பனிக் காலத்தில் காதின் வாயிலாக குளிர் இறங்கி உடலைக் குளிர்ச்சி ஆக்குகிறது
இதைத் தடுக்க நமது உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது
மிகவும் உன்னிப்பாக கவனித்து மருத்துவம் செய்தல் வேண்டும்
ஏனெனில் குளிரும் வெப்பமும் ஒரே நபருக்கு ஒரே நாளில் ஏறி இறங்கும்
இந்த காலத்தில் தோசைக்கல்லில் சுடப்பட்ட உணவு | பிரியாணி போன்ற தம் செய்யப்பட்ட உணவு குடலில் உள்ள நீரை உறிஞ்சி சோர்வு மற்றும் பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
எப்போது சிறுநீர் கழித்தாலும் அவசியம் உடனே சிறிதளவேனும் சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீர் பருகுங்கள்.
இது உடலை வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது என்று தண்ணீர் குறைவாக குடிப்பவர்களுக்கு (#Kidney_Stone )#சிறுநீரகக்_கல் | நரம்புத்தளர்ச்சி | மலச்சிக்கல் | அதீத சிந்தனை மற்றும் இரவு நேரம் அதிகம் கண் விழிக்கும் ஆண்களுக்கு எழுச்சியின்மை எனப்படும் #Erectile dysfunction ஏற்படும் (உடனே கவனித்து விடுங்க இல்ல னா சில மாதங்களில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்) | இரத்த ஓட்டம் குறையும்
மிதமான யோகா போன்ற உடற் பயிற்சி | பிராணாயாமம் | மூட்டுக்களை அசைத்தல் போன்ற ஏதாவது செய்ய வேண்டும்.
இக்காலத்தில் மயிர்க்கால்கள் சுருங்கி இருக்கும் ஆகையால் தான் உடல் சூடு அதிகரிக்கும் இதனால் தோல் வியாதிகள் அதிகரிக்கும் ஆதலால் வியர்வை வரும் வகையில் ஏதேனும் வேலை, நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது நலம்.
உங்கள் பகுதியில் விளைந்த நீர்க் காய்கறிகளை மிளகு தூக்கலாக சூப் பதத்தில் உண்பது அல்லது கிடைக்கும் நீர்க் காய்கறிகளை உண்ணுங்கள் சிறுநீரகம் பாதுகாக்ப்படும்.
குளிர்ச்சி அதிகமாகி கைக் கால் நடுக்கம் ஏற்படுபவர்கள் காதை போர்த்திய படி முண்டாசு | Muffler Scarf போன்ற ஏதாவது கட்டி காதில் பனி இறங்குவதை குறைக்க வேண்டும்.
#Camp_fire வீட்டில் செய்ய இயலும் என்றால் செய்ங்க அது இயலாதவர்கள்
#Hot_Bag ல் சுடுதண்ணீர் ஊற்றி வைத்தால் சில மணி நேரங்கள் அதில் அந்த சூடு இருக்கும். அதை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வைப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியில் இருந்து பாதுக்காக்க இயலும் (ஒரு நாளில் இரண்டு முறை வைத்தல் நலம்)
அசைவம் சாப்பிடுபவர்கள் நண்டு சூப் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் சுக்கு மல்லி தேநீர் மற்றும் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் சூப் ரொம்ப ரொம்ப பெஸ்ட்.
தசையில் உள்ள நீர்ச்சத்து குறைந்து வலி ஏற்படும்.
நுரையீரலில் உள்ள நீர்ச்சத்து வறண்டு வறட்டு இருமல் ஏற்படும்.
குடலில் வறட்சி ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்படும்.
இதே காலத்தில் தான் இயற்கை நமக்கு கொழுப்பு மிகுந்த #வேர்க்கடலை (#மல்லாட்டை) கொடுத்துள்ளது
அதனால தினமும் ஏதாவது ஒரு வேளை உணவாக பச்சையாக வேர்க்கடலை சாப்பிடுங்க (காலை சாப்பிடுவது சிறந்தது)
பனியால் ஏற்படும் பாதிப்பு குறையும்
உடலில் தேங்காய் எண்ணெய் உருக்கி தேய்த்துக் கொள்ளுங்கள் சூரிய ஒளி மிகும் சில மணி நேரங்கள் (காலை) சூரிய ஒளியில் வெறும் காலில் நில்லுங்கள்.
இதே காலத்தில் தான் உடலை சரி செய்யவும் இயலும்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சுக்கு மிட்டாய் | தூதுவளை மிட்டாய் மற்றும் பனங்கற்கண்டு பயன்படுத்தி வந்தால் தொண்டையில் கபம் கட்டுதல் நீங்கும்.
No comments:
Post a Comment