Wednesday, 7 January 2026

இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது


 இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! Part-2

17. “என்னை மன்னிச்சிடு” சொல்றதுக்கு பதில் “நன்றி” சொல்லுங்க: ஏன்னா, “நீங்க எனக்காக காத்திருந்ததுக்கு நன்றி”ன்னு சொல்றது உங்க தன்னம்பிக்கையைக் காட்டும். “மன்னிச்சிடுங்க லேட் ஆயிடுச்சி”ன்னு சொல்றது அடிமைத்தனத்தைக் காட்டும்.
18. யாருடைய ஒப்புதல் (validation)-காகவும் ஏங்காதீங்க: ஏன்னா, பிறர் சரின்னு சொல்லனும்னு காத்திருக்கிறவங்களுக்கு அதிகாரம் இல்லாமப் போயிடும்.
19. மௌனத்தை அமைதிக்கான ஆயுதமா பயன்படுத்துங்க: குறைவா பேசுறவங்க நல்லா பழக மாட்டாங்கன்னு அர்த்தமில்ல. அவங்கள யாராலும் கணிக்க முடியாதுன்னு அர்த்தம்.
20. நீங்க முடியாதுன்னு சொல்லும்போது மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு கவனிங்க: ஏன்னா, அதுதான் அவங்களோட உண்மையான முகம்!
21. உணர்வுகளுக்கு பெயர் வைத்துப் பழகுங்கள் (Emotional labelling): எந்த ஒரு விஷயத்துக்கும் ரியாக்ட் பண்றதுக்கு பதில் உங்க உணர்வுகளுக்கு பெயர் வையுங்கள். அப்போ அவை உங்களை கட்டுப்படுத்தாது.
22. உங்க லட்சியங்களை ரகசியமா வச்சிக்குங்க: ஏன்னா, உங்க நோக்கம் என்னன்னு தெரியாதப்போ உங்களை யாராலும் தாக்க முடியாது.
23. பிறரின் புகழ்ச்சி/பாராட்டுகள் உங்க கண்களை மறைக்க விடாதீங்க: ஏன்னா, பாராட்டுகள் பெரும்பாலும் நம்மைக் கட்டிப்போடும் பாசமாகவே செயல்படும்.
24. உங்க ரியாக்‌ஷன்களை எப்போதும் கணிக்க முடியாதபடி வைத்துக்கொள்ளுங்கள்: ஏன்னா, அப்போதான் நம்மை மேனிபுலேட் செய்பவர்கள் என்ன நினைக்கிறான் என்று குழம்பி ஓடிப்போவார்கள்.
25. தேவையில்லாம தன் விஷயங்களை அதிகம் பகிர்பவர்களிடம் கவனமா இருங்க: ஏன்னா, நம் விஷயங்களை நம்மிடம் இருந்து கறப்பதற்கான சூழ்ச்சி அது.
26. உணர்ச்சிவசப்படும் மக்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்: ஏன்னா, அவங்ககிட்ட லாஜிக் வேலை செய்யாது.
27. யாராவது உங்க மேல அபாண்டமா பழி சுமத்தினா, “எதை வச்சு நீங்க அந்த முடிவுக்கு வந்தீங்க”ன்னு கேளுங்க: ஏன்னா, அப்போதான் அவங்க காரணம் சொல்ல முடியாம திணறுவாங்க.
28. ஒரு கருத்துவேறுபாடு நடக்கும்போது பாதியிலேயே கிளம்பிடுங்க: ஏன்னா, காட்டுக் கத்தலா கத்துறதை விட மௌனம் சக்திவாய்ந்தது.
29. ஒருவருடன் கருத்துவேறுபாடு வரும்போது பெயர்சொல்லி பேசுங்கள்: ஏன்னா, அப்போதான் அந்த உரையாடலின் கோபம் உடனே குறையும்.
30. இன்செக்கியூரான மக்களிடம் உங்கள் வெற்றியை நியாயப்படுத்தி பேசாதீங்க: உங்க வளர்ச்சியை விளக்கிப் பேச பேச உங்க மேல அவங்களுக்கு வெறுப்புதான் வரும்.
31. நீங்கள் வெற்றி அடையும்போது மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு கவனிங்க: மகிழ்ச்சி உங்கள் நலம்விரும்பிகளை அடையாளம் காட்டும், அசௌகரியம் வயிற்றெரிச்சல்/பொறாமையைக் காட்டும்.
32. உணர்ச்சிகளை நம்புவதை விட செயல்களை நம்புங்கள்: ஏன்னா, மக்கள் எதை மீண்டும் மீண்டும் செய்கிறார்களோ அதுவே அவர்கள் ஆழ்மனதை படம்பிடித்துக் காட்டிவிடும். 

No comments:

Post a Comment

அனுமந்தன் வசியக் கட்டு

 செய்வினைகள்; பில்லி; சூனியம்; ஏவல்; திருஷ்டிகள்; கொடிய நோய்கள்; இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளும் அபூர்வ ரகசிய மந்திர கட்டு இது.....