Monday, 12 January 2026

ஒரு ஜாதகத்தில் களத்திர தோஷத்திற்கான அமைப்புகள்:💫💫


 

ஒரு ஜாதகத்தில் களத்திர தோஷத்திற்கான அமைப்புகள்:💫💫
✨ஒரு ஜாதகத்தில் திருமணம் தொடர்புடைய பாவகங்கள் அதன் அதிபதி ஆகியவைகள் வலுவிழந்தோ, பாவ கிரகங்களால் பாவத்தன்மை அடைந்திருக்கும் நிலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில் குறைபாடுகள் ஆனது இருக்கும்.
✨இதில் களத்திர ஸ்தானம் அதன் அதிபதி மற்றும் காராக கிரகம் இவை யாவும் முழுமையாக வலுவிழந்து பாவத்தன்மையை அடையும் நிலையில், ஜாதகருக்கு திருமணம் சார்ந்த அமைப்பானது முற்றிலுமாக கிடைக்காமல் போய்விடுகின்றது.
✨ஒரு ஜாதகத்தில் திருமணத்தை கூறும் அமைப்பு லக்னத்திற்கு ஏழாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி ஆகும். அதேபோல களத்திரத்திற்கான காரக கிரகமானது சுக்கிரன் ஆவார்.
✨ஒரு ஜாதகத்தில் திருமணம் என்று வரும்போது லக்னத்திற்கு 7ம் பாவகமான களத்திர ஸ்தானம், அதன் அதிபதி,குடும்ப ஸ்தானமாகிய 2ம் பாவகம் அதன் அதிபதி,புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் மற்றும் அதன் அதிபதி, களத்திர காரகன் சுக்கிரன்,புத்திர காரகன் குரு இவை அனைத்தையும் ஆராய்ந்து பலன் கூற வேண்டும்.
✨ ஜாதகத்தில் கணவன் மற்றும் மனைவியை குறிக்கும் 7ம் பாவகம் அதன் அதிபதி பாவத்துவம் அடைந்து கெடும் பொழுது, ஒருவருக்கு திருப்தியான மன வாழ்க்கை அமைவதில்லை. மேலும் ஏழாம் பாவமானது காமஸ்தானம் ஆகும்.
✨ஜாதகத்தில் சுக்கிரன் முழுவதுமாக நீசம் போன்ற அமைப்பில் வலுவிழக்கும் நிலையில் ஜாதகருக்கு திருமணம் சார்ந்த வகையில் கட்டாயமாக குறைபாடுகள் என்பது இருக்கும், சுக்ரன் ஆனவர் களத்திர காரகன் மட்டுமல்லாமல் காமத்திற்கும் அதிபதியாவார்.
✨எனவே இவர் கடுமையான கடுமையான அமைப்பினில் பாவத்தன்மையை அடைந்து கெடுவதோ, அல்லது நீசம் போன்ற அமைப்பினில் முழுவதுமாக வலுவிழந்து இருக்கும்பொழுது பாவத்தன்மையினையும் அடையும் பொழுது, திருமணம் மற்றும் காமம் போன்றவைகள் மறுக்கப்படும்.
✨களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதி பாவத்தன்மை அடையும் நிலையிலும் அல்லது ஏழாம் அதிபதி நீசம் போன்ற அமைப்பில் வலு குறைந்து, ஏழாம் பாவகத்தில் பாவ கிரகங்கள் இருப்பது திருமணம் சார்ந்த வகையில் குறைகளை ஏற்படுத்தும்.
✨ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் வலுப்பெற்று சுப தன்மையை அடைந்து வலுப்பெற்று இருக்கும் நிலையில், ஏழாம் பாவகத்தில் பாவ கிரக தொடர்புடன், ஏழாம் பாவகம் பாவத்தன்மை அடையும் நிலையில் திருமண சார்ந்த வகையில் தடையோ அல்லது திருமண வாழ்க்கையில் குறைபாடுகளோ இருக்கும்.
✨சுக்கிரன் சுபத்தன்மையுடன் வலுப்பெற்று ஏழாம் பாவக அதிபதியும் சுபத்தன்மை அடைந்து வலுவாக இருக்கும் நிலையில், ஏழாம் பாவகத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து ஏழாம் பாவகம் பாவத்தன்மை அடைந்து இருக்கும் பொழுது, குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாகமும், பாவ கிரகங்களின் தொடர்பினால் பாவத்தன்மை அடையும்போது தசாபுத்திக்கு ஏற்றவாறு குடும்பம் அமைவதில் சிக்கல்கள் ஆனது அல்லது குறையானது இருக்கும்.
✨ஏழாம் பாவகம் சுபத்தன்மையடைந்து வலுவாக இருக்கும் நிலையில், சுக்கிரனும், ஏழாம் பாவக அதிபதி கெடும் நிலையில், திருமண வாழ்வில் குறைபாடுகள் ஆனது இருக்கும்.
✨ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி, குரு போன்றவைகள் பாவத்தன்மை அடைந்து இருக்கும் நிலையில், வலுவான புத்திர தோஷ அமைப்பிலும் திருமண தடைகள் ஆனது தசா புத்திக்கு ஏற்றவாறு இருக்கும்.
✨ஜாதகத்தில் ஏழாம் பாவகம், ஏழாம் அதிபதி, சுக்கிரன் போன்றவர் வலுப்பெற்று இருந்தாலும், அந்த ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி, வலுவான பாவ கிரக தொடர்பினால் கெட்டு இருக்கும் நிலையிலும், குடும்பஸ்தானமான இரண்டாம் பாகமும், அதன் அதிபதியும் வலுவான பாவ கிரக தொடர்பினால் பாவத்தன்மை அடையும் பொழுதும், திருமணம் அமைவதில் பிரச்சனைகள் இருக்கும்.
✨ஒரு ஜாதகத்தில் காம திரி கோணங்கள் எனப்படும் மூன்றாம் பாவம், ஏழாம் பாவம், பதினொன்றாம் பாவம் போன்றவைகள் பாவ கிரகங்களால் பாவத்தன்மை அடைந்திருக்கும் நிலையிலும், அதன் அதிபதிகள் வலு குறைந்து பாவ கிரக தொடர்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இதனுடன் சுக்கிரனும் நீசம் போன்ற அமைப்பில் வலுவிழுந்து இருக்கும்பொழுது காமம் மறுக்கப்படும் அமைப்பினில் தசா புத்திகளுக்கு ஏற்றார் போல திருமணம் தொடர்பான சிக்கல்கள் ஆனது இருக்கும்.
✨ஜாதகத்தில் ஏழாம் பாவகம், ஏழாம் அதிபதி, சுக்கிரன் போன்ற கிரகங்கள் வலுப்பெற்று இருக்கும் நிலையில், இரண்டாம் பாவகம், பாவ கிரக தொடர்பினை பெற்று பலவீனமடையும் நிலையிலும், இரண்டாம் அதிபதி பாவ கிரகங்களால் பாவத்தன்மை அடையும் நிலையிலும், அல்லது நீசம் போன்ற வகையில் வலுவிழக்கும் பொழுதும், அந்த பாவக கிரகங்கள் தொடர்பான தசா புத்தி காலங்களில் திருமணம் ஆகி இருந்தாலும் அவர்களை வேலை காரணமாகவும் மற்ற அமைப்புகளுக்காகவோ பிரிந்து இருக்கும் கூடிய சூழ்நிலை ஏற்படும்
✨ஏழாம் பாவகம், ஏழாம் அதிபதி பாவ கிரக தொடர்பினால் பாவத்தன்மை அடைந்திருக்கும் நிலையிலும், களத்திர காரக கிரகமான சுக்கிரன் ஆனவர் வலுவிழந்து, பாவ கிரக தொடர்பினால் பாவத்தன்மை அடைந்திருக்கும் பொழுதும், புத்திர ஸ்தானமான ஐந்தாம் பாவகம், ஐந்தாம் பாவக அதிபதி பாவத்தன்மை அடைந்து பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இத்துடன் குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாகமும், அதன் அதிபதியும் பாதிக்கப்படும்போது திருமணம் ஆனது முற்றிலமாக மறுக்கப்படும் நிலையினை தரும்

No comments:

Post a Comment

இரவில் தூக்கம் வரவில்லையா?

 கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு வீட்டிற்கு செ...