கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா? -என்பது கேள்வி.
ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை 100° கொதிக்க வைக்க பர்னரை முழு அளவில் எரிய வைத்தால் இது கொதிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் ஆகும். இதையே பர்னரை சிம்மில் வைத்திருந்தால் தண்ணீர் 100° கொதிக்க 40 நிமிடங்கள் வரை ஆகும்! எனவே தண்ணீர் கொதிக்க இரண்டிற்கும் ஆகும் கேஸ் செலவு கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான் இருக்கும்; நேரம்தான் வித்தியாசம்!
கேஸ் அடுப்பில் 2 , 3 அல்லது 4 என அளவில் வித்தியாசமான பர்னர்கள் அமைத்திருப்பது நாம் அதிகமான பாத்திரங்களில் ஒரே நேரத்தில் உணவை விரைவில் சமைப்பதற்கு வசதியாக இருக்க மட்டுமே!
வீட்டில் ரோஸ்ட் தோசை சுடுவதானால் அடுப்பின் மீடியம் பர்னரை முதலில் முழு அளவில் எரியச் செய்து தோசைக்கல்லை முதலில் முழு அளவில் சூடுபடுத்த வேண்டும். தோசை மாவை கல்லில் ஊற்றி பரவலாகத் தேய்தவுடனேயே உடனடியாக அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். இவ்வித வேலைகளுக்காக பர்னர்கள் குறைத்துக் கூட்டும் விதமாக அமைந்து உள்ளது.
பர்னர்கள் சிறிது ,நடுத்தரம், பெரியது என அமைக்கப்பட்டுள்ளதற்கும் இவைகளைக் கூட்டிக் குறைக்கும் விதமாக அமைந்துள்ளது நாம் எதனை எப்படி அந்த கேஸ் அடுப்பில் சமைக்கின்றோம் என்பதற்காகவே.
நீங்கள் புதிதாக கேஸ் அடுப்பு வாங்குவதென்பது உங்கள் குடும்பத்தின் தேவை, அளவு மற்றும் வசதியைப் பொறுத்ததே.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதிக பர்னர்கள் உள்ள அடுப்பு மிகவும் சிறந்தது. இதனால் ஒரே நேரத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் உணவை வைத்து துரிதமாக சமையல் வேலைகளை முடிக்க இயலும்.
மற்றபடி பர்னரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள உள் தட்டுகள் சுலபமாக எடுத்து சுத்தம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். பால் பொங்கி வழிந்தால் இவைகளை சுலபமாக எடுத்து சுத்தம் செய்து பொருத்த வசதியாக இருக்க வேண்டும்.
எவர்சில்வர் அடுப்புகளை விட கிளாஸ் டாப் அடுப்புகளானால் இதனை சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும்.
அடுப்பின் பித்தளை பர்னர்கள் முந்தைய அலுமினிய பர்னர்களை விட சுத்தம் செய்வது இலகுவானது

No comments:
Post a Comment