Monday, 12 January 2026

*அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும்.*


 *அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும்.*

கேள்வி:
எண்ணங்களாலே எண்ணங்களை நிறுத்த முடியவில்லை, என்ன செய்வது?
பதில்:
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்
எண்ணத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். - வேதாத்திரி மகரிஷி
எண்ணத்திற்கு நாம் எண்ணத்தையே காவலாக வைக்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி
உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ள ஒருவருக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. அவருக்கு ஜாங்கிரி என்றால் மிகவும் பிடிக்கும். அப்போது அந்த எண்ணத்தை அடக்க முயல்வதை விட அந்த எண்ணத்தை அறிய முற்பட வேண்டும்.
எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. நான் ஜாங்கிரி சாப்பிட எண்ணுகிறேன்.
நான் இப்பொழுது ஜாங்கிரியைச் சாப்பிட்டால் எனது சர்க்கரை அளவு கூடிவிடும். அதனால் பல்வேறு பிரச்சனைகள் விளையும் என்று அந்த எண்ணத்திற்கு விடை கொடுத்தால், எண்ணத்தினால் விளையும் தீமையை கண்டு எண்ணம் தானே அடங்கிவிடும் மனம் அமைதி அடையும்.
இதற்கு எண்ணம் ஆராய்தல் அகத்தாய்வு என்று பெயர்.
எண்ணமானது ஆறு விதங்களில் வரலாம்.
தேவை - பசியினால் அருகிலிருக்கும் காபிக் கடைக்குச் சென்று காபி அருந்துவது.
சூழ்நிலை - பிரபல காபிக் கடையை கடக்கும் போது பசியில்லாத போதும் அங்கு காபி ருசியாக இருக்கும் என்று கருதி காபி அருந்துவது.
பழக்கம் - பழக்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பசி இல்லாத போதும் காபி அருந்துவது.
பிறர் மனத் தூண்டுதல் - பசி இல்லாத போதும் நண்பன் இங்கு காபி நன்றாக இருக்கும் என்று கூறுவதனால் காபி அருந்துவது.
கருவமைப்பு - கருவமைப்பின் காரணமாக காபியின் மீது பற்று கொண்டிருப்பது. அவ்வப்போது காப்பியருந்துவது.
தெய்வீகம் - குளம் வெட்டுவது, நூலகம் அமைப்பது போன்ற தெய்வீக எண்ணங்கள்.
தெய்வீகத்தால் வரும் எண்ணங்கள் எப்பொழுதும் நல்ல எண்ணங்களாக இருக்கும். எண்ணங்கள் எழும்போது அவற்றை ஆராய்ந்து நல்ல எண்ணங்களுக்கு படிகட்டி, கெட்ட எண்ணங்களை வடிகட்ட வேண்டும். தேவையால் விளைந்த எண்ணங்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும். அவற்றிற்கும் கூட விளைவு நன்மையானால் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
எண்ணமே வாழ்க்கையின் சிற்பி -வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment

கலசத்தை #பூஜிப்பது #ஏன்

 *கலசம் என்பது என்ன?* மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் க...