இப்போது பரவலாக இருக்கக்கூடிய உடல் சோர்வு, காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கான சில இயற்கை ஆலோசனைகள்:
ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக பிரித்து (ஒரு பங்கு தோலுடன் எலுமிச்சை தோல் மட்டும் சேர்க்கவும் சாறு தவிர்க்கவும்), தோல் உரித்த பூண்டு பல் ஒன்று, பூண்டின் அளவிற்கு தோல் உரித்த இஞ்சி - இவை மூன்றையும் ஒரு டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். இதில் தேன் கலந்து பருகலாம்.
* யார் எப்படி சாப்பிட வேண்டும்? காய்ச்சல், உடல் வலி, தொண்டைப்புண் உள்ளவர்கள் காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிடலாம்.
* இரத்த அழுத்தம், இரத்தக்குழாய் அடைப்பு போன்ற தொந்தரவு உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு, அரை மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது இரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும், இதயத்திற்குப் பலம் சேர்க்கவும் உதவும். (தொடர்ந்து 3 முதல் 20 நாட்கள் வரை சாப்பிடலாம்).
முசுமுசுக்கை இலை, திருநீற்றுப்பச்சிலை, குப்பைமேனி இலை - மூன்றிலும் தலா 4 இலைகளை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை, இரவு குடிக்கலாம். இது காய்ச்சல், தலைபாரம் மற்றும் உடல் வலியைப் போக்க உதவும்.
அதிமதுரம் பொடியை வாங்கி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடிக்க வாய்ப்புண் விரைவில் ஆறும்.
வாய்ப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் உணவு சாப்பிடும்போது தேங்காய் எண்ணெய் கலந்து அல்லது தொட்டுக்கொண்டு சாப்பிடுவது நல்லது. தேங்காய் எண்ணெய் பட்டவுடன் புண்கள் ஆறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
juice 5. நீர்ச்சத்து அவசியம்:
இப்போதுள்ள காய்ச்சல் தொந்தரவுகளில் உடலில் நீர்ச்சத்து குறைவது வழக்கம். எனவே காலை முதல் மதியம் வரை பழச்சாறுகள் (ஆப்பிள், சப்போட்டா, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, மாதுளை) மட்டும் அருந்துவது உடலுக்கு உடனடியாகத் தெம்பைக் கொடுக்கும். (சளி அதிகம் உள்ளவர்கள், சளிக்கான கசாயம் குடித்த பிறகு பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்).
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், வசம்பு பொடியை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து வயிற்றில் தடவலாம். வயிற்று வலி குறைய வாய்ப்புள்ளது. வயிற்றுப்போக்கு தொடர்ந்தால் கசகசாவை பாலில் கலந்து கொடுக்கலாம் அல்லது பொட்டுக்கடலை கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
உடலில் நீர்ச்சத்து குறைவதால், காய்ச்சல் நேரத்தில் முழுமையாகப் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும். எளிதில் செரிமானமாகும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவு நல்ல தூக்கம், போதுமான அளவு நீர் அருந்துவது, அதிகாலை மலம் கழிப்பது - இவை மூன்றும் உடல் நலம் தேற மிக அவசியம்.
தற்போது பலருக்கும் தொண்டையில் கோழை (சளி) படலம் உருவாகிறது. காலையில் பல் துலக்கிய பின் இந்தக் கோழையை முழுமையாகக் காரித் துப்புவது அவசியம். சளி வெளியேறினால்தான் இருமல் மற்றும் காய்ச்சல் கட்டுக்குள் வரும்.
முதல் குறிப்பில் சொன்ன இஞ்சி-பூண்டு-எலுமிச்சை கசாயம் உடலுக்குச் சூட்டைத் தந்து, குளிரைத் தாங்கும் சக்தியை அளிக்கும்.
முக்கிய குறிப்பு:
இவை அனைத்தும் முதலுதவி மற்றும் உடல் தேற்றுவதற்கான வழிமுறைகளே. தொந்தரவுகள் அதிகமாக இருந்தால், உங்கள் அருகில் உள்ள மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
பயம் தவிருங்கள்.. பயம் உயிரைக் கொல்லும்.. முறையான உணவு, கவனிப்பு மற்றும் ஓய்வு இருந்தால் 2 முதல் 4 நாட்களில் இதிலிருந்து மீண்டு வரலாம். நோயைக் கண்டு அஞ்சாதீர்கள்!

No comments:
Post a Comment