Monday, 12 January 2026

ஜாதகத்தில் #சூரியனால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் மாறுவதற்கும் பரிகாரங்கள்...*

 *ஜாதகத்தில் #சூரியனால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் மாறுவதற்கும், #சூரிய_தோஷம் நிவர்த்தி ஆகவும் செய்ய வேண்டிய
பரிகாரங்கள்...*

*இந்த பரிகாரத்தை செய்ய உகந்த நேரம் ஞாயிற்றுக் கிழமை நண் பகல் 12.00 மணி...*
வீட்டில் பூஜையறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து கோதுமையால் செய்த சப்பாத்தி அல்லது அல்வா பிரசாதம் வைத்து மற்றும் செந்தாமரை மலர் 108 அல்லது கனகாம்பர மலர்(இரத்த சிவப்பு நிறம்) 108 அல்லது தாமரை பூக்களின் இதழ்கள் 108 கொண்டு சூரிய அஷ்டோத்திரம் சொல்லி,
சூரிய பகவானுக்கு பிடித்த இலுப்பை எண்ணெய் தீபத்தை கிழக்கு நோக்கி 6 எண்ணிக்கையில் ஏற்றவும்.
6 ஞாயிற்றுக் கிழமைகள் மேற்படி அஷ்டோத்திரம் படித்து கோதுமையில் செய்த பண்டமாகிய அல்வா அல்லது சப்பாத்தி அல்லது வேறு ஏதேனும் ஒரு கோதுமைப் பண்டம் படைத்து வணங்கிவர சூரிய பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கி சுப பலன் கிட்டும்.
இந்த பரிகாரத்தை முடிந்தவர்கள் தங்கள் அருகில் சூரியன் ஸ்தலம் இருந்தால் அங்கு செய்யலாம். இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
அர்ச்சனை முடிந்த பின்னர் ஒரு தாமிரத் தட்டில் கோதுமையை பரப்பி அதற்கு கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும்.
பிரத்யதி தேவதையாகிய ஸ்ரீருத்ரனையும் அதிதேவதையாகிய அக்னி பகவானையும் வணங்கி பின்னர் உஷா , பிரதியஷா சமேத சூரிய பகவானை வழிபட வேண்டும்.
அகத்திய முனிவரால் ராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்ட ஆதித்ய ஹிருதயம் படிக்கலாம்.
தினமும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு 1 நாழிகை முன்பு சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை பயக்கும்.
ஞாயிற்று கிழமை சிவாலய தரிசனம் , தினமும் இடுப்பளவு நீரில் நின்று அதிகாலை சூரிய வழிபாடு செய்வது சிறப்பு.
தினமும் படுக்கும் போது கைப்பிடி அளவு கோதுமையை தலையனைக்கு அடியில் வைத்து உறங்கி அதிகாலை எழுந்ததும் அந்த கோதுமையை காகத்திற்கு உணவாக கொடுக்கலாம். இவ்வாறு 9 நாட்கள் தொடர்ந்து செய்து பின்னர் சிவாலயம் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட சுபம் ஏற்படும்.
சிவன் கோவில் வாசலில் கன்றுடன் கூடிய காராம்பசு , மாணிக்கம் , பொன் , செம்பு , சிகப்பு துணி , கோதுமை போன்றவற்றில் ஏதேனும் முடிந்ததை தானம் செய்யலாம்.
சிவ தரிசனம் செய்தபின் கோவிலில் கிழக்கு நோக்கி அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்து விட்டு வரவும்.
அன்னாபிஷேக அலங்காரம், வில்வ அர்ச்சனை , பழவகை அபிஷேகம் , விபூதி அபிஷேகம் போன்றவை சிவனுக்கு மிகவும் பிரியமானது ஆகும்.

No comments:

Post a Comment

காலபைரவர் கவசம்

 காலபைரவர் கவசம் பற்றிய பதிவுகள் காலபைரவர் கவசத்தை தேய்பிறை அஷ்டமி, சனி கிழமை, மார்கழி மாதம் அல்லது தினமும் பாராயணம் செய்யலாம். தியானம் கால ...