Saturday, 20 December 2025

ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள்


 ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள்

வாராஹி அம்மன் பன்றி முகமும், பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர்.
பின்இருகரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டிருப்பார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி, சிம்மவாகனத்தில் அமர்ந்திருப்பார்.
தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை!
அபிராமி அந்தாதியில் இரு பாடல்களில் வாராஹி என அம்பிகையை அபிராமி பட்டர் பாடுகிறார்.
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
வராஹி காயத்திரி
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
வராஹி காயத்திரி வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவது.
வாராஹி மந்திரம்
|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: |
க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.
வாராஹி அம்மன் வழிப்பாட்டு முறைகள்.
புதன், சனிக்கிழமைகள், திரயோதசி திதி, பஞ்சமி திதி, நவமி, திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.
எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.
ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி. அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான
நைவேத்தியங்களுடன் பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.
வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும்.
மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.
பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.
நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.
ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத்தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம். அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.
நைவேத்தியங்கள்:-
தோல் எடுக்காத உளுந்து வடை, மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன்படைக்கலாம்
1. வாராஹிக்கு ஏற்ற மாலை – செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் – செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு – தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு,
தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக்கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் – மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் – வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரிவேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்- செவ்வண்ண வஸ்திரம்
ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
ஜபத்திற்கான மந்திரங்கள்
ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 1:
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வாராஹி வராஹமுகி
ஐம் க்லெளம் ஐம் அந்தே அந்தினி நம: ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பினி நம: மோஹே மோஹினி நம: ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஐம் க்லெளம் ஐம்ஸர்வ துஷ்டப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக் சித்த சக்ஷுர் முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம்
குரு குருசீக்ரம் வச்யம் குரு குரு ஐம் க்லெளம் ஐம்
ட: ட: ட: ட: ஹீம் பட் ஸ்வாஹா!!
ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம் – 2:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்; நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி;
அந்தே அந்தினி நமஹா; ருந்தே ருந்தினி நமஹா;
ஜம்பே ஜம்பினி நமஹா; மோஹே மோஹினிநமஹா;
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா;
சர்வ துஷ்ட பிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக் சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம்
குரு குரு சீக்ரம் வச்யம், ஐம் க்லௌம்
ட: ட: ட: ட: ஹூம் அஸ்த்ராய பட் ||
ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம்:
ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட: ட: ஸ்வாஹா||
அல்லது
ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட: ட: ஸ்வாஹா||
இவள் ஸ்ரீ மகாவாராஹியின் உபாங்க தேவதை.
இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை, தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக் காப்பாள்.

No comments:

Post a Comment

விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி.

 விதையின் வீரியம் போல – புத்திர யோகம் போல குழந்தையின் வளர்ச்சி. ஒரு விவசாயி நிலத்தில் விதை இடும் முன் முதலில் கவனிப்பது விதையின் தரத்தையே. வ...