Sunday, 4 January 2026

முப்பது வயதிற்கு முன் செய்ய வேண்டியவை 15 செயல்கள்...!

 


முப்பது வயதிற்கு முன் செய்ய வேண்டியவை 15 செயல்கள்...!

🛐🛐🛐🛐
வாழ்க்கையை வெறும் வேலைக்காக மட்டும் வாழ்ந்துவிடக்கூடாது, அது பல அற்புதமான விஷயங்களை உள்ளடக்கியது. நீங்கள் 30 வயதில் இருக்கும்போது சோர்வாக உணரக்கூடாது, விழிப்புடன் இருக்கவேண்டும்.
#நல்ல ஆரோக்கியம்:
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் அமைய வாய்ப்புகள் உள்ளன. 100 வயதிற்கும் மேல் சிறப்பாக வாழும் வழிமுறைகளை அன்றைய காலத்திலேயே யோகிகளும், ஞானிகளும் வகுத்துள்ளனர். அவர்கள் செய்ததெல்லாம் சுத்தமான காற்று, தேவையான உடற்பயிற்சி, உடலுக்கேற்ற உணவு போன்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தது மட்டும் தான். ஆரோக்கியமே மிகச் சிறந்த செல்வம் என்பதால் நாம் அனைவருமே கட்டுக்கோப்புடனும், பருவகால நோய்களை எதிர்க்கும் சக்தியுடனும் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். மேலும் அனைவரது விருப்பப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்த ஆசையும் ஒன்றாகும் என்பதை யாருமே மறுக்க முடியாது. பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடவேண்டிய காலக்கட்டத்தில், உணவைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. நமது வயிறு பசிக்கும் போது அல்லது ஏதாவது உணவுப் பொருளை பார்க்கும் போது மட்டுமே நமக்கு சாப்பிடத் தோன்றுகிறது. ஆகவே சரியான முறையில் உணவை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆசைப்பட்டால், கீழ்கூறிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
#புத்தகம் நமது நண்பன்:
புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. உலகின் பெரிய மாமேதைகள் அனைவருமே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. இன்றைய நாளில் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து உள்ளது. இன்றைய குழந்தைகள் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியபப்படுத்தி புத்தகங்கள் பயில தூண்டுதல் வேண்டும். ஒருவர் பயிலும் சிறந்த புத்தகமே அவரின் சிறந்த நண்பர்களாக திகழ்கின்றன.
நமது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி அறிவை மேம்படுத்த செய்வதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. புத்தகங்கள் என்றால் தேவையற்ற புத்தகங்களை வாசிப்பது அல்ல. அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய நூல்கள் போன்ற அறிவு பசிக்கு தீனி போடும் நூல்களை பயில்தல் வேண்டும். வாசிப்பு பழக்கத்தை உண்டாக்கி கொள்வதன் மூலமே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாய் பரிணமிக்க முடியும். புத்தகங்கள் குறைவாக கிடைத்த காலங்களில் பல அறிஞர்கள் உருவாகினாலும் அவர்கள் வாசிப்பதற்கு போதிய நூல்கள் இல்லை. இன்று புத்தகங்கள் நிறைய இருப்பினும் வாசிப்பதற்கு யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மனிதனை அறிவுள்ளவனாய், பூரணத்துவம் பெற்றவனாய் மாற்றுவதில் புத்தகங்கள் மட்டுமே நற்பலனை தருகின்றன.
நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய், உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கான்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வேரறுப்பதில் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் குறுக்கு வழியும் இல்லை. பல விதமான ஆராய்ச்சி முடிவுகளும் இதை தான் சொல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.
இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால் அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். வருமுன்னே காவாதான் வாழ்க்கை நெருப்புக்கு முன் இடப்பட்ட துரும்பாய் பொசுங்கிப் போகும் என்பது பொய்யா மொழி. எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள் பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனைகளில் பழியாய் கிடந்து தீர்க்க நேரும். உடல் இயக்கக் குறைவால் வரும் இத்தகைய நோய்கள் தான் மிகவும் அதிக மருத்துவச் செலவு ஏற்படுத்தக்கூடியதும் கூட.
உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இலலை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற் பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.
#எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயணம் சம்பாதியுங்கள்:
நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். இந்தியாவிற்குள் பயணித்தாலும் சரி, வெளி நாட்டிற்கு பயணித்தாலும் சரி, ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. பயணத்தின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க சில விஷயங்களை செய்ய வேண்டும், முக்கியமாக சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.
#புதிய நண்பர்களை தேடிக்கொள்:
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.
#உன்னை நீ தியாகம் செய்யாதே:
கடைசியாக நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் காலங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்தை முன்னேற்றுவதற்கு நீங்கள் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். இது அனைத்தும் எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற மோசமான திட்டமிடல் திறன்களைக் கொண்ட ஒருவருக்காக நீங்கள் வேலை செய்ய வேண்டியது அசாத்தியம். உங்கள் திறமையும் முயற்சியும் மற்ற இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
#உங்கள் கனவுகளை துரத்துக:
கனவு காண்பதை நிறுத்திவிட்டு அதை செயலில் காட்டவேண்டும்.
சிக்கனம் வீட்டைக்காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்”. “சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது முது மொழி. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் கூறியுள்ளார். அத்தகுசிறப்பு வாய்ந்த சிக்கனத்தைப் பற்றியும் அதனைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் இக் கட்டுரையில் காண்போம். சிக்கனப் பண்பு சிறந்த பண்புகளுள் ஒன்று. சேமிப்பு நம் மனதைத் தூய்மை படுத்தும். பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும். சேமிப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. எனவே நாம் அனைவரும் சிக்கனத்தைப் பின்பற்றிச் சேமிக்க பழகுவோம்.
#நீ நியாக வாழ்:
நீ நியாக வாழ கற்றுகோள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார் அதை பற்றி கவலை படாதே ஏன் என்றால் இது உன் வாழ்கை.
தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது.
#உங்களை பயமுறுத்துகிற விஷயங்களைச் செய்யுங்கள்:
உங்களுக்கு பயமாக இருக்கும் விஷயங்களை செய்யுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஆது உங்களைக் கொன்றுவிடாது, மாறாக அது உங்களை வலுவாக ஆக்குகிறது. நீங்கள் அரங்கில் இருப்பதற்க்கு அஞ்சுகிறீர்கள் என்றால், பொதுக் கூட்டத்தை கலந்து கொள்ள ஒரு கிளப்பில் சேரவும். நீங்கள் ஒரு உள்முகமானவராக இருந்தால், உங்கள் நகரத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகளுக்குச் சென்று மக்களுடன் உரையாடுங்கள்.
#நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட நல்ல மனிதர்களை தேர்ந்தெடுங்கள்:
அசாதாரணமான மக்கள் கூட்டத்தை விட்டு விலகி நிற்பதற்கு விஞ்ஞானபூர்வமான காரணம் இருக்கிறது, மேலும் அவர்கள் தங்களைப் போலவே சிந்தித்து, சாதாரணமானவர்களைத் தவிர்த்து மற்றவர்களோடு இருக்க விரும்பிகிறார்கள்.
#சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்:
இது ஒரு திட்டமிடல், தயாரிப்பு மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றைத் தேவைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும், இது உங்கள் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. வெட்டுதல், அரைத்தல் மற்றும் கழுவுதல் நல்ல கை மற்றம் கண் ஒருங்கிணைப்பு மற்றும் செறிவு தேவைப்படுகிறது. முதலில் ஒரு மிகப்பெரிய பணியைப் போல தோற்றமளிக்கலாம் என்றாலும், அது உங்களுக்கு ஒரு உடனடி உணர்வைத் தருகிறது.
இந்த பட்டியலில் வேறு எல்லாவற்றையும் விட, இது முக்கியமானது. உங்கள் இலக்குகளை அடைய கடினமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படவில்லை என்றால், பேச்சு மற்றும் நடவடிக்கை எதுவும் வாழ்க்கையில் செல்லாது.
#இல்லை' என்பதை தைரியமாக சொல்லவும்:
பயத்தோடு வாழ்வதை விட, எழுந்து 'இல்லை' என்று சொல்வதன் மூலம், எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...