Sunday, 4 January 2026

உடல் கழிவுகளை வெளியேற்றக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பு

 


உடல் கழிவுகளை வெளியேற்றக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பு

➡️ இது சித்தர்கள் கூறிய மலமிளக்கி. பொதுவாக அது வாதமாகட்டும், பித்தம் ஆகட்டும், கபம் ஆகட்டும் உடல் கழிவுகள் சரிவர நீங்கினால் மட்டுமே, வாதம், பித்தம், கபம் மூன்றும் தன்னிலை பெறும்.
ஒரு பழமொழி ஒன்றும் சொல்வார்கள்.
"வாதம் தீருவது பேதியாலே "
"பித்தம் தீர்வது வாந்தியாலே"
"கபம் தீர்வது நசியத்தாலே"
ஆகையால் தான் வாத நோயாளிகள் வரும் பொழுது முதலில் பேதி மருந்து எடுத்து, குடல் சுத்தி செய்து வாதத்தை தன்னிலைப்படுத்தி அதன் பிறகு, இரண்டாவது நாளில் இருந்து மருந்து எடுக்க வேண்டும் என்றும் சொல்வது உண்டு.
➡️ மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்து குடல் சுத்தம் செய்ய வேண்டும்.
தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் அனைவரும் கட்டாயமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு குடல் சுத்தம் செய்வதற்கு பல மருந்துகளை பற்றி நாம் ஏற்கனவே பார்த்து உள்ளோம். குறிப்பாக அகஸ்தியர் குழம்பு அற்புதமான பேதி மாத்திரை. மேலும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய ராஜ பேதி மாத்திரை. அல்லது கௌசிகர் குழம்பு இதுபோன்று நிறைய பேதி மருந்துகள் உள்ளன.
➡️ நாம் தற்போது பார்க்க இருப்பது தினமும் இரவில் எடுக்கக் கூடிய அற்புதமான உடல்கழிவுகளை நீக்கும் சூரணம். மேற்கத்திய நாடுகளில் சொல்லக்கூடிய அதாவது Western detoxification எல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்றே சொல்லாம்.
➡️ உடல் கழிவு நீக்கிக் கொள்வதற்காக நாம் பலவிதமான பச்சிலைகள், சில காய்கறிகளின் சாறு என்று எடுத்துக் கொண்டாலும் அவையும் உடல் கழிவுகளை நீக்கும் ஆனால், முழுமையாக உடல் கழிவுகளை நீக்கும் என்று கூற முடியாது. மேலும், தற்போது நாம் பார்க்கக் கூடிய மருந்தே மிகச் சிறந்த detoxification. ஆக உடல் கழிவுகளை தினம் தினம் அன்றன்றே நீக்கிக்கொள்ள வேண்டும்.
➡️ பொதுவாக நம்முடைய உயிர் ஆனது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று கட்டுகளால் ஆனது . அதேபோல் நமது உடல் ஆனது நீர்க்கட்டு,மலக்கட்டு மற்றும் கபக்கட்டு இவற்றினால் ஆனது.
இந்த மூன்று கட்டுகளையும் உடைக்க வேண்டும். இதற்கு மிகவும் அற்புதமான பொருட்கள் இரண்டு மட்டும் தான். அவை, கடுக்காய் மற்றும் சிவதை சூரணம்.
*🌷கடுக்காய்:* தாயை விட ஒரு படி மேலானது கடுக்காய். சுத்தி செய்த கடுக்காய் பொடி தேவையான அளவு.
🌷சிவதை சூரணம் :
சிவதை சூரணத்திற்கு உடல் கழிவுகளை வெளியேற்றும் ஒரு அற்புதமான குணம் உண்டு. சில பேர்க்கு வயிறு உப்புசத்தின் காரணமாக பசியே எடுக்காது. வயிற்றில் வாயு சேர்ந்து விடும். ஆக, வாயுவின் உற்பத்தி மூலக்கூறு எங்கே இருக்கின்றது என்றால் வயிற்றில். வயிற்றில் வாயு சேரும் அதுமட்டுமல்லாமல் , வயிற்றில் கபம் உருவாகும். இவ்வாறு கபம் உருவாவதால் பித்தம் என்ற தீ குறைந்து விடும். கபம் மேலோங்குவதால் பித்தம் குறைந்து விடும். நீர் மேலோங்குவதால் அங்கு நெருப்பு இருக்க முடியாது. இதன் காரணமாக பசியே இல்லை என்று சொல்வார்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் வயிற்றில் உள்ள கபத்தை நீக்கி, உடல் கழிவுகளை முறையாக வெளியேற்றி, நீர்கட்டு, மலக்கட்டு, கபக் கட்டு இவற்றை நீக்கி, உடலை அற்புதமாக பொன் போன்று மாற்றக்கூடிய ஒரு சூரணம் தான் கடுக்காயும், சிவதை வேர் சூரணமும்.
➡️ சூரணத்திற்கு தேவையான பொருட்கள்:
🌷 கடுக்காய் தோல் பொடி 50g (சுத்தித்தது).
🌷 சிவதை வேர் சூரணம் அல்லது திரிவிருட்சூரணம் - 50g.
* இரண்டையும் சம அளவு கலந்து கொள்ள வேண்டும். தற்போது உடல் கழிவு நீக்க சூரணம் தயார்.
➡️ imcops - ல் சித்தாவில் சிவதை வேர் பொடிச் சூரணம் கிடைக்கின்றது. அல்லது imcops - ல் சித்தாவில் ஆயுர்வேதா மருந்து, திருவிருட்சூரணம் என்று கிடைக்கிறது. இந்த இரண்டில் எது கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளலாம்.
➡️ கடுக்காய் சுத்தி செய்யும் முறை :
கடுக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஒரு ஆறு மணி நேரம் அல்லது 8 மணி நேரம் நன்கு ஊற வைத்து அதன் பிறகு கடுகாய்தோலை மட்டும் எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து, நன்கு காய்ந்த பிறகு பொடி செய்து கொள்ளவேண்டும். கொட்டையை பயன்படுத்தக் கூடாது. தூக்கி போட்டு விடவும். இதுவே கடுக்காயின் பொதுவான சுத்திமுறை.
➡️ சூரணத்தை பயன்படுத்தும் முறை :
இவ்வாறு கடுக்காய் தோல் பொடி மற்றும் சிவதை வேர் பொடி சம அளவு கலந்த சூரணத்தை தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு 9 முதல் ஒன்பது முப்பது மணி வரையில் ஒரு அரை டீஸ்பூன் அதாவது இரண்டு முதல் 3 கிராம் அளவு சுடு தண்ணீரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக் கொள்ளும்போது சிலருக்கு முதல் நாள் மட்டும் பேதி அதிகமாக செல்லும். கவலைப்பட தேவையில்லை. இரண்டு மற்றும் மூன்று நாட்களில் இருந்து சாதாரணமாகவே பேதியாகும்.
ஆனால், ஒரு சிலருக்கு இரண்டு மட்டும் மூன்றாம் நாட்களிலும் பேதி அதிகமாக போவதாக இருந்தால் 1/2 டீஸ்பூன் இந்த பொடியை சுடு தண்ணீரில் கலந்து அதனுடன் சில துளிகள் எலுமிச்சை பழச்சாறு கலந்து அருந்தலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வதால் அதிகமாக செல்லக்கூடிய பேதி கட்டப்பட்டு சாதாரணமாகவே கழிவுகள் உடலை விட்டு சீராக வெளியேறும்.
➡️ இந்த சூரணம் ஒரு சாதாரண மலமிளக்கி என்று எண்ணுதல் கூடாது. இது உடலை நோய் வராமல் பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான ஒரு திவ்ய ஔஷதம் ஆகும். இந்த சூரணம் நோயினுடைய அடிக்கூறினை முழுவதுமாக வேர் அறுக்கக்கூடிய ஒன்றாகும். இந்த சிவதை வேர் பொடியும், கடுக்காய் தோல் பொடியும் கலந்த ஒரு சூரணம்.
அனைவரும் பயன்படுத்தி உடல் நலம் காப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...