Tuesday, 23 December 2025

சனியை பற்றிய விளக்கத்தை எழுதுவோம்..


 சனியை பற்றிய விளக்கத்தை எழுதுவோம்..

ஒரு பெரிய ஜோதிச கலாரத்னாவாம் அவரே அவர் ஐடியில் போட்டு..ஐடியை lock செய்து வைத்துள்ளார்..
இதில் விளக்கமாக எழுத வேண்டும் என்று கேட்டார்..
இப்போது எழுதுவோம்..
மனித உடல் இயற்கையோடு இணைந்தது..கிரகங்களின் நேரடித் தாக்கத்தை விட அவற்றால் உருவாகும் இயற்கை மாற்றங்களே நம்மைப் பாதிக்கின்றன..
அது எவ்வாறு பாதிக்கின்றது என்பது எனில் பூமி மற்றும் சனி நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது..
சூரியனை மையமாக சுற்றி வரும் போது அதன் கதிர்வீச்சு அதன் தூரத்தை பொருத்து மாற்றத்தை கொடுக்கும்..அவ்வளவே..
அவை எந்த எந்த Factors-ல் மாற்றத்தை கொடுக்கும் என்றால்..
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு காந்தப்புலம் Magnetic Field உள்ளது.. சூரிய குடும்பத்தில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்கள் பூமியின் வளிமண்டலத்தில் சிறிய மின் மாற்றங்களை ஏற்படுத்தலாம்..
மனித மூளை மின் தூண்டுதல்களால் Electrical impulses இயங்குகிறது விண்வெளியில் ஏற்படும் இத்தகைய நுட்பமான காந்தப்புல மாற்றங்கள் மனித மூளையின் நியூரான்களில் Neurons மிகச்சிறிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து..
இது மிக மிக நுணுக்கமான அளவில் நம் உடலின் மின் வேதியியல் Electro chemical சமிக்ஞைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அறிவியல் கூறுகிறது..
இப்படியாக நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம்..எலும்பு..மன உறுதி..போன்றவற்றில் தாக்கத்தை கொடுக்கும்..
ஒருவருக்குச் சனியின் தாக்கம் அதிகமாகும்போது அவரது செரிமான மண்டலம் மெதுவாகச் செயல்படுவது இரத்த ஓட்டத்தில் மந்தநிலை அல்லது நரம்புகளில் சோர்வு போன்றவை ஏற்படலாம்..
இதுவே மன அளவில் சோம்பலாகவும் முடிவெடுக்கத் தாமதமாகவும் வெளிப்படுகிறது..
சனியின் தாக்கம் பெரும்பாலும் ஒருவித பயத்தை அல்லது எச்சரிக்கை உணர்வைத் தூண்டும்..
இது மூளையில் உள்ள அட்ரினலின் Adrenaline அல்லது கார்டிசோல் Cortisol போன்ற ஹார்மோன்களின் அளவை மாற்றியமைக்கலாம்..
இப்படி சனி தாக்கம் காந்த புலம் வழியே பூமியை அடைகிறது..அவ்வளவே மற்றபடி..
இதற்க்கு பரிகாரம் என்ன என்பதை விளக்கமாக கூறுகிறேன்..
சனி கிரகத்தின் முக்கியமான பிரச்சினை நரம்பு...எலும்பு..சோர்வு..சோம்பல்..
தாமதம் இதை சரி செய்ய கோவிலுக்கு போ..
எனெனில் மனதிற்கு நம்பிக்கை தேவை..அந்த நம்பிக்கையுடன் நடந்து செல்லும் போது உடல் மனம் ஆரோக்கியம் மேம்படும்..
ஆகையால் விளக்கு ஏற்ற சொன்னார்கள்..
சனிக்கு சிறந்த பரிகாரமே..
உண்மை..உழைப்பு..
ஏற்றுக்கொள்ளுதல்
மற்றும் வியர்வை வெளியேற நடப்பது மட்டுமே மற்றபடி வேறு ஒன்றுமில்லை..
சனி கிரக தாக்கத்தால் சோம்பல் விலகுகிறது..தாமதத்தை சீர்படுத்தி கொள்ள வாய்ப்பு அளிக்கிறது..
வாழ்கையே சீர்படுத்தி கொள்ள வாய்ப்பு அளிக்கிறது...
மேலும் சனிக்கிழமை நீராடுதல்..
சனிக்கான தானியமாக எள் கருதப்படுகிறது..அறிவியல் ரீதியாக எள்ளில் அதிகப்படியான கால்சியம் Calcium மற்றும் துத்தநாகம் Zinc உள்ளது..
இது சனியால் பாதிக்கப்படும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் குளியல் எடுப்பது நரம்புகளை அமைதிப்படுத்தி உடலில் உள்ள தேவையற்ற உஷ்ணத்தைக் குறைக்கும்..
ஜோதிட ரீதியாக சனி பகவானை நீல மேனி உடையவன் என்று அழைப்பார்கள்..
சனியின் எதிர்மறை கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும்போது அதற்கு நேரெதிர் அல்லது ஒத்திசைவான நிறங்களை அணிவது அந்த அதிர்வுகளைச் சமன் செய்ய Neutralize உதவுகிறது..
​இது கிட்டத்தட்ட ஒரு கலர் தெரபி Color Therapy போன்றது..நீல நிறத்தைப் பார்ப்பதும் அணிவதும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நரம்புகளைத் தளர்த்தவும் உதவுவதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கிறது..
இப்படியான ஒரு சனியை பரிகாரத்தால் அடைக்கலாமா..
மேலும் சனி மந்திரம்
ஓம் சனைச்சராய வித்மஹே சூர்யபுத்ராய தீமஹி தன்னோ மந்தப் ப்ரசோதயாத்..
என்ற இந்த சனி காயத்ரி மந்திரம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் வரிசையில் Rhythmic Frequency இயங்குகிறது..
சாதாரணமாக ஒரு மனிதன் இந்த மந்திரத்தை நிதானமாக உச்சரிக்கும்போது அது 110 Hz முதல் 160 Hz வரையிலான அடிப்படை அதிர்வெண்ணை Fundamental Frequency உருவாக்குகிறது..
இந்தத் தாழ்வான அதிர்வெண் ஒலிகள் உடலின் தசைகள் மற்றும் எலும்பு முடிச்சுகளில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தும் தன்மை கொண்டவை..
இந்த மந்திரத்தின் முழு பலனைப் பெற இதை நொடிக்கு ஒரு சொல் என்ற வேகத்தில் மிக நிதானமாகச் சொல்லுங்கள்..
சொல்லும்போது ஏற்படும் அந்த தொடர்ச்சியான அதிர்வு Resonance உங்கள் உடலின் காந்தப்புலத்தை Aura சீரமைக்கும்..
இப்படி இந்த சனி மஹாராஜாவை இன்னும் எழுதலாம்..
இந்த ஜோதிட பட்டம் வாங்கிய புத்தக மக்கர் குருப்புகள் யாராவது ஒரு விளக்கம் கொடுத்தது..
ஜோதிட குருமார்கள் யாராவது இவ்வளவு விளக்கமாக எழுதி இருந்தால்..
இல்லை என்றால் இதை Copy செய்து மனப்பாடமாக ஒப்பியுங்கள்

No comments:

Post a Comment

பூண்டின் மருத்துவக் குணங்களால்,

 பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தா...