
நாம் பிறந்தது முதலே கடவுள்களுக்கு பூக்களை வைத்து வழிபடுவதை பார்த்து
கொண்டு இருக்கிறோம். ஆனால் எதற்காக பூக்களை வைத்து வழிபடுகிறோம் என்று
இதுவரை நாம் சிந்தித்து பார்த்திருக்க மாட்டோம்.
நமது பெற்றோர்களை கேட்டால் அவர்களுக்கும் இதற்கு பதில் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. ஏனெனில் கடவுளுக்கு பூக்களை வைத்து வழிபடுவது என்பது
யுகங்களை கடந்தும் இருக்கும் ஒரு பழக்கமாகும்.
வேதங்களிலும் கடவுளுக்கு புஷ்பாஞ்சலி என்ற பெயரில் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
இந்து வழிபாட்டு முறைகளில் பூக்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எதற்காக என்றே தெரியாமல் இந்த பழக்கம் நம் சமூகத்தின் ஒரு அங்கமாக
மாறிவிட்டது.கடவுளுக்கு பூக்களை வைத்து வழிபடுவதற்கான காரணங்கள் :
பூக்கள் கடவுளுக்கு வைத்து வழிபடுவதற்கான முதல் காரணம் அவை அழகானவை என்பதுதான். அழகானவை என்பதையும் தாண்டி அவை தூய்மையானவை.
பூக்களை கொண்டு கடவுளை வழிபடும்போது கடவுளின் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
பூக்கள் ஒரு இடத்தின் சூழ்நிலையை சுகந்தமானதாக மாற்றக்கூடும்.
அமைதியாகவும், அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும் இது உங்கள்
இல்லத்திற்கு கடவுளை அழைத்துவரும்.
பூஜை என்பதில் முதலில் இருக்கும் பூ என்னும் எழுத்து பூக்களை
குறிப்பதாகும். பூக்களை தவிர்த்து கடவுளுக்கு பூஜை என்பது அர்த்தமில்லாத
ஒன்றாகும்.
ஒரு பூஜையை முழுமை பெற வைப்பது என்பது அதில் வைக்கப்படும் பூக்கள்தான்.
ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு மலரை விரும்புபவராக இருப்பார்கள். வேதங்களில்
குறிப்பிட்டுள்ளபடி நல்ல மண்ணில் விளைந்த, நறுமணம் மிக்க மலர்களை மட்டுமே
கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்த வேண்டும்.
காட்டில் வளர்ந்த பூக்களையோ அல்லது முட்கள் இருக்கும் பூக்களையோ
கடவுளுக்கு வைத்து வழிபடக்கூடாது, இது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.
கடவுளுக்கு பூக்களை வைத்து வழிபடுவது என்பது கடவுள் மீது நமக்கு இருக்கும்
பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும். இவ்வாறு வைத்து வழிபடுவது
நமது ஆன்மாவின் ஒருபகுதியை கடவுளுக்கு கொடுப்பது போன்றதாகும்.
வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி பூக்கள் சாத்வ, ராஜ மற்றும் தாம என்று மூன்று வகைப்படும்.
அவற்றின் வடிவம், வண்ணம் மற்றும் நறுமணம் கொண்டு பூக்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.
சாத்வ மற்றும் ராஜ மலர்களை கடவுளுக்கு தினமும் வைத்து வழிபடலாம். ஆனால்,
தாம மலர்களை சிறப்பான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
அரளி, மல்லிகை, பவள மல்லி, வெள்ளை தாமரை போன்றவை சாத்வ மலர்களாகும். இவற்றை தினமும் கூட கடவுளுக்கு வைத்து வழிபடலாம்.
ஊதுகொம்பு பூ, வெள்ளை நிற மலர்கள், முள் இல்லாத ரோஜா, சிவப்பு தாமரை போன்றவை ராஜ மலர்கள் வகையை சேர்ந்தவையாகும்.
புற்கள், சீன ரோஜா, பருத்தி மலர், கேதகை மலர் போன்றவை தாம வகையை
சேர்ந்தவையாகும். இந்த மலர்களை அதற்குரிய நாட்களில் மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.
No comments:
Post a Comment