எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!
"மத்தவங்க உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் பிரச்சினை, உங்களுடையது அல்ல!", அமெரிக்காவின் முன்னால் First Lady, Eleanor Roosevelt அவர்களின் மிக பிரபலமான வார்த்தைகள் இவை.
1. எல்லாத்தையும் பெர்சனலா எடுத்துக்கிறத உடனே நிறுத்துங்க!
மக்கள் சொல்லும் & செய்யும் பெரும்பாலான விஷயங்கள் அவர்களின் உலகத்தின் பிரதிபலிப்புதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
"உங்களின் எண்ணங்களை விட அதிகமாக உங்களை காயப்படுத்தும் வேறு எதுவும் இந்த உலகில் இல்லை" என்றார் புத்தர். அதனால, உங்களுக்கு சொந்தமில்லாத எதையும் நீங்க எடுத்துக்காதீங்க!
2. உங்களுடைய கவனத்திறனை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கவனத்திறன்தான் உங்களுடைய எனர்ஜி. உங்கள் எனர்ஜிதான் உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது.
அதனால் உங்களை ஆக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள், அழிப்பவை மீது அல்ல!
"நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாராக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கு நீங்கள் போடும் ஓட்டு" என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் James Clear.
3. ரெஸ்பாண்ட் பண்ணுங்க, ரியாக்ட் பண்ணாதீங்க!
ரியாக்ட் பண்றது இன்ஸ்டிங்க்ட் (Instinct) அல்லது அடிப்படை மனித இயல்பு. ஆனா, ரெஸ்பாண்ட் பண்றது மாஸ்டரி (Mastery).
இதை பின்வருமாறு அழகாக விளக்குகிறார் ஆஸ்திரியா நாட்டின் நரம்பியல் மற்றும் மனநல மருத்துவரான Victor Frankl.
“ஒரு வினைக்கும், அதற்கான எதிர்வினைக்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இருக்கிறது உங்கள் சுதந்திரம்" என்கிறார்.
அதாவது ஒருத்தர் உங்ககிட்ட ஒன்னு சொல்றதுக்கும், நீங்க அதுக்கு ரியாக்ட் பண்றதுக்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் உங்கள் அமைதியே இருக்கிறது என்கிறார் Victor Frankl.
4. மக்கள் என்ன வேணும்னாலும் நெனச்சிட்டுப் போகட்டும் விடுங்க!
"மக்கள் உங்களைப் பற்றி சொல்லும் கருத்துகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்தால், நீங்கள் அவர்களின் கைதி ஆகிவிடுவீர்கள்" என்கிறார் பிரபல சீன ஞானி Lao Tsu.
"பிறர் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீங்கள் கைவிடும்போது உங்கள் சுதந்திரம் பிறக்கிறது" என்பதை நினைவில் வையுங்கள்!
5. உங்கள் அகங்காரத்தை (Ego) குறையுங்கள், உங்கள் அமைதி அதிகமாகும்!
சண்டை போடுவது, பிறருக்கு தன்னை நிரூபித்துக் காட்டுவது மற்றும் தற்காப்பு செய்துகொள்வது எல்லாம் உங்கள் ஈகோவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்கள் மனதுக்கு அமைதிதான் பிடிக்கும்.
அதனால், உங்கள் ஈகோவுக்கு தீனி போடுவதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களுடைய அமைதியான மற்றும் வலிமையான வடிவத்துக்குள் நீங்கள் அடி எடுத்து வைக்கிறீர்கள்!

No comments:
Post a Comment