள் இல்லையென்றால் உங்களுக்கு பின்வரும் சந்நதியில் பாதிக்கப்படுவார்கள். பெண் தெய்வங்களின் மீது சத்தியம் செய்தாள் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்கள் பாதிக்கப் படுவார்கள்.
இந்த சத்தியத்தால் விளையும் வினைகளை உடைத்தெரிபவள் காளி மட்டுமே. அவளை முறைப்படி வணங்கினால் மட்டுமே அந்த மறந்துவிட்ட, மறைக்கப்பட்ட சத்தியத்தின் பாதிப்பு விலகும்

No comments:
Post a Comment