இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லக்கூடாது. 60 முதல் 90 நிமிடங்கள் கழிந்த பின்னர் தூங்கச் சென்றால் தான் நன்றாக தூக்கம் வரும். இடைப்பட்ட நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சிறிது மனம் விட்டு பேசுங்கள். அன்றைய சுவாரஸ்சிய சம்பவங்களை பேசி மகிழுங்கள். இதனால் மனமும் அமைதியாக இருக்கும். தூக்கமும் நன்றாக வரும்.
விடியும் வரை தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுவதால் ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும்.
இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது.
மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வரும்.

No comments:
Post a Comment