Saturday, 3 January 2026

பண்டைய தமிழக நிலப்பரப்பில் குறிப்பாக பாண்டிய நாட்டில் நிறைய


 பண்டைய தமிழக நிலப்பரப்பில் குறிப்பாக பாண்டிய நாட்டில் நிறைய பழங்கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தெற்காசிய கண்டத்தில் இந்த பாண்டிய நாட்டை விடவும் மிகக் கூடுதலான கல்வெட்டுக்கள் இலங்கையில்தான் காணப்படுகின்றன. அவை சமணம் பற்றியே பேசுகின்றன. சமணம் என்ற சொல் பொதுவாக அருகம், ஆசீவகம் ,பெளத்தம் ஆகிய மதங்களை குறிக்கப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டாலும் கூட முற்றும் முழுவதுமாக சமணம் என்ற சொல் பண்டைய காலத்தில் ஆசீவகத்தையே குறிக்கும் உதாரணத்திற்கு கழுவிலேற்றி கொல்லப்பட்ட சமண சிற்பங்கள்.

இவர்கள் நீண்ட விரிந்த சடையோடு இருப்பவர்கள்,இவர்களே சமணர்கள். சடையை முழுவதுமாக மழித்துக் கொண்டவர்கள் அருகர்கள். பெளத்தர்கள். இத்தகைய சமணர்கள் எனப்படும்
ஆசீவகம் பற்றிய கல்வெட்டுக்கள் ,பாழிகள் அவை எங்கே காணப்படுகின்றன என்றால் அவை பழம்பாண்டிய நாடாக விளங்கிய சங்ககால தமிழக நிலப்பகுதியான இலங்கையில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக பழந்தமிழக நிலப்பரப்பிலே தான் காணப்படுகின்றன. இத்தகைய பாழிகள் போன்ற அமைப்புக்களோ அல்லது கல்வெட்டுக்களோ வடநாட்டில் கிடையாது. இத்தகைய பாழிகள்,கல்வெட்டுக்கள் ஜெய்ன, பெளத்தர்களுக்கு உரியதென்றால் ஏன் வட நாட்டில் காணப்படவில்லை. இவை இரண்டும் அங்கேதானே தோன்றி வளர்ந்தன. எனவே இங்கு காணப்படுகின்ற
1. எல்லா கல்வெட்டு இடங்களுமே இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும் பெருவழிப் பாதைகளில் இருக்கின்றன
2. எல்லா இடங்களிலும் நிலாப் பாறைகள் என்னும் வானியலை ஆய்வு செய்ய உதவும் உயரம் அதிகம் உள்ள திறந்த வெளிப் பாறைகள் உள்ளன. சில இடங்களில் அவற்றில் கற்படுக்கைகளும் உள்ளன.
3. இவற்றில் நிறைய இடங்களில் வெண் சாந்து பாறை ஓவியங்களும், சில இடங்களில் செஞ்சாந்து ஓவியங்களையும் காண முடிகிறது. இதிலிருந்து இந்த இடங்கள் தொடர்ந்து மக்கள் வாழும் அல்லது மக்கள் வந்து செல்லும் அல்லது மக்கள் பயன்பாட்டில் இருந்த இடங்களாக இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
4. சில பாறை ஓவியங்களில் வானிலை சார்ந்த ஓவியங்களையும் காண முடிகிறது. அவற்றில் சில இடங்களில் தமிழி கல்வெட்டுக்கள் இல்லாவிட்டாலும் கூட பாறைக் கீறல்களும், வெண் சாந்து ஓவியங்களும் வானியல் ஆராய்ச்சியை மையப் படுத்தியே உள்ளன. அதே போன்று தமிழக ( புலிப் பொடவு மற்றும் பெருமுக்கல் ஒரு சிறந்த உதாரணம்). இது போன்ற ஓவியங்களை இங்கு வாழ்ந்த அறிவர்களே வரைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
5. தமிழிக் கல்வெட்டு இருக்கும் எல்லா இடங்களில் மருந்து அரைக்கும் குழிகளைக் காண முடிகிறது.
6. இந்த நிலாப் பாறைகள், மருந்துக் குழிகள் மற்றும் வானியல் தொடர்பான வெண் சாந்து ஓவியங்களை வைத்து இவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் “ தமிழ் அறிவர்கள்” தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்ல முடியும்
7. சித்தன்ன வாசலில் ஓவியங்கள் இருக்கும் குடைவரைக்கு இன்றும் “அறிவர் பள்ளி” என்றுதான் பெயர். ஆசீவகர்களின் பள்ளிக்கு அறிவர் பள்ளி என்றுதான் பெயர் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
8. ஜெயினர்களின் தொடக்க காலத்தில் மருத்துவமும் , வானிலை ஆய்வும் பெருங்குற்றமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.ஜெயினர்களின் நூலான “உத்திரயாயத்தின சூத்திர”த்தில் வானியல் ஆராய்ச்சி, மருத்துவம் , சோதிடம் போன்றவற்றை யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறது. எனவே தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஆசீவகர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவு.
இத்தகைய பெரும்பாலான கல்வெட்டுக்கள் கி.மு. 3, 2 மற்றும் 1 நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அதாவது சங்ககாலத்தைச் சேர்ந்தவையாகும்.
9. வானியல் ஆய்வில் அறிவர்களின் பங்கைப் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஆனால் ஜெயினர்களின் தொடக்க கால நூல்கள் கூட வானியல் மற்றும் மருத்துவ அறிவைப் பற்றி சொல்லவில்லை .
10. கிட்டத்தட்ட இவ்வாறான எல்லா தமிழி கல்வெட்டுக்கள் உள்ள இடத்தின் அருகிலும் ஒரு ஐயனார் கோவிலைக் காண முடிகிறது. இதிலிருந்து, இங்கு வாழ்ந்த அறிவர்கள், உயிருடன் இருக்கும்போது மக்களால் “ஐயனாக” மதிக்கப்பட்டு, இறந்த பின்னர் “ஐயனாராக” வழிபடத் தொடங்கினர்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...