Saturday, 10 January 2026

துர்க்கை அம்மன்..


 துர்க்கை அம்மன்..

========
செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமை முக்கியமான நாட்கள். அதுவும் ராகுகாலம், எம கண்டத்தில் துர்க்கா பூஜை விசேஷமானது என்று சொல்வார்கள். அது போல், ஞாயிறு மாலை ராகு காலத்திலும் துர்க்கைக்கு செய்யப்படும் பூஜை விசேஷமானது.
*இராகு தோஷம் போக்கும் வழிபடும் முறைகள் பற்றிய பதிவுகள் 😘
*சர்ப்ப கிரகங்களான இராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.*
*ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் இராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் இராகு வழிபடும் நேரம் "இராகு காலம்" என்றும், கேது வழிபடும் நேரம் "எமகண்டம்" என்றும் அழைக்கப்படுகிறது.*
*இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, இராகு காலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகின்றது.*
*அதே சமயம் இராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.*
*செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் இராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை ‘'மங்கள சண்டிகையாக'’ வணங்குவர்.*
*செவ்வாய் மற்றும் இராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ இராகுகால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் , மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும்.*
*துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும்.*
*வாரத்தில் அனைத்து நாட்களுமே இராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.*
*செவ்வாய்க்கிழமை இராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.*
*வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். கணவன் மற்றும் மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.*
*ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.*
🙏

No comments:

Post a Comment

கடவுள் எங்கே இருக்கிறார்?...

 குட்டி கதை..... ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கி...