சந்திரன்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் எவ்வளவு முக்கியமோ அது போல் சந்திரனும் முக்கியம். சந்திரன் இருக்கும் இடமே ராசி. லக்னம் என்பது உயிர். சந்திரன் என்பது உடல்.
விதி மதி கதி இவைகளை வைத்துதான் பலன் அறிய வேண்டும். மதி என்பதுதான் சந்திரன். இது ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை லக்னம் பலம் இழந்து இருந்தால் சந்திரனின் நிலையினை வைத்து பலன் அறியலாம்.
குழப்பம், அவசரத்தன்மை, தவறான முடிவினை எடுப்பது போன்ற நிலையினை தருவது இவர்தான். லக்னத்திற்கு 6 மற்றும் 8 ஆம் இடத்தில் இருப்பது , சனி தொடர்பு கொள்ளும் சமயத்தில் இவைகள் ஏற்படுவதுண்டு.
தாயின் நிலையினை தெரிவிப்பதும் சந்திரன்தான் மேலும் இதற்கு நான்காம் இடத்தினையும் காண வேண்டும்.
பொது ஜன தொடர்புக்கும் இவர்தான். உணவுக்கும் இவர்தான். சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் இவை இரண்டும் நன்றாக இருக்கும்.
சந்திரன் ஆறாம் இடத்தில் இருந்தால் அடிக்கடி வேலை மாற்றத்தை கொடுக்கும்.
லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நல்ல அழகான தோற்றம் உடையவராக இருப்பார்.
ஐந்தாம் இடத்தில் இருக்கும் போது காதல் வாய்ப்பையும் கொடுப்பார் மேலும் இதற்கு சுக்ரனின் நிலையையும் பார்க்க வேண்டும். இந்த இணைவு சமயத்தில் உறவினர் பெண்களுடன் சச்சரவையும்
சந்திரன் நீச்ச நிலையினை பெற்று இருந்தால் தாயின் அரவணைப்பு கிடைக்காமல் போகலாம். பயம் கலந்த மனப்பான்மை உடையவராக இருப்பார்கள். காலம் தவறி உண்ணுதல், கிடைக்கும் உணவினை பெறுதல் போன்ற நிலை வரலாம். கேதுவின் இணைவு இருந்தாலும் இந்த நிலையினை தரலாம்.
ராகு சந்திரன் இணைவு இருந்தால் அதிக எதிர்பார்ப்பை கொடுக்கும். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பும் இருக்கும். தாயுடன் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.
மூன்றில் சந்திரன் இருந்தால் இடது கை எழுதும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
12 ஆம் இடத்தில் இருந்தால் அதிக வெளியூர் பயண நாட்டம் உடையவராக இருப்பார்கள். கால் சம்பந்தப்பட்ட பிரச்னையும் வரலாம்.
பொதுவாக கும்ப லக்னத்திற்கு சந்திர தசை வருவது நல்லதாக இருக்காது. சந்திரன் கெட்டு இருப்பது அல்லது மறைவது ஓரளவுக்கு நல்லது.
சந்திராஷ்டமம் ... இதன் தாக்கம் ஒரு ஆறு மணி நேரம் மட்டுமே இருக்கும். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் பிரச்னைகள் இல்லை.
இவைகள் அனைத்தும் பொது விதி. பிற கிரகங்களின் நிலை, சேர்க்கை, குரு பார்வை , யோக தசா ,காலங்களில் பலன்கள் மாறும்.

No comments:
Post a Comment