Tuesday, 23 December 2025

நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம்


 நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம்

விழுதி இலை பொடியை வெந்நீருடன் கலந்து பருகி வந்தால்
இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு
அதாவது
வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது
இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே மாறிவிடும்
இந்த மாற்றத்தை ஒரே நாளில் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது இதை உணர்ந்து கொள்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும்
ஒரு பயிற்சி முறை
இன்று விழுதி இலை நீரை பருகும் முன்னால் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடிப் பாருங்கள்
அடுத்த நாள்
விழுதி இலை பொடி நீரை பருகிவிட்டு அதே தூரத்தை ஓடிப் பாருங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண்மையில் உணரலாம்
முதல் நாள் ஓடுகின்ற பொழுது அதிகமான களைப்பு ஏற்படும் அடுத்த நாள் ஓடுகின்ற போது அந்த களைப்பின் அளவு குறைந்துவிடும்
விழுதி இலையை நீரை பருகிவிட்டு ஓடுகின்ற பொழுது இரண்டொரு நாட்களில் பெரிதான வித்தியாசம் தெரியாவிட்டாலும்
ஒரு வார காலத்தின் முடிவில்
ஓடினால் ஏற்படும் பெருமூச்சும் உடல் களைப்பும் முழுமையாக நீங்கிவிடும் இந்த வித்தியாசத்தை நாம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்
ஆக
தினமும் இந்த வைத்திய முறையை கடைபிடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறுகின்றது ஓடினால் செலவாகும் பிராணசக்தி உடனே உடலில் சேகரிக்கப்படுகிறது அதனால்தான் ஓடினாலும் உடலில் களைப்பு ஏற்படுவதில்லை
எனவே இன்றைய காலகட்டத்திற்கு பிராண சக்தியைப் பெறுவதற்காக இதைவிட பெரியதொரு எளிதான வைத்திய முறை இனி தேடினாலும் கிடைக்காது பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்
விழுதி இலை நீரை தினந்தோறும் பருகி வந்தால் நுரையீரல் பலம் பெறுவதோடு மட்டுமல்லாமல் வாத பித்த சிலேத்தும் எனும் முக்குணங்களின் மாறுபாடுதள் சமநிலை படுத்தப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி உடலில் தோன்றும் நோய்கள் அனைத்தும் விலகி விடுமளவிற்கு இந்த விழுதி இலை பொடி உதவுகின்றது
விழுதி இலை பொடி நீரை பருகி வந்தால்
உடல் பலவீனம் நீங்கும்
தேவையற்ற கொழுப்புகள் குறையும் உடல் இறுகி நரம்பு மண்டலம் பலம் பெறும்
நரம்பு தளர்ச்சி மட்டுப்படும்
உடலின் வெப்பம் தணியும்
உடலின் களைப்பு நீங்கும்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டை கர்ப்பப்பை கோளாறுகள் போன்ற நோய்கள் அனைத்தும் நீங்கும்
நூறு கிராம் விழுதி இலை பொடியுடன் இருபது கிராம் சீரக பொடியும் பத்து கிராம் மிளகு பொடியும் ஐந்து கிராம் மஞ்சள் பொடியும் கலந்து இதை தினந்தோறும் காலை மாலை இருவேளையும் வெந்நீர் அல்லது பாலுடன் கலந்து ஒரு மண்டல காலம் பருகி வர நுரையீரலுக்கு பலமுண்டாகும் மேலும் இதன் மூலம் மேலே சொன்ன அனைத்து பயன்களும் நமது உடலுக்கு கிடைக்கும்
குறிப்பாக சுவாச சம்பந்தமான ஆஸ்துமா மூக்கடைப்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதல் போன்ற நோய்கள் அனைத்தும் விழுதி இலை பொடி நீரை பருகி வந்தால் விலகி ஓடிவிடும்
விழுதி இலை பொடியில்
இன்னொரு எளிய வைத்திய முறை
நமது வீட்டில் ரசம் வைக்கின்ற பொழுது ரசத்தின் மேல விழுதி இலை பொடியை தூவி சாப்பிட்டு வந்தால் இதன் மூலம் உடலில் இருக்கின்ற வாதநீர்கள் வெளியேறி உடல் வலிகள் நீங்கும் வாத நோய்கள் உடலில் வராதபடி நமது உடலை காக்கும் மலச்சிக்கல் விலகும் மேலும் உடலுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்

No comments:

Post a Comment

பூண்டின் மருத்துவக் குணங்களால்,

 பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தா...