சிம்ம ராசி ராசி அல்லது சிம்ம ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான குணங்கள்,பிரச்சனைகள்
திறமைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் சிம்ம ராசி ராசி அல்லது சிம்ம ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

யாரெல்லாம் சிம்ம ராசி ராசி அல்லது சிம்ம ராசி லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி.
இவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே அடுத்தவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியாகத்தான் இருக்கும்.
அதாவது அடுத்தவர்களுக்காக வாழ்வதுதான் வாழ்ந்து கொண்டிருப்பது தான் இவர்களுடைய வாழ்க்கையாக இருக்கும்.அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்கு இவர்களுடைய பங்களிப்பு உதவிகள் அவர்கள் வாழ்க்கையில் மிக அதிகமாக இருக்கும்.

இவர்களுடைய உதவியால் ஆலோசனைகளால் நிறைய பேர் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி சென்றிருப்பார்கள் பயனடைந்து இருப்பார்கள்.நிறைய பேர் வாழ்க்கையில அவர்கள் முன்னேறுவதற்கு இவர்களுடைய பங்களிப்பு என்பது அவர்கள் வாழ்கையில் மிக அதிகமாக இருக்கும்.

ஆனால் இவர்கள் வாழ்க்கையில் யாருக்கெல்லாம் உதவி செய்கிறார்களோ யாரெல்லாம் இவர்கள் மூலமாக வாழ்க்கையில் முன்னேறி சென்றார்களோ பயனடைந்தர்களோ அவர்களெல்லாம் இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வர மாட்டார்கள்.
அதாவது இவர்கள் யாருக்கெல்லாம் உதவி செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வர மாட்டார்கள்.

இவர்களால் யாரெல்லாம் வாழ்க்கையில் முன்னேற்றம் வளர்ச்சி அடைந்தார்களோ
பயனடைந்தார்களோ அவர்கள் எல்லாம் இவர்கள் செய்த உதவியை நன்றியை மறந்து விடுவார்கள்.
வேலை முடிந்த உடன் இவர்களை எல்லோரும் கலட்டி விட்டு விடுவார்கள்,இவர்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள்,இவர்களை ஏமாற்றி விடுவார்கள்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதால் இவர்களுக்கு எந்த விதமான பிரயோஜனம் நன்மைகளும் உதவிகளும் அவர்கள் மூலம் இவர்களுக்கு கிடைக்காது
யாருக்கு எந்த உதவி செய்தாலும் இவர்களுக்கு அதனால் எந்த விதமான பயனும் கிடையாது எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது.

கடைசி வரை அடுத்தவர்களால் இவர்களுக்கு ஏமாற்றமும் கஷ்டமும் பிரச்சனைகளும் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் வரும்.துரோகத்தால் அதிகமாக வாழ்க்கையில் வீழ்த்தப்படுபவர்கள் இவர்கள்தான்.
இவர்களைத் தேடி என்றைக்குமே சில பேர் சில கூட்டம் எப்பொழுதுமே இவர்களை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.இவர்களிடம் வேலை வாங்குவதற்கு மட்டுமே.இவர்களிடம் வந்த வேலை காரியம் முடிந்த உடன் இவர்களை அனைவரும் மறந்து விடுவார்கள்.

மேலும் இவர்களுக்கு தந்தை மூலமாக வாழ்க்கையில் எந்தவிதமான உதவிகள் பயன்கள் நன்மைகள் ஆதாயங்கள் இருக்காது.மேலும் தந்தை வழி உறவினர்கள் சொந்தங்கள் மூலமாகவும் இவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான நன்மைகள் பயன்கள் ஆதாயங்கள் உதவிகள் இருக்காது.
தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் வாழ்க்கையில் இவர்களுக்கு எந்த காலத்திலும் எந்த விதமான உதவிகள் பயன்கள் பிரயோஜனம் இருக்காது.

தந்தையுடைய சொத்து வீடுகள் நிலங்கள் இவற்றை அனுபவிக்க கூடிய கொடுப்பினைகள் என்பது இவர்களுக்கு வாழ்க்கையில் கிடையாது.முதலில் எதுவும் இருக்காது இருந்தாலும்
இவர்களால் இதனை அனுபவிக்க முடியாது. மேலும் இவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை உத்தியோகம்(job) படிப்பு தொழில் இவர்களுக்கு ஒத்து வராது.
இவர்கள் வெளிநாடு செல்வதால் எந்தவிதமான பிரயோஜனமும் இவர்களுக்கு இருக்காது.

வெளிநாடு சென்று இவர்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை இவர்களால் இவர்களுக்காக இவர்கள் விருப்பத்திற்காக என்று அனுபவிக்க முடியாது.வெளிநாடு சென்று இவர்கள் சம்பாதித்த பணத்தையும் இவர்களால் சேமித்து வைக்க முடியாது அந்த பணம் இவர்கள் கையில் தங்காமல் நிற்காமல் போய்விடும்.இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் மற்றவர்கள் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

வெளிநாடு சென்று இவர்கள் எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் இவர்களுக்கு எந்த விதமான முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்காது.வெளிநாடு செல்வதால் இவர்கள் வாழ்க்கையில் எந்த பயனும் கிடையாது.இவர்கள் வெளிநாடு சென்று எத்தனை காலங்கள் கஷ்டப்பட்டாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றம் வளர்ச்சி என்பது இருக்காது.எந்த நிலைமையில் இவர்கள் வெளிநாடு சென்றார்களோ அதே நிலைமையில் தான் இவர்கள் திரும்பி வருவார்கள்.

மேலும் இவர்களுக்கு 'வீடு வண்டி வாகனங்கள் சொத்து நிலங்கள்" இதுபோன்ற விஷயங்களாலும் அதே போன்று அம்மா மற்றும் அம்மாவழி சொந்தங்கள் உறவுகளாலும் வாழ்க்கையில் இவர்களுக்கு
தேவை இல்லாத அசிங்கங்கள் அவமானங்கள் தர்மசங்கடங்கள் பிரச்சனைகள் இவர்களுக்கு ஏற்படும்.

அதாவது இவர்கள் அம்மா மற்றும் அம்மாவழி சொந்தங்களால் உறவுகளால் வாழ்க்கையில் தேவையில்லாத கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் அசிங்க அவமானங்களுக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஆளாகி இருப்பார்கள் அல்லது ஆளாகுவார்கள்.

அம்மா சொல்படியும் அல்லது அம்மாவுடைய சொந்தங்கள் உறவினர்கள் சொல்படியும் இவர்கள் எதை செய்தாலும் அந்த விஷயங்கள் மூலமாக இவர்களுக்கு கஷ்டங்கள் இழப்புக்கள் ஏமாற்றங்கள் அசிங்க அவமானங்கள் தான் இவர்களுக்கு ஏற்படும்.இவர்கள் வாழ்க்கையில் அம்மா மற்றும் அம்மாவழி உறவினர்கள் எடுத்த எல்லாவிதமான முடிவுகளும் இவர்களுக்கு அது சாதகமாக அமைந்திருக்கிறது பாதகமாக இழப்புக்களில் பிரச்சனைகள் தான் முடிந்திருக்கும்.

மேலும் வீடு சொத்து நிலங்கள் வாகனங்கள் எந்த விஷயங்களால் இவர்களுக்கு பிரச்சனைகள் இழப்புகள் ஏமாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு மிக அதிகம்.இது சார்ந்த விஷயங்கள் மூலமாக இவர்களுக்கு வாழ்க்கையில் அசிங்க அவமானங்கள் கண்டிப்பாக இவர்களுக்கு ஏற்படும்.

மேலும் தவறான விஷயங்கள் மூலமாகவும் அல்லது தவறான வழிகளில் மூலமாகவும் சொத்து வீடு நிலங்கள் இவர்கள் வாங்கும் படியான சூழ்நிலைகள் இவர்களுக்கு ஏற்படும்.பிறகு அதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் தேவை இல்லாத பிரச்சனைகள் கஷ்டங்கள் ஏற்பட்டு விடும்.அடுத்தவர்கள் சொல்படி கேட்டு இவர்கள் ஏதாவது வீடு நிலங்கள் சொத்துக்கள் வாங்கினார் என்றால் அதனால் இவர்கள் தேவை இல்லாத பிரச்சனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆளாகி விடுவார்கள்.

இவர்களுக்குத் தெரிந்த வித்தைகள் மூலமாக அது அறிவு சார்ந்த விஷயங்களாக இருக்கலாம்.
கலைகள் சார்ந்த விஷயங்களாக இருக்கலாம் அதாவது தங்களுடைய திறமைகளை அறிவுகளை தவறான விஷயத்திற்கு பயன்படுத்தி பிறகு அதனால் தேவையில்லாத இழப்புக்களுக்கும் கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகும்படியான சூழ்நிலையில் இவர்களுக்கு வாழ்க்கையில் வரும்.

அதேபோன்று இவர்கள் பேசக்கூடிய வார்த்தைகள் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் அடிக்கடி தேவையில்லா சண்டைகள் வாக்குவாதங்கள் பிரச்சனைகள் கஷ்டங்கள் ஏற்படும்.பேசும் வார்த்தைகள் மூலமாக இவர்களுக்கு சத்துருக்கள் எதிரிகள் போட்டிகள் பொறாமைகள் உருவாகுவார்கள்.

மற்றவர்களைப் பற்றி சும்மா எதார்த்தமாக இவர்கள் பேசினாலும் அது அவர்கள் காதில் வேறு மாதிரி பொய் சென்று சேர்ந்து விடும்.
இவர்கள் யாரைப் பற்றி தவறாக பேசினாலும் அது மற்றவர்கள் மூலமாக இவர்கள் யாரைப் பற்றி குறை சொன்னார்களோ அல்லது தவறாக பேசினார்களோ அவர்களிடத்தில் போய் சென்று சேர்ந்து விடும் பிறகு அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் தேவையில்லாத சண்டைகள் வாக்குவாதங்கள் பிரச்சனைகள் ஏற்படும்.

யாரைப் பற்றி இவர்கள் தவறாக பேசினாலும் குறை சொன்னாலும்
அது எல்லாருக்கும் தெரிந்துவிடும்
மற்றவர்களைப் பற்றி இவர்கள் சொன்ன விஷயம் என்றைக்குமே இவர்களால் ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாது.அது எப்படியாவது மற்றவர்கள் இடத்தில் பரவி விடும்.

என்றைக்குமே இவர்கள் வார்த்தைகள் விடும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் நாம் என்ன பேசுகின்றோம் யாரைப் பற்றி பேசுகின்றோம்,யாரைப் பற்றி நாம் குறை சொல்லுகின்றோம்.
யாரைப் பற்றி நாம் தவறாக பேசுகின்றோம் என்பதை இவர்கள் மிக மிக சிந்தித்து தான் இவர்கள் வார்த்தைகள் விட வேண்டும் பேச வேண்டும்.

மேலும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த தொழில் செய்தாலும் சரி அல்லது எந்த உத்தியோகத்திற்கு சென்றாலும் சரி அந்த உத்தியோகம் வேலை சார்ந்தும் அந்த தொழில் சார்ந்தும் இவர்களுக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்ருக்கள் என்பது மிக மிக அதிகமாக இருக்கும்.

எல்லாருமே இவர்களை வாழ்க்கையில் போட்டியாக எதிரியாக எடுத்துக் கொள்வார்கள்.
இவர்களை வீழ்த்துவதற்கு என்றே சில பேர் சில கூட்டம் எப்போதும் இருப்பார்கள்.இவர்கள் எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் உத்தியோகத்தில் இவர்களை வீழ்த்துவதற்கு என்றும் இவர்களை வேலையை விட்டு வெளியே துரத்துவதற்கு என்றும் சில பேர் இருந்து கொண்டே இருப்பார்கள்.

அதேபோன்று இவர்கள்
எந்தத் தொழில் செய்தாலும்
அந்த தொழிலில் இவர்களை வீழ்த்துவதற்கு என்றே நஷ்டம்
அடை வைப்பதற்கு என்றே
சில பேர் சில கூட்டம் இருப்பார்கள்.
தேவையில்லாத நபர்களால் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்குவார்கள்.

இவர்கள் எந்த இடத்தில் தொழில் ஆரம்பித்தாலும் அதே இடத்தில்
அதே தொழிலை மற்றவர்கள் வேண்டுமென்றே ஆரம்பிப்பார்கள்
அடுத்தவர்களால் தொழில் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் கஷ்டங்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றது.

மேலும் இவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான எண்ணங்கள் குணங்கள் என்னவென்றால் இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் வேண்டுமென்றால் அந்த விஷயம் அந்த பொருள் இவர்களுக்கு இப்போதே வேண்டும், இப்போதே செய்ய வேண்டும்,
இப்போதே நாம் அடைந்து விட வேண்டும், இப்போதே நாம் அதை வாங்கி விட வேண்டும்,எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும்.

அது எப்போது என்ற வார்த்தை இவர்கள் வாயில் எப்போதுமே வரும்.
ஒரு பொருளை இவர்கள் வாங்க நினைத்தார்கள் என்றால் அந்தப் பொருளை இவர்கள் உடனடியாக இப்பொழுதே நாம் அதை வாங்கி விட வேண்டும் என்று எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு இருக்கும்.

இவர்கள் வாழ்க்கையில் என்ன ஆசைப்பட்டாலும் அதனை உடனடியாக நாம் அடைந்து விட வேண்டும் என்ற குணங்கள் இவர்களுக்கு இருக்கும்.அது காதலாக இருக்கலாம்,
அது தொழிலாக இருக்கலாம், உத்தியோகத்திற்கு(job) செல்வதாக இருக்கலாம்,ஒரு பொருள் வாங்குவதாக இருக்கலாம்,ஒருவரை அடிப்பதாக இருக்கலாம்,வண்டி வாகனங்கள் வாங்குவதாக இருக்கலாம் எதுவா இருந்தாலும் சரி,

மேலும் இவர்களுக்கு அவசரம் ஆத்திரம் ஆக்ரோஷம் ஆவேசம் கோபம் போன்ற குணங்கள் மிக அதிகமாக இருக்கும்.அவசரத்தாலும் ஆத்திரத்தாலும் ஆவேசத்தாலும் இவர்கள் எடுத்து வைக்கின்ற அல்லது இவர்கள் செய்கின்ற எல்லா விஷயங்களும் செயல்பாடுகளும் கடைசி நேரத்தில் இவர்கள் கோட்டை விட்டு விடுவார்கள் சொதப்பி விடுவார்கள்.தேவையில்லாத அவசரத்தாலும் ஆத்திரத்தாலும் இவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் செயல்பாடுகளில் ஏமாற்றங்களை இழப்புக்களை
பிரச்சனைகளை
அடைந்திருப்பார்கள்.

எந்த ஒரு விஷயங்கள் செயல்பாடுகள் இவர்கள் செய்தாலும் அதனை இவர்கள் முழுமையாக முடிக்க மாட்டார்கள்.அவசர அவசரமாக எல்லா விஷயங்களும் செயல்பாடுகளும் இவர்கள் செய்து எந்த ஒரு விஷயத்தையும் செயல்பாடுகளையும் இவர்கள் முடிக்காமல் கடைசி நேரத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

யார் என்ன தவறு செய்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய தைரியங்கள் பக்குவங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும் எதை ஒன்றையும் இவர்கள் வெளிப்படையாக பேசக்கூடிய ஆட்கள்.அநியாயம் அக்கரமங்களை கண்டால் இவர்கள் பொங்கி எழ கூடிய ஆட்கள்.இவர்கள் கண் எதிரே ஒரு அநியாயம் அக்கிரமும் நடக்கிறது என்றால் இவர்கள் என்றைக்குமே அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

யாருக்கு எந்த ஒரு பிரச்சனை கஷ்டம் வந்தாலும் அவர்களுக்கு முதல் ஆளாக சென்று உதவக்கூடிய குணம் இவர்களுக்கு இருக்கும்.
இவர்களிடத்தில் யார் பிரச்சனை கஷ்டம் என்று வந்தாலும் அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யக் கூடியவர்கள் இவர்கள்.எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் பிரச்சனை நடந்தாலும் அதை தட்டிக் கேட்கக் கூடிய ஆட்கள் இவர்கள்தான்.

தர்மம் நியாயம் நேர்மை இவற்றிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான்.நியாயத்திற்காகவும் தர்மத்திற்காகவும் போராடக்கூடிய ஆட்கள் இவர்கள்.இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவே முடியாது யாருக்கும் கட்டுப்பட்டு வாழக்கூடிய அவர்களுக்கு அந்த எண்ணமும் இருக்காது.தன்னுடைய வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்ற ஒரு கொள்கையுடன் இவர்கள் வாழ்பவர்கள்.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருப்பது என்ன நடந்தாலும் அமைதியாகவே இருப்பது போன்ற இவர்களுக்கு குணம் எண்ணம் இருக்கவே இருக்காது.எதையும் இவர்கள் பொறுத்துக் கொள்ளவே
மாட்டார்கள்.இவர்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் சரி அதை இவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.அதிகமாக சுயநலவாதியாக வாழ்வது இவர்களுக்கு பிடிக்காது.
இவர்கள் பெரும்பாலும் பொதுநலவாதியாக தான் வாழ விரும்புவார்கள்.

மேலும் இவர்கள் பிறப்பிலேயே வைராக்கியம் மிக்கவர்கள் வைராக்கியத்தை அதிகமாக கொண்டவர்கள்.இவர்களைப் போன்று வைராக்கியம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.இவர்களை யாராவது ஏமாற்றி விட்டாலோ இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாலோ இவர்களை தேவையில்லாமல் திட்டி விட்டாலோ அவர்களுடன் அவ்வளவுதான் இவர்கள் எப்போதுமே சேர மாட்டார்கள் பேச மாட்டார்கள்.

அவ்வளவு எளிதாக இவர்களை ஏமாற்றியவர்கள் இடத்திலும் நம்பிக்கை துரோகம் செய்தவர் இடத்திலும் இவர்கள் சேர மாட்டார்கள் பேசமாட்டார்கள்.
அவர்களை இவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள் அவர்களுடன் மீண்டும் இவர்கள் அவ்வளவு எளிதாக பழக மாட்டார்கள் சேர மாட்டார்கள்.

இவர்களை யாராவது கேவலப்படுத்தி விட்டாலோ இவர்களே தகாத வார்த்தையில் பேசி விட்டாலோ.அவர்கள் வீட்டிற்கே இவர்கள் செல்வதை நிறுத்தி விடுவார்கள்.மீண்டும் அவர்களை இவர்கள் வாழ்க்கையில் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

இது போன்ற வெட்டி வைராக்கியத்தால் வாழ்க்கையில் நிறைய சொந்தங்களையும் உறவுகளையும் இவர்கள் இழந்திருப்பார்கள்.நிறைய நண்பர்களுடைய ஆதாயங்களும் இவர்கள்இழந்திருப்பார்கள்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் சந்தரப்பங்களையும் இவர்கள் கோட்டை விட்டு இருப்பார்கள் நலுவ விட்டு இருப்பார்கள்.அதேபோன்று இவர்கள் எதிரிகளை கூட இவர்கள் மன்னித்து விட்டு விடுவார்கள் ஆனால் என்றைக்குமே துரோகிகளை இவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
துரோகிகளை இவர்கள் மறக்கவும் மாட்டார்கள்.

இவர்களுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை பழி தீர்க்கும் வரை இவர்கள் விட மாட்டார்கள்.துரோகிகளை பழி தீர்க்க வேண்டும் என்ற வைராக்கியம் என்பது இவர்களுக்கு எப்போதுமே வாழ்க்கையில் இருக்கும்.
இவர்களுக்கு துரோகம் செய்த துரோகிகளை சரியான நேரம் காலம் பார்த்து காத்திருந்து இவர்கள் பழி தீர்ப்பார்கள் இந்த விஷயத்தில் இவர்கள் மிகவும் வல்லவர்கள்
புத்திசாலிகள்.

இவர்கள் எடுக்கின்ற கொள்கை முடிவிலிருந்து என்றைக்குமே இவர்கள் பின்வாங்க மாட்டார்கள்.
ஒரு விஷயத்தில் இவர்கள் ஒரு முடிவை எடுக்கின்றார்கள் என்றால் அந்த முடிவு நல்லதாக இருக்கலாம் கெட்டதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி இவர்கள் எடுத்த அந்த முடிவிலிருந்து இவர்கள் பின்வாங்க மாட்டார்கள் இவர்களால் பின் வாங்கவும் முடியாது.

சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து கொண்ட நபர்கள், பெரிய பணக்காரர்கள், உயர் அதிகாரிகள்
அரசியல்வாதிகள்,செல்வாக்கு மிக்கவர்கள்,இது போன்றவர்களின் தொடர்பு இவர்களுக்கு சாதாரணமாக இருக்கும்.இதுபோன்ற சமுதாயத்தில் பெரிய நபர்களுடன் இவர்கள் நேரடியாக பழகுவார்கள் பேசுவார்கள்.எந்த ஒரு appointment இல்லாமலும் நேரடியாக இவர்கள் அவர்களிடம் சென்று பேசுவார்கள் பழகுவார்கள்.

ஆனால் இது போன்ற நபர்களுடைய தொடர்பு என்னிடம் இருக்கின்றது என்பதை பற்றி இவர்கள் வெளியில் யாரிடத்திலும் இவர்கள் பீற்றிக் கொள்ள மாட்டார்கள் அதை வைத்து இவர்கள் தேவையில்லாமல் scene போட மாட்டார்கள்.

எவ்வளவுதான் இவர்களுக்கு பெரிய ஆட்கள் உடைய பணக்காரர்கள் உடைய தொடர்புகள் பழக்கங்கள் இருந்தாலும் தனக்கு ஒரு உதவி கஷ்டம் பிரச்சனை என்று வந்தால் இவர்கள் அவர்களிடத்தில் சென்று தனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க மாட்டார்கள்.
தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டம் பிரச்சனைகள் இருந்தாலும் அது இவர்களாகவே சமாளித்து விடுவார்கள்.இந்த மன தைரியம் என்பது இவர்களுக்கு எப்போதுமே வாழ்க்கையில் இருக்கும்.

இவர்கள் ஒருவேளை ஆணாக இருந்தாக என்றால் மனைவியும் மனைவியுடைய குடும்ப உறவினர்கள் இவர்களை வைத்து அடிக்கடி தேவையில்லாமல்
இவர்களின் சுயமரியாதைகளை சுய கௌரவங்களை சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.எரிச்சல்களை கோபங்களை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் ஒருவேளை பெண்ணாக இருந்தாக என்றால் கணவரும் கணவருடைய குடும்ப உறவினர்கள் இவர்களை வைத்து அடிக்கடி தேவையில்லாமல் இவர்களின் சுயமரியாதைகளை சுய கௌரவங்களை சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.எரிச்சல்களை கோபங்களை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

மேற்கொண்டு யாரெல்லாம் சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.
No comments:
Post a Comment