Tuesday, 23 December 2025

*கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோவில்*


 *கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோவில்*

*ஆண்டு முழுவதும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது தினமும் விழும் அதிசயம்*
*திருமணத்தடை நீக்கும் தென்
திருமணஞ்சேரி*
கொங்கு மண்டலத்தில் சைவத்தின்
பெருமையைப் பறைசாற்றும் வகையில்
அமராவதி ஆற்றின் கரையோரம்
கொழுமம் முதல் கரூர் வரை 11
சிவாலயங்கள் அமைந்துள்ளன. இதில் கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியைக் கொண்டது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக்கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி ஆகும்.
இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான்
மகிழ்ச்சியை அளிப்பதால் 'மருதீசர்'
எனவும், பாவவினை என்னும் நோயை
நீக்க மருந்தாகத் தோன்றியதால்
'மருந்தீசர்' என்றும், அர்ச்சுனன்
வழிபட்டதால் 'அர்ச்சுனேஸ்வரர்' என்றும்
பல்வேறு நாமங்களில்
அழைக்கப்படுகிறார்..
இறைவியின் திருநாமம் கோமதி. கொங்கு மண்டலத்தில், அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை அமைந்துள்ள 11 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
கொங்கு மண்டலத்திலேயே மிகப் பெரிய கருவறை விமானம் கொண்ட கோவில் இது.
மூலவர் அர்ச்சுனேசுவரர், மிகப்பெரிய அவுடையாருடன் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளி உள்ளார்.
அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு தினமும், சூரியன் காலையில் உதித்ததும், சூரியனின் ஒளிக்கதிர்கள் அமராவதி ஆற்றின் தண்ணீரில் பட்டு, மூலவர் அர்ச்சுனேசுவரரின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கும்.
இந்த சூரிய ஒளியானது, ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை ராஜகோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும்.
இத்தல இறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.
மதுரை மீனாட்சி கோயிலைப்போல் இத்தலத்தில் சுவாமிக்கு வலது பக்கம் அம்மனின் ஆலயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
திருப்பூர் - உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில், கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் .

No comments:

Post a Comment

பூண்டின் மருத்துவக் குணங்களால்,

 பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தா...