மேஷம் ராசி அல்லது மேஷம் லக்னத்தில் பிறந்திருப்பவர்களுக்கு இவர்கள் வாழ்க்கையில் இவர்களுக்கு எந்த மாதிரியான குணங்கள் எண்ணங்கள் பிரச்சனைகள் தர்ம சங்கடங்கள் கஷ்டங்கள்
ஏமாற்றங்கள் இருக்கும் என்பது இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சிலவிதமான எண்ணங்கள் திறமைகள் பிரச்சனைகள் தர்மசங்கடங்கள் கஷ்டங்கள் என்பது இருக்கும்.அதன் வகையில் இந்தப் பதிவில் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் குணங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

யாரெல்லாம் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்திருக்கின்றார்களோ இவர்கள் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி.
இவர்களுக்கு பொதுவாக இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் என்றைக்குமே இவர்களின் திறமை தெளிவு அறிவு
உழைப்பு விவேகம் இது அனைத்தும் இவர்களுக்கு பயன்படாது. அடுத்தவர்களுக்கு தான் பயன்படும்.

என்றைக்குமே இவர்களின் திறமைகள் இவர்களுக்காக இவர்களின் சுயநலத்திற்காக என்று பயன்படுத்த இவர்களால் முடியாது
என்னதான் இவர்கள் அறிவாளியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தாலும் அந்தத் திறமை அறிவு நுணுக்கம் என்பது இவர்களுடைய சுயநலத்திற்காக என்று இவர்களால் பெரிதாக பயன்படுத்த முடியாது.
தன்னுடைய திறமைகளை தனக்காக என்று பயன்படுத்த முடியாமல் இருப்பவர்கள் இவர்கள்தான்.

பலதரப்பட்ட திறமைகள் இவர்களுக்கு இருந்தாலும் அந்த திறமையால் இவர்களுக்கு எந்த ஒரு உபயோகம் இருக்காது.தனக்குத் தெரிந்த ஞானம் அறிவு தெளிவை இவர்கள் என்றைக்குமே மற்றவர்களுக்கு தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்.இவர்களால் நிறைய பேர் மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி சென்று இருப்பார்கள் பயனடைந்து இருப்பார்கள்.

அதேபோன்று தனக்குத்தான் எல்லா விஷயமும் தெரியும் தான்தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களின் பேச்சை அறிவுரையை கேட்காமல் தவறான பாதையில் தவறான முடிவெடுத்து பிறகு அதனால் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சனைகளை இழப்புக்களை கஷ்டங்களை சந்தித்து பிறகு இவர்களாகவே குறிப்பிட்ட காலத்தில் திருந்தி வருவார்கள்.

மேலும் இவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே அடுத்தவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியாகத்தான் இருக்கும்.அதாவது அடுத்தவர்களுக்காக வாழ்வதுதான் வாழ்ந்து கொண்டிருப்பது தான் இவர்களுடைய வாழ்க்கையாக இருக்கும்.அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்கு இவர்களுடைய பங்களிப்பு உதவிகள் அவர்கள் வாழ்க்கையில் மிக அதிகமாக இருக்கும்.

இவர்களுடைய உதவியால் ஆலோசனைகளால் நிறைய பேர் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி சென்றிருப்பார்கள் பயனடைந்து இருப்பார்கள்.நிறைய பேர் வாழ்க்கையில அவர்கள் முன்னேறுவதற்கு இவர்களுடைய பங்களிப்பு என்பது அவர்கள் வாழ்கையில் மிக அதிகமாக இருக்கும்.

இவர்களால் பயனடைந்தவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ பேர் இருப்பார்கள்.இவர்களுடைய உதவிகளையும் ஆலோசனைகளை பெற்று வாழ்க்கையில்
நல்ல முறையில் முன்னேற்றம் வளர்ச்சி அடைந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.எல்லோருக்கும் இவர்கள் ஏணியாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் வாழ்க்கையில் யாருக்கெல்லாம் உதவி செய்கிறார்களோ யாரெல்லாம் இவர்கள் மூலமாக வாழ்க்கையில் முன்னேறி சென்றார்களோ பயனடைந்தர்களோ அவர்களெல்லாம் இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வர மாட்டார்கள்.
அதாவது இவர்கள் யாருக்கெல்லாம் உதவி செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வர மாட்டார்கள்.

இவர்களால் யாரெல்லாம் வாழ்க்கையில் முன்னேற்றம் வளர்ச்சி அடைந்தார்களோ
பயனடைந்தார்களோ அவர்கள் எல்லாம் இவர்கள் செய்த உதவியை நன்றியை மறந்து விடுவார்கள்.
வேலை முடிந்த உடன் இவர்களை எல்லோரும் கலட்டி விட்டு விடுவார்கள்,இவர்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள்,இவர்களை ஏமாற்றி விடுவார்கள்.

அதேபோன்று என்னதான் இவர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்தாலும் இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் யாருமே இவர்களுக்கு உதவி செய்ய ஆலோசனை கொடுக்க அவ்வளவாக யாரும் வர மாட்டார்கள்.
இவர்களை என்றைக்குமே அடுத்தவர்கள் ஏமாற்ற தான் பார்ப்பார்கள்.நிறைய பேர் வாழ்க்கையில் இவர்கள் உதவி செய்து காலமும் நேரமும் இவர்களுக்கு வீணாகி இருக்கும்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதால் இவர்களுக்கு எந்த விதமான பிரயோஜனம் நன்மைகளும் உதவிகளும் அவர்கள் மூலம் இவர்களுக்கு கிடைக்காது
யாருக்கு எந்த உதவி செய்தாலும் இவர்களுக்கு அதனால் எந்த விதமான பயனும் கிடையாது எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது.

கடைசி வரை அடுத்தவர்களால் இவர்களுக்கு ஏமாற்றமும் கஷ்டமும் பிரச்சனைகளும் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் வரும்.துரோகத்தால் அதிகமாக வாழ்க்கையில் வீழ்த்தப்படுபவர்கள் இவர்கள்தான்.
இவர்களைத் தேடி என்றைக்குமே சில பேர் சில கூட்டம் எப்பொழுதுமே இவர்களை சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள்.இவர்களிடம் வேலை வாங்குவதற்கு மட்டுமே.இவர்களிடம் வந்த வேலை காரியம் முடிந்த உடன் இவர்களை அனைவரும் மறந்து விடுவார்கள்.

நிறைய பேர் வாழ்க்கையில் உதவி செய்து அவர்களால் இவர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.மீண்டும் அடுத்தவர்களுக்கு இவர்கள் வாழ்க்கையில் உதவி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

இவர்களுடைய உதவியாளும் ஆலோசனைகளாலும் அடுத்தவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறி சென்று கொண்டிருப்பார்கள்.
பயனடைந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாமல் வாழ்க்கையில் ஒரே நிலைமையில் இருப்பார்கள்.

அதேபோன்று இவர்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான எண்ணங்கள் குணங்கள் என்னவென்றால் இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் வேண்டுமென்றால் அந்த விஷயம் அந்த பொருள் இவர்களுக்கு இப்போதே வேண்டும், இப்போதே செய்ய வேண்டும்,
இப்போதே நாம் அடைந்து விட வேண்டும், இப்போதே நாம் அதை வாங்கி விட வேண்டும்,எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும்.

அது எப்போது என்ற வார்த்தை இவர்கள் வாயில் எப்போதுமே வரும்.
ஒரு பொருளை இவர்கள் வாங்க நினைத்தார்கள் என்றால் அந்தப் பொருளை இவர்கள் உடனடியாக இப்பொழுதே நாம் அதை வாங்கி விட வேண்டும் என்று எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு இருக்கும்.

இவர்கள் வாழ்க்கையில் என்ன ஆசைப்பட்டாலும் அதனை உடனடியாக நாம் அடைந்து விட வேண்டும் என்ற குணங்கள் இவர்களுக்கு இருக்கும்.அது காதலாக இருக்கலாம்,
அது தொழிலாக இருக்கலாம், உத்தியோகத்திற்கு(job) செல்வதாக இருக்கலாம்,ஒரு பொருள் வாங்குவதாக இருக்கலாம்,ஒருவரை அடிப்பதாக இருக்கலாம்,வண்டி வாகனங்கள் வாங்குவதாக இருக்கலாம் எதுவா இருந்தாலும் சரி,

இதுபோன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் அதனை இவர்கள் உடனடியாக இப்பொழுதே நாம் இவற்றை வாங்க வேண்டும் இது போன்ற செயல்களை செய்ய வேண்டும் என்ற குணங்கள் குணங்கள் இவர்களுக்கு இருக்கும்.
எதுவாக இருந்தாலும் சரி தான் ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை ஒரு பொருளை இவர்கள் இப்பொழுதே நாம் இதை வாங்கவேண்டும்,
இப்போது நாம் இதனை அடைய வேண்டும் என்ற குணங்கள் எண்ணங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் இருக்கும்.

மேலும் இவர்களுக்கு அவசரம் ஆத்திரம் ஆக்ரோஷம் ஆவேசம் போன்ற குணங்கள் மிக அதிகமாக இருக்கும்.அவசரத்தாலும் ஆத்திரத்தாலும் ஆவேசத்தாலும் இவர்கள் எடுத்து வைக்கின்ற அல்லது இவர்கள் செய்கின்ற எல்லா விஷயங்களும் செயல்பாடுகளும் கடைசி நேரத்தில் இவர்கள் கோட்டை விட்டு விடுவார்கள் சொதப்பி விடுவார்கள்.தேவையில்லாத அவசரத்தாலும் ஆத்திரத்தாலும் இவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் செயல்பாடுகளில் ஏமாற்றங்களை இழப்புக்களை
பிரச்சனைகளை
அடைந்திருப்பார்கள்.

எந்த ஒரு விஷயங்கள் செயல்பாடுகள் இவர்கள் செய்தாலும் அதனை இவர்கள் முழுமையாக முடிக்க மாட்டார்கள்.அவசர அவசரமாக எல்லா விஷயங்களும் செயல்பாடுகளும் இவர்கள் செய்து எந்த ஒரு விஷயத்தையும் செயல்பாடுகளையும் இவர்கள் முடிக்காமல் கடைசி நேரத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

அவசரம்,ஆத்திரம்,கோபம் ஆக்ரோஷம்,இது போன்ற எண்ணங்கள் குணங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.யாராவது இவர்களை சீண்டினார்கள் என்றால் உடனடியாக இவர்களுக்கு கோவம் வந்துவிடும்.
அதாவது தொட்டவுடன் ஒரு சில நேரங்களில் இவர்களுக்கு கோவம் ஆத்திரம் மிக அதிகமாக வரும்.
சுயமரியாதைக்கு சுய கௌரவத்திற்கு இவர்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் யாராவது இவர்களுடைய சுயமரியாதை சீண்டினார்கள் என்றால் இவர்களுக்கு அது பிடிக்காது.

யார் என்ன தவறு செய்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய தைரியங்கள் பக்குவங்கள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும் எதை ஒன்றையும் இவர்கள் வெளிப்படையாக பேசக்கூடிய ஆட்கள்.அநியாயம் அக்கரமங்களை கண்டால் இவர்கள் பொங்கி எழ கூடிய ஆட்கள்.இவர்கள் கண் எதிரே ஒரு அநியாயம் அக்கிரமும் நடக்கிறது என்றால் இவர்கள் என்றைக்குமே அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

யாருக்கு எந்த ஒரு பிரச்சனை கஷ்டம் வந்தாலும் அவர்களுக்கு முதல் ஆளாக சென்று உதவக்கூடிய குணம் இவர்களுக்கு இருக்கும்.
இவர்களிடத்தில் யார் பிரச்சனை கஷ்டம் என்று வந்தாலும் அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யக் கூடியவர்கள் இவர்கள்.எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் பிரச்சனை நடந்தாலும் அதை தட்டிக் கேட்கக் கூடிய ஆட்கள் இவர்கள்தான்.

தர்மம் நியாயம் நேர்மை இவற்றிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான்.நியாயத்திற்காகவும் தர்மத்திற்காகவும் போராடக்கூடிய ஆட்கள் இவர்கள்.இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவே முடியாது யாருக்கும் கட்டுப்பட்டு வாழக்கூடிய அவர்களுக்கு அந்த எண்ணமும் இருக்காது.தன்னுடைய வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்ற ஒரு கொள்கையுடன் இவர்கள் வாழ்பவர்கள்.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருப்பது என்ன நடந்தாலும் அமைதியாகவே இருப்பது போன்ற இவர்களுக்கு குணம் எண்ணம் இருக்கவே இருக்காது.எதையும் இவர்கள் பொறுத்துக் கொள்ளவே
மாட்டார்கள்.இவர்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் சரி அதை இவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.அதிகமாக சுயநலவாதியாக வாழ்வது இவர்களுக்கு பிடிக்காது.
இவர்கள் பெரும்பாலும் பொதுநலவாதியாக தான் வாழ விரும்புவார்கள்.

இவர்களைப் பற்றி மற்றவர்கள் புரளி பேசினாலும் சர்ச்சைக்குள்ளாகி பேசினாலும் என்றைக்குமே அதனை இவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.தன்னுடைய வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் சந்தித்து சந்தித்து
அதற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி செல்பவர்கள் இவர்கள் தான்.

அதேபோன்று வெளி உலகத்தில் இவர்களை மற்றவர்கள் எப்போதும் கோபக்காரர்கள் ஆத்திரக்காரர்கள் அவசரக்காரர்கள் என்று தான் அழைப்பார்கள் இவர்களை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
எப்போதும் இவர்களை தேவையில்லாமல் சீண்டி கொண்டே இருப்பார்கள்.மற்றவர்கள் இவர்களுக்கு கோபத்தையும் எரிச்சல்களையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.யாரும் இவர்களை சும்மா இருக்க அமைதியா இருக்க சாந்தமாக இருக்க விடவே மாட்டார்கள்.

மேலும் இவர்களுக்கு என்றைக்குமே பொதுவாக ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்,
விளையாட்டு,குழந்தைகளை கவனித்துக் கொள்வது,காதல்,
தாம்பத்தியம் காமம் இது சார்ந்த விஷயங்களுக்கு இவர்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் நேரத்தை செலவிடுவார்கள்.மற்ற விஷயங்களை காட்டிலும் இவர்களுக்கு இது சார்ந்த விஷயங்களில் விருப்பங்கள் ஆசைகள் கற்பனைகள் மிக அதிகமாக இருக்கும்.

அதேபோன்று உத்தியோகம்(job) கடன் பிரச்சனைகள்,சீட்டு ,ஏலம்,நகை அடமானங்கள்,வம்பு,வழக்கு கோர்ட்டு கேஸ் இதுபோன்ற ஏதாவது சில விஷயங்கள் மூலமாகவே இவர்களுக்கு வாழ்க்கையில் தேவையில்லாத கடன் பிரச்சனைகள் வம்பு வழக்கு இழப்புக்கள் தர்ம சங்கடங்கள் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்கள் எந்த உத்தியோகத்திற்கு வேலைக்கு சென்றாலும் அந்த உத்தியோகம் வேலை சார்ந்து
இவர்களுக்கு போட்டிகள் பொறாமைகள் எதிரிகள் சத்துருக்கள் என்பது இருந்து கொண்டே இருப்பார்கள்.இவர்களை வீழ்த்துவதற்கு என்று குறை சொல்வதற்கு என்று சில பேர் சில கூட்டம் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள்.
இவர்களை யாரும் முன்னேற வளர விட மாட்டார்கள்.

மேலும் கடன் பிரச்சனைகள் மூலமாகவே இவர்களுக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் இழப்புக்குள் ஏமாற்றங்கள் சண்டைகள் ஏற்பட இவர்களுக்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்.தேவை இல்லாத வம்பு வழக்கு சண்டைகள் வாக்குவாதங்கள் போன்ற பிரச்சனைகளில் இவர்கள் சிக்க வைப்புக்கு மிக அதிகம்.

மேலும் இவர்கள் "வீடு, வண்டி, வாகனம் ,சொத்து,இது சார்ந்த விஷயங்களை வாங்குவதாக இருந்தாலும் சரி விற்பதாக இருந்தாலும் சரி அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இவர்களுக்கும் ஒரு முறை வரும்போது அதைத் தட்டிக் கழிக்காமல் நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போது வேண்டாம் சில நாட்கள் அல்லது சில காலங்கள் போகட்டும் .
அப்பொழுது விற்றுக் கொள்ளலாம் அல்லது வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள் என்றால் இவர்கள் நினைக்கும் போது இவர்களுக்கு தேவைப்படும்போது இது சார்ந்த விஷயங்களை விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது.அதற்கான சூழ்நிலைகளும் இவர்களுக்கு ஏற்படாமல் போய்விடும்.

மேலும் இவர்களால் வாழ்க்கையில் என்றைக்குமே சும்மா இருக்க முடியாது. ஏதேனும் ஒரு விஷயத்தை செயல்பாடுகளை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.எப்போதும் இவர்களால் சும்மா ஒரு இடத்தில் உட்கார முடியாது.எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.

அதேபோன்று இவர்கள் மூளை எப்போதுமே சும்மா இருக்காது ஏதேனும் ஒரு விஷயங்களை பற்றி இவர்கள் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.ஒரு மூளை என்றைக்குமே வெட்டியாக சும்மா இருக்காது.

இவர்களின் மூளை மிகவும் வேகமாக செயல்படும் வேகமாக சிந்திக்க கூடிய யோசிக்க கூடிய அந்த ஆற்றல் அறிவு இவர்கள் மூளைக்கு மிக அதிகமாக இருக்கும்.எப்பொழுதுமே இவர்கள் வேகமாக செயல்படக் கூடியவர்கள் வேகமாக சிந்திக்கக் கூடியவர்கள்.

அதேபோன்று மனக்குழப்பங்கள் மனஸ்தாபங்கள் மன அழுத்தங்கள் மனவேதனைகள் இவர்களுக்கு எப்போதுமே மிக அதிகமாக இருக்கும்.எப்போதுமே இவர்கள் மனக்குழப்பத்திலேயே மனவேதனைகளிலேயே இருப்பார்கள்.ஒரு நிலையான மனம் நிலையான என்ன ஓட்டங்கள் சிந்தனைகள் எப்போதுமே இவர்களுக்கு இருக்கிறது தேவையில்லாத சிந்தனைகள் மனவேதனைகள் மனக்குழப்பங்கள் மனவலிகள் தான் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

அடுத்தவர்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனை கஷ்டம் துக்கம் என்று வந்தால் இவர்களைப் போன்று அவர்களுக்கு அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாராலும் முடியாது.எப்பேர்பட்ட கஷ்டம் துக்கம் பிரச்சனை கொண்டவர்களுக்கும், இவர்கள் அறிவுரை ஆலோசனைகள் கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு எல்லாம் அந்த கஷ்டம் துக்கம் பிரச்சினை போய்விடும்.

ஆனால் அதே பிரச்சனைகள் அதே கஷ்டம் துக்கம் இவர்களுக்கு வாழ்க்கையில் வந்தால் இவர்களுக்கு யாருமே அறிவுரை சொல்ல ஆலோசனை கொடுக்க யாரும் இவர்களுக்கு முன் வர மாட்டார்கள்.மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்தான்
அதாவது தேவையற்ற மன அழுத்தங்களால் மன குழப்பங்களால் சிந்தனைகளால் இவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பிரச்சனைகள் கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது அதாவது இவர்களுடைய குணங்களை செயல்பாடுகளை எண்ணங்களை யாராலும் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது.
ஒரே மாதிரியான பேச்சுக்கள் எண்ணங்கள் செயல்பாடுகள் இவர்களுக்கு இருக்காது.
தினந்தோறும் இவர்களின் எண்ணங்கள் செயல்பாடுகள் பேச்சுக்கள் மாறிக் கொண்டுதான் இருக்கும்.

இவர்கள் என்றைக்குமே மற்றவர்களைப் போல வாழ விரும்பாதவர்கள் அதாவது செம்மறி ஆடு போன்று வாழக்கூடிய வாழ்க்கை முறைகள் அந்த வாழ்க்கை ,அந்த வாழ்க்கை பயணங்கள் இவர்களுக்கு வாழ பிடிக்காது.தனித்துவமாக செயல்படக்கூடிய சிந்தனைகள் கற்பனையில் யோசனைகள் செயல்பாடுகள் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் மிக அதிகமாக இருக்கும்.மற்றவர்களைப் போன்று நடைமுறை வாழ்க்கை இவர்களுக்கு வாழ பிடிக்காது.

இவர்களால் வாழ்க்கையில் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் அதாவது எந்த ஒரு விஷயத்திலும் இவர்களால் அவ்வளவு எளிதாக ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது.தெளிவான ஒரு முடிவெடுக்க முடியாததுதான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சினை ஆகும்.இவர்களும் தன்னுடைய வாழ்கையில் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் அடுத்தவர்களையும் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தெளிவான முடிவெடுக்க இவர்கள் விட மாட்டார்கள்.

அதேபோன்று இவர்கள் ஆணாக இருந்தார்கள் என்றால் மனைவிக்காகவும் மனைவியுடைய குடும்ப உறவுகளுக்காகவும்
வாழ்க்கையில் இவர்களுக்கு பிடித்த விருப்பப்பட்ட ஆசைப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை இவர்கள் தியாகம் செய்திருப்பார்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள்.மனைவி மற்றும் மனைவியுடைய குடும்ப சொந்தங்களுக்காக எதையாவது ஒரு விஷயத்தை இவர்கள் தியாகம் செய்திருப்பார்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள்.

அதேபோன்று இவர்கள் பெண்ணாக இருந்தார்கள் என்றால் கணவருக்காகவும் கணவருடைய குடும்ப உறவுகளுக்காகவும்
வாழ்க்கையில் இவர்களுக்கு பிடித்த விருப்பப்பட்ட ஆசைப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை இவர்கள் தியாகம் செய்திருப்பார்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள்.கணவர் மற்றும் கணவருடைய குடும்ப சொந்தங்களுக்காக எதையாவது ஒரு விஷயத்தை இவர்கள் தியாகம் செய்திருப்பார்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள்.

அதேபோன்று இவர்களுக்கும் இவர்கள் இளைய சகோதரருக்கும் இளைய சகோதரிக்கும் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் இடையில் நடக்கக்கூடிய செயல்பாடுகள் விஷயங்களை பற்றி என்னிக்குமே நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாது. இவர்களுக்கு இடையில் நடக்கக்கூடிய எந்த ஒரு செயல்பாடு விஷயங்களைப் பற்றி இவர்கள் ஒருவருக்கு சொன்னாலும் அது ஊர் முழுக்க பரவி சர்ச்சைக்குள்ளாகி பிறகு இவர்களுக்கு இடையில் நடக்கக்கூடிய நடந்திருக்கக் கூடிய அனைத்து விதமான விஷயங்களும் செயல்பாடுகளும் தடைகளில் இழப்புகளில் ஏற்பட்டிருக்கும்.

மேற்கொண்டு யாரெல்லாம் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்திப் பாருங்கள் எல்லா மிகச் சரியாக
No comments:
Post a Comment