Monday, 12 January 2026

விசுத்தி சக்கரமும் வர்ம புள்ளிகளும்,


 விசுத்தி சக்கரமும் வர்ம புள்ளிகளும்,

அதனால் வரும் பாதிப்புக்களும்
ஒரு மனிதனை முன்னிலைப்படுத்துவது விசுத்தி சக்கரம் என்றThroat சக்கரம். மனித உடலில் ஆறு முக்கிய சக்கரங்கள் உள்ளன. இது கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ளது. தைராய்டு Thyroid உறுப்புடன் தொடர்புடையது.
இது பாதிக்கப்பட்டால் 500க்கு மேற்பட்ட வியாதிகள் வரும். மனிதனின் குரல், ஒலி பேச்சு நடவடிக்கைகள் புரிந்து கொள்ளும் தன்மை கேட்கும் திறன், சுவாசித்தல், மக்கள் கூட்டங்களில் தன்னை வெளிப்படுத்துவது, செயல்படுவது, தலைமை பண்பு, தைரியம், செயல்திறன், வேகம், விவேகம், போன்றவற்றோடு தொடர்புடையது. அதோடு மட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவுகளை தொண்டையிலிருந்து சுத்தப்படுத்தி இரைப்பைக்கு அனுப்புகிறது. இந்த தொண்டை பகுதியை சித்தர்கள் நீல நிறத்தோடு தொடர்புடையதாக சுவடிகளில் கூறியுள்ளனர்.
விசுத்தி என்ற இந்த தொண்டை சக்கரம் நுரையீரல், இரண்டு கைகள், கழுத்து, எலும்புகள், கண், காது, மூக்கு, நாக்கு, குரல் எழுப்பும் குரல்வளை கருவி ஆகியவற்றோடு மிகுந்த தொடர்புடையது. இந்த விசுத்தி சக்கரம் பாதிக்கப்பட்டால் இதனோடு தொடர்புடைய 13 வர்ம புள்ளிகள் (vital points) பாதிப்பு அடைந்து விடும்.
அந்த வர்ம புள்ளிகள் வருமாறு;
சுமை வர்மம், தும்மி காலம், சங்குதிரி வர்மம், இறங்கு வர்மம், கொக்கி வர்மம், தொண்டை வர்மம்,
சிறிய காகட்டை காலம், பெரிய காகட்டை காலம், முடிச்சு வர்மம், ஆராட்ச்சி வர்மம், பிடரி வர்மம், கொண்டை நரம்பு வர்மம், கண்ணு தள்ளி வர்மம் ஆகிய 13 வர்ம புள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்புகளின் காரணமாக கழுத்து வலி தோள்பட்டை வலி முதுகு வலி நெஞ்சு வலி பின் தலைவலி உள்ளிட்ட பல்வேறு விதமான பாதிப்புகள் அடைகின்றன. மனக்குழப்பம், செயல்திறன் இன்மை, சோம்பல், பொதுமக்கள் மத்தியில் கூச்சம், உண்மை இன்மை, பொய் பேசுதல், கபட நாடகம், போன்ற மன குணங்களும் ஏற்படும்.
விசுத்தி பாதிக்கப்பட்டவர்கள் வசிய தன்மை குறைந்தவர்களாகவும், பிறரை கவரும் சக்தி குறைந்த மனிதர்களாகவும் காணப்படுவார்கள். இதேபோல் இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை உளவியல் பிரச்சனைகள் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு.
இதுபோன்ற வர்ம பாதிப்புகளை யோகத்தில் தேர்ச்சி பெற்ற வர்ம ஆசான்கள் நோய் பாதிப்புகளை துல்லியமாக கண்டறிந்து அதற்கான வர்ம பரிகாரங்களை செய்து தட்டுதல், தடவுதல், நீவுதல், இழுத்துவிட மசாஜ் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான விதிகளை கடைபிடித்து பாதிக்கப்பட்டவருக்கு முழு நிவாரணம் வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
நன்றி: வர்ம ஆசான் ஜி அவர்களின் வர்ம குறிப்புகளில் இருந்து.

No comments:

Post a Comment

காலபைரவர் கவசம்

 காலபைரவர் கவசம் பற்றிய பதிவுகள் காலபைரவர் கவசத்தை தேய்பிறை அஷ்டமி, சனி கிழமை, மார்கழி மாதம் அல்லது தினமும் பாராயணம் செய்யலாம். தியானம் கால ...