சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் பொழுது பிறந்த குழந்தைகளுக்காக இந்த பதிவு
சூரிய சந்திர கிரகணம் ஏற்படும் காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றது, உதாரணமாக கல்வியில் தடை, திருமணத்தடை, வாழ்க்கையில் முன்னேற இயலாமை இது போன்ற பல தடைகள் ஏற்படுகின்றன, இவை மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன,
இதற்கான தீர்வுதான் என்ன,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரங்கநாதன் முன்பு இரண்டு அகல் விளக்கு எரிந்து கொண்டே இருக்கின்றன, அவைகளில் ஒன்று சூரியன் மற்றொன்று சந்திரன்,
நாம் இந்த சூரிய சந்திர விளக்குகளை வழிபட்டு அரங்கனை தரிசனம் செய்யும்பொழுது சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தால் ஏற்படும் எந்தவித தோசங்களும் நம்மை நெருங்காது,
இவ்வாறு கிரகண காலத்தில் பிறந்தவர்கள் வருடத்தில் ஒரு முறையேனும் குறிப்பாக தமிழ் வருடத்தில் அரங்கனை தரிசனம் செய்து வாழ்வில் வளம் பெறுவீர்கள், 100% உண்மை,
சரி என்று நாம் அரங்கனை தரிசனம் செய்யலாம்,
வெள்ளிக்கிழமை, அம்மாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, ரேவதி நட்சத்திர நாள் மற்றும் தங்கள் நட்சத்திர தாரா பலன் உள்ள நாள் இதில் ஏதேனும் ஒரு நாளில் தாங்கள் அரங்கனை தரிசனம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும்
சூரியகிரகணம் எனில் கோதுமை அன்னதானமும்
சந்திர கிரகணம் எனில் பச்சரிசி அன்னதானமும் அரங்கன் கோவிலில் வழங்குவது மிகப் பெரிய புண்ணியத்தைத் தரும்.

No comments:
Post a Comment