*சித்தி விநாயகர்*
கி.பி 11 ம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்ட திருக்கோயில் இது.இந்த காலத்தில் பாண்டியநாடும் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது.இதனை முன்னிட்டு மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறார்.
*சிவன் இடத்தில் சித்தி விநாயகர்*
ஆவியூர்,வயலூர் நாடு எனும் பகுதியில் அடங்கிய சிற்றூராக விளங்குகிறது.நாளடைவில் கோயிலின் மேல் தளம் சிதிலமடைந்து வழிபாடுகளும் குறைந்தது.எனவே மூலவரும் ஆதிபிரானுமாகிய ஆவுடை லிங்கேஸ்வரர் திருமேனி மறைந்து போனது.
வெகு காலம் ஆகியும் புதர் மண்டிக் கிடந்தது இந்த ஆலயம்.பின்பு சில வழிபோக்கர்கள் கண்ணில் பட்டதே இதற்கு புனர்வாழ்வு பெற வழிவகுத்தது.
மூலவர் இல்லாமல் போகவே மூலமுதற் கடவுளான விநாயகரைப் பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முகமண்டபம்,அம்மன் சன்னதி என எல்லாமே மாயமாகிப் போன நிலையில், அர்த்தமண்டபம், கருவறை, மூலவர் விமானம் ஆகியவை சிதிலமடைந்து போனது.ஒருவேளை பூஜை மட்டுமே நடக்கும் இந்தக் கோவிலை இப்பொழுது சீர்படுத்தி வருகிறார்கள்.
*வழிபாடுகள்* வெள்ளிக்கிழமைகள் ,பிரதோஷம், பௌர்ணமி, திருவாதிரை, சங்கடஹரசதுர்த்தி, சிவராத்திரி மற்றும் மார்கழி மாத 30 நாட்களும் விசேஷ அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும்.
இங்கு இந்த ஆலயத்தில் வேண்டுவோர் வேண்டியபடி எல்லாம் கிடைக்கப்பெற்று வளமோடு வாழ்கிறார்கள்.
*அமைந்துள்ள இடம்* விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மதுரை நெடுஞ்சாலையில் 15 கி மீ தொலைவில் ஆவியூர் அமைந்துள்ளது.பஸ் வசதி உண்டு.

No comments:
Post a Comment